sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

உலக வங்கியிடம் கடன் கேட்பரோ?

/

உலக வங்கியிடம் கடன் கேட்பரோ?

உலக வங்கியிடம் கடன் கேட்பரோ?

உலக வங்கியிடம் கடன் கேட்பரோ?

5


PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.கதிர்வேல், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், தலைநகர் புதுடில்லியில் பிரதமர்மோடியை சந்தித்து, பல கோரிக்கைகளை வைத்துவிட்டு, திரும்பியுள்ளார்.

அவற்றில் முக்கியமாக, 'தேசிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ள, மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை என் பதை காரணம் காட்டி, மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. இதனால், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் இருக்கிறோம். மத்திய அரசு, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதியுதவி செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து விட்டு வந்திருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கை என்பது, சமீபத்தில் தான் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம். அந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். அதேபோல, அந்த மும்மொழி கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே, தி.மு.க., எதிர்த்தபடி தான் உள்ளது.

இத்தனை ஆண்டு காலமும் மும்மொழி கொள்கையை எதிர்த்துக் கொண்டிருந்து, பள்ளி ஆசிரியர்களுக்கு எப்படி மாதாமாதம் சம்பளம் வழங்கி கொண்டிருந்தீர்கள்?

கடந்த, 75 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், தி.மு.க., ஆட்சி காலத்திலும் வராத நிதி நெருக்கடி, திடீரென்று 2024ம் ஆண்டு உதயமானது எப்படி? திராவிட மாடல் அரசிடம், கார் ரேஸ் நடத்த பணம் இருக்கிறது; குடும்பத்தோடு அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் சுற்றுலா செல்ல பணம் இருக்கிறது...

நாடு முழுதும் கருணாநிதி சிலைகள் நிறுவவும், கலைஞர் நுாலகம் அமைக்கவும்பணம் குவிந்து கிடக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க அரசு கஜானாவில் நிதி இல்லையா?

இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த எந்த அரசாவது, ஆசிரியர்களுக்கு சம்பளம்கொடுக்க நிதி இல்லை என்று துண்டை விரித்துக் கொண்டு நின்றிருக்கிறதா? ஒருவேளை இதுதான் அந்த திராவிட மாடலோ?

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, மத்தியஅரசிடம் நிதியுதவி கேட்டாயிற்று. அடுத்து, அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க, உலக வங்கியிடம் கடன் கேட்பரோ என்னவோ?



இனி ஒன் தேர்தல் ஒன் சண்டை!


சத்தியமூர்த்தி ராமானுஜம்,சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பார்லி., மற்றும் சட்டசபைகளுக்குஒரு, 'கட் ஆப்' தேதி வரப்போகிறது. ஒரே நாளில், பார்லி.,யும், சட்டசபைகளும்காலியாகிவிடும்.

இடையில் மாநில அரசோ,மத்திய அரசோ கவிழ்ந்து போனால், அவற்றுக்குதேர்தல் நடக்கும். ஆனால்புதிய மத்திய அரசோ, மாநில அரசோ, தேர்தலுக்குப்பின் மிச்சமிருக்கும் நாட்கள் மட்டுமே அரசாட்சி செய்யும்.நான்கரை ஆண்டுகளில் கவிழ்ந்தால், ஆறு மாதம்வரை காபந்து சர்க்கார் நடந்து, பின் தேர்தல் நடக்கும்.

இந்த முடிவால் முக்கியமாக...

 தேர்தல் செலவு குறையும்

 ஒரே தேர்தலை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்படலாம்

 கவிழும் அபாயம் இருப்பதால் கட்சி தாவல் குறையலாம், அதிகரிக்கவும் செய்யலாம். ஏனெனில், ஐந்து ஆண்டு களுக்கென செலவு செய்து மூன்று ஆண்டில் கவிழ்ந்தால், மீண்டும் அதே அளவு செலவு; ஆனால் ஒன்றே முக்கால் ஆண்டு தான் ஆட்சி என்றாகி விடுமே!

 தேர்தலுக்காக கட்சி கள் செய்யும் செலவுகள் குறைந்து ஊழலும் குறையும். இரண்டு தேர்தல்களும், ஒரே செலவில் முடிந்து விடுமே!

 வயதான, தேக ஆரோக்கி யம் இல்லாத தலைவர்கள் இரண்டு முறை பிரசாரம் போக வேண்டாம்

 நடைபயணங்கள் ஒன்று போதும்

 சமூக வலைதளங்களில், 'ஒன் தேர்தல் ஒன் சண்டை' என்றாகி, அத னால் சாந்தி நிலவலாம்.

