/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பா.ஜ., யாருக்கு கடிதம் அனுப்புவது?
/
பா.ஜ., யாருக்கு கடிதம் அனுப்புவது?
PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

எம்.கணேசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தங்களுக்கு தெரிந்த ஒரு ஜோதிடரிடம் கர்ப்பிணியர் வந்து, தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும்எனக் கேட்டால், 'ஆண் குழந்தை' என்று சொன்னால், ஒரு துண்டு சீட்டில், 'பெண் குழந்தை' என்றும், 'பெண் குழந்தை' என்று சொன்னால், ஒரு துண்டு சீட்டில், 'ஆண் குழந்தை' என்றும் எழுதி வைத்துக் கொள்வாராம்.
அவர் சொன்னபடி ஆண் குழந்தைக்கு மாறாக பெண் குழந்தை பிறந்து, ஆரூடம்கேட்டவர்கள் வந்து கேட்டால், தான்ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி, நான் அப்போதே 'பெண் குழந்தை என்று தான் சொன்னேன்'என்பாராம். கேட்டவர்கள் வாயடைத்து போவர்.
தேர்தல்களின்போது நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளும் அது போன்றதுதான்.கருத்துக் கணிப்பாளர்களிடம் சொன்னதுபோலவே ஓட்டளித்திருக்க வேண்டும்என்று எந்த சட்டமும் கிடையாது. இந்த புரிதல்கூட இல்லாமல், மத்திய காங்கிரஸ் அரசில் பலர் அமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.
'ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் முற்றிலும் கள நிலவரத்துக்கு எதிராக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்பது சாத்தியமில்லை' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளாராம். இந்த ஜெய்ராம் ரமேஷ், காமெடி பண்ணுவதில் ராகுலுக்கு அடுத்த ஸ்தானத்தில் அமர்ந்திருப்பவர்.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி,49 தொகுதிகளிலும், பா.ஜ., 29 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் மீதமுள்ள இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து370ஐ மத்திய அரசு விலக்கிக் கொண்டபின் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில்மத்தியில் ஆளும் பா.ஜ., வெறும், 29 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது.
நியாயமாகப் பார்த்தால், மொத்தமுள்ள, 90 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும், ஷேக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆட்சிக் காலத்தில், மக்கள் பட்ட இன்னல்களை அவ்வளவு சுலபமாக மறந்து, மீண்டும் அவர்களுக்கு ஓட்டளித்திருப்பரா? ஆனால், அவர்களது கூட்டணி, 49 தொகுதிகளில் வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
அப்படியெனில், ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று பா.ஜ.,வும் கூற, அவர்களுக்கும் உரிமை உண்டல்லவா? பா.ஜ., யாருக்கு கடிதம் அனுப்புவது? தேர்தல் ஆணையத்துக்கா அல்லது ஐ.நா., சபைக்கா?
சிறையில் இருப்பவர் எல்லாம் தியாகச் செம்மலா?
என்.வைகைவளவன்,
மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: கொலைகள்
செய்தவர்களும்,பிறரது சொத்துக்களைகொள்ளை அடித்தவர்களும் சிறையில்
இருக்கின்றனர்; மக்களின் குறைகளைப் போக்க அரசை எதிர்த்து போராட்டம்
நடத்தியவர்களும் சிறையில் இருக்கின்றனர்; லஞ்சம் வாங்கியவர்களும் சிறையில்
இருக்கின்றனர்.
சிறைவாசம் அனுபவித்தகாரணத்திற்காக, இவர்கள் அனைவரையும், தியாகம்செய்தவர்கள் என்று சொல்லி விட முடியுமா என்ன!
கருப்பின
மக்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை நீக்கப் போராடிய, தென் ஆப்ரிக்க தலைவர்
நெல்சன் மண்டேலா, பல ஆண்டுகள் சிறைவாசம்அனுபவித்தார்; அது தியாகம்!
பலரது
பணத்தைக் களவாடி, ஏமாற்றிய குற்றத்திற்காக சிறை
வாசம்அனுபவித்தவர்கள்எல்லாம் தியாகச் செம்மல்என்றால், மண்டேலா,
காந்திபோன்றோரின் வாழ்க்கையின்அர்த்தம் தான் என்ன!
மக்களை முட்டாள் ஆக்கி விட்டனர்!
லதா
சந்திரன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: கடந்த
நுாற்றாண்டில்நம் பாரத திருநாடு சுதந்திரம்பெற வேண்டி, நம் தலைவர்கள் செய்த
உயிர்த்தியாகங்களும், அனுபவித்தபெரும் கொடுமைகளும், நடத்திய பெரும்
போராட்டங்களும் எல்லாரும் அறிந்ததே.