இப்போதைக்கு கேபினட்அப்ரூவல் தான். இன்னும் பல தப்படிகள் எடுக்க வேண்டும். அதிலும், தேர்தல் கமிஷன் செய்ய வேண்டிய வேலை, வரையறைகள் ஏராளம்.

ஆனால், திருமங்கலம் பார்முலா மக்களுக்கும், எலக்ஷன் செலவுகளால் சம்பாதிக்கும் தொழில்களுக்கும் சரிவு தான் இனி.

ஓட்டுப் பதிவு இயந்திரம் தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் வீழ்ச்சி அடையும். வியாபாரம் குறையும் அல்லவா!

ஆனால்... ஆனால்... ஒரு மாதத்திற்கு மேல் தேர்தலை இழுத்தடித்தால், பொறுமை போய்விடும்; அதை, தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்வது நல்லது!



சிரத்தையுடன் பாதுகாக்க வேண் டும்!


ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி,செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் குத்தகைதாரர்களிடமிருந்து மீட்கப்பட்ட பின், மொத்தமுள்ள, 160 ஏக்கர் நிலத்தில், புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள, 118 ஏக்கர் நிலத்தில் பசுமைப் பூங்கா அமைக்க, அரசு முடிவெடுத்துஇருப்பது பாராட்டுக்குரியது!

சம்பந்தப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறை, மண்ணுக்கேற்ற மர வகைகளைத் தேர்வு செய்வதுடன், அவை மக்களுக்கும் பயன் நல்குமா என்பதை ஆராய்ந்து, வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்னரே நடுவதுடன், அவை விரைந்து வளரவும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

மாநிலத்தில் எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உள்ளனவோ அங்கெல்லாம்,பூங்காக்கள் அமைப்பதை அரசு ஒரு கொள்கை முடிவாக எடுத்து செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில், வீடுகளை ஒட்டிக் காடுகளும், காடுகளையொட்டி வீடுகளும் உள்ளன. எனவே தான், அங்கெல்லாம் சீதோஷ்ணம் சீராக உள்ளது.

அரசு அமைக்கும் பூங்காக்களை, மக்களாகிய நாம் சிரத்தையுடன் பாதுகாக்கவேண்டும். நம் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மை இதுவென்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.



ரயில்வேயை பாதுகாப்போம்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய ரயில்வே, உலகின் மிகப் பெரிய போக்குவரத்துக் கழகங்களில் ஒன்று; கோடானகோடி மக்கள் அதில், தினமும் பயணம் செய்கின்றனர்.

சரக்குப் போக்குவரத்தையும் கனகச்சிதமாக செய்து வருகிறது ரயில்வே; நாட்டின் பொருளாதாரத்தில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பா.ஜ., ஆட்சியில், நவீன வசதிகளுடன், உலகத்தரம் வாய்ந்த தேஜஸ், வந்தே பாரத் போன்ற அதி விரைவு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; விரைவில் புல்லட் ரயில்களும்வர உள்ளன.

ரயில் நிலையங்கள், பிளாட்பார்ம்கள் முன்பை விட சுத்தமாக, சுகாதாரமாக,காட்சியளிக்கின்றன; ஏழை,எளிய, நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பயணிக்கும் போக்குவரத்தாக இந்திய ரயில்வே திகழ்கிறது.

சமீப காலங்களில், சில தேச விரோத சக்திகள், விஷமிகள், ரயில்கள் மீது கல்லெறிவது, கண்ணாடிகளை சேதப்படுத்துவது, ரயில் தண்டவாளங்களில் கம்பிகள், பாறைகள், உருளைகள், வெடி பொருட்களை வைத்தல்,தண்டவாளங்களை இணைக்கும் திருகாணிகளை கழட்டி விடுதல் போன்ற துரோகச் செயல்களை அடிக்கடி செய்து வருகின்றனர்.

இவர்களின் நோக்கம்,விபத்துக்களை ஏற்படுத்தி,உயிரிழப்புகளை ஏற்படுத்தி,ரயில்வேக்கும், மத்திய அரசுக்கும் அவப் பெயர் பெற்றுத்தர வேண்டும், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதே.

ரயில்வே ஊழியர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்; நமக்கும், ரயில்வேயை பாதுகாக்கும் பொறுப்பு உண்டு!








      Dinamalar
      Follow us