குறிப்பாக,
தமிழகத்தில்சுப்பிரமணிய சிவா, வ.உ.சி.,போன்ற எண்ணற்ற பெரும்தலைவர்கள் செய்த
அரும்பெரும் தியாகத்தால்சுடர் விட்டது சுதந்திரம் எனலாம்.
தன்
சொத்துக்களை விற்றுகப்பல் வாங்கிவிட்டு, அன்னியரை கதி கலங்கச் செய்தவர்,
வ.உ.சிதம்பரம்பிள்ளை. இவர் கைது செய்யப்பட்ட போது திருநெல்வேலியும்,
துாத்துக்குடியும் கலவரபூமியானது. மக்கள் கிளர்ச்சியால், அன்னிய அரசு
அதிர்ந்து போனதாம்.
வ.உ.சி., விடுதலையானபோது, அவரை வரவேற்க,அவருடைய
மனைவி,சுப்பிரமணிய சிவா, சுவாமிவள்ளிநாயகம் ஆகிய மூவர் மட்டுமே சிறை
வாயிலில் நின்றனர். அந்த மாமனிதருக்கு தமிழகம் காட்டிய நன்றி இதுதான்.
இப்படியாக, கடந்த காலத்தை கண்ணீர் மல்க நினைவூட்டியது சமீபத்தியநிகழ்வு.
சில
தினங்களுக்கு முன்சிறை மீண்ட ஒருவர், ஜாமினில் வெளிவந்ததற்கேசிறை வாசலில்
கூடிய கூட்டமும், கொண்டாட்டமும்காணப் பொறுக்கவில்லை.அவரை முதல்வரும்,
முக்கியஅமைச்சர்களும் பாராட்டுவதும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும்
அவலத்தின் உச்சம்.
இப்படி நடக்கும் என்பதுநமக்கெல்லாம் தெரியும்
என்றாலும், அவருக்குமீண்டும் அமைச்சர் பொறுப்பும் கொடுத்து, ஆட்சியில் அமர
வைத்துஇருப்பதைப் பார்த்தால், ஜனநாயக நாட்டில் நம்மைஎல்லாம் முட்டாளாக்கி
சிரிப்பது போல் இருக்கிறது.
அந்தக் காலம் தொட்டு, தற்போது வரை
அரசியலுக்குவந்த எத்தனையோ நல்லவர்களை இந்த தமிழகம்ஆதரிக்கவில்லை.
துடிப்புடன் செயல்பட்டவரையும்,'அரசியலை நன்றாக படித்து விட்டு வா' என்று
அனுப்பி விட்டோம். ஓட்டு போடுவதோடு நம் கடமை முடிந்து விட்டதா என்ன? அந்த
அண்ணாமலையார் தான் நமக்கெல்லாம் நல்வழி காட்ட வேண்டும்.
இந்த நுாற்றாண்டு தி.மு.க., குடும்பம் கையில் தமிழகம்!
ஆர்.வித்யாசாகர்,
அருப்புக்கோட்டையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: எதிர்பார்த்தது
போல துணை முதல்வர் ஆகிவிட்டார் உதயநிதி. அடுத்த சட்டசபை தேர்தலில் முதல்வர்
வேட்பாளர் இவர்தான்.
தங்க ஸ்பூனுடன் பிறந்தவருக்கு, இவ்வளவு வேக
வளர்ச்சி. 2019ல், தி.மு.க., இளைஞரணி செயலராக நியமிக்கப்பட்டு, 2024ல் துணை
முதல்வராகிவிட்டார்.
இவரது தந்தையாவது, 1982 முதல் இளைஞரணி செயலராக வலம் வந்து, 1989ல் எம்.எல்.ஏ.,வாக ஆகி, 2006ல் தான் அமைச்சராகும் வாய்ப்பே கிடைத்தது.
தன்
மகனுக்காக துணை முதல்வர் என்ற பதவியை,2009ல் உருவாக்கினார் கருணாநிதி;
அதாவது, எம்.எல்.ஏ.,வாகி, 20 ஆண்டுகளுக்குப் பின்தான்,துணை முதல்வர்
பதவியேகிடைத்தது ஸ்டாலினுக்கு.
இவர் மகனோ, கட்சிப் பதவி ஏற்று, ஐந்தே ஆண்டுகளில் துணை முதல்வர் ஆகி விட்டார்.
தந்தை உதயநிதி துணைமுதல்வர் ஆன உடன், மகன் இன்பநிதி, அறிவாலயத்தில் ஆய்வு செய்ய கிளம்பி விட்டார்.
இந்த நுாற்றாண்டில், தமிழகம் தி.மு.க.,வின் ஒரேஒரு தலையாய குடும்பத்தின்கையில் என்பதுதான், 'லேட்டஸ்ட்' செய்தி!