PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

சி.ஏ.கே.கல்யாண சுந்தரராஜன், நிதி மேலாளர், மஸ்கட், ஓமன் நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, 'என்ன பட்ஜெட் இது? தமிழகத்திற்கான அறிவிப்பு ஒன்றுமே இல்லை; தனிநபர் வருமானத்திற்கு, 12 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை என்று சொன்ன நிதியமைச்சர், அதன்பின் வரி விகிதத்தையும் சொல்கிறாரே' என, சில அதிமேதாவிகள் பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளனர்.
இவர்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்...
குறிப்பிட்ட சில மாநிலம் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் தவிர, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும், அனைத்து மாநில மக்களுக்கும் உரித்தானதே அன்றி; தனியொரு மாநிலத்திற்கு மட்டுமானது அல்ல!
தனிநபரின் வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால், வருமானவரி இல்லை; அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ஆனதுதான் அட்டவணை வரி விகிதங்கள்!
இதனால் பலன் பெறப்போவது, இந்தியா முழுதும் உள்ள நடுத்தர வர்க்க மக்கள்; இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா என தனிப்பட்ட பாகுபாடு இல்லை!
இதன் காரணமாக, மத்திய அரசின் வருவாய் இழப்பாக கணக்கிடப்பட்டுள்ள 1 லட்சம் கோடி ரூபாய் வெளிச்சந்தையில் சேமிப்பாகவோ, செலவாகவோ இனி புழக்கத்திற்கு வரும்!
அதனால் பயனடைவதும் நடுத்தர மற்றும் ஏழை மக்களே!
இந்த சுழற்சி கூட புரியாதவர்கள், பட்ஜெட் பற்றி வாய் திறக்கலாமா?
குறுந்தொழில் முனைவோருக்கு, அவரவர் தேவைக்கேற்ப, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட உள்ளது.
இதனால் பயனடைய போவதும், தொழில் விருத்தியடைய போவதும் அம்பானியோ, அதானியோ அல்ல; நம் ஊர் குப்பன், சுப்பன் உட்பட, காஷ்மீரில் உள்ள மனந்திருந்திய இளைஞர்கள்!
அத்துடன், முதன்முறையாகத் தொழில் துவங்குவோருக்கு, அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை கடன்; இதில் பயனடைவோர் அனைத்து மாநில பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்!
இவைதவிர, அடித்தட்டு மக்களுக்கான காப்பீடு, சாலையோர வியாபாரிகளுக்கான நலத்திட்டங்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் முனைவோருக்கான முதலீட்டுத் தொகை அதிகரிப்பு, மொத்த விற்பனைக் கணக்குக்கான அளவீட்டு உயர்வு மற்றும் கடன் வசதிகள் அதிகரிப்பு என பற்பல அறிவிப்புகள்!
இவையெல்லாம், எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, நாட்டின் பொருளாதார குறியீடுகளை உயர்த்துவதற்கான இலக்குகளே அன்றி, இங்கிருக்கும் கிணற்று தவளைகள் கூறுவதைப் போல், குறிப்பிட்ட மாநிலங்களுக்கான பட்ஜெட் இல்லை!
சகிப்புத்தன்மையே சனாதனம்!
எஸ்.ஆர்.த்ராவிட்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமய சார்பின்மை என்று
வாய் கிழிய பேசி வரும், தி.மு.க.,வின் உதவியுடன், திருப்பரங்குன்றத்தில்
தேவையில்லாமல் தீயை வைத்துள்ளனர், சில மத அடிப்படைவாதிகள்.
பெரும்பான்மை
ஹிந்துக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி தி.மு.க., - எம்.எல்.ஏ.,
அப்துல் சமீது, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி என்ற இரு மக்கள்
பிரதிநிதிகளும், தாங்கள் சார்ந்த மதத்தின் சார்பாக அங்கு சென்று, மத
அடிப்படை உணர்வுகளை துாண்டி விட்டுள்ளனர்.
இதேபோல், ஒரு பா.ஜ., -
எம்.பி., செய்திருந்தால், மதச்சார்பு என்று கூக்குரல் போட்டிருப்பர்;
அதற்கு, ஜனநாயகத்தின் நான்காவது துாண் என்று பெரிதாக சொல்லிக் கொள்ளும்
ஊடகங்களும் மேளம் அடித்திருக்கும்!
இன்று, மதவாதத்தை துாண்டி விடும்
இதுபோன்ற செயல்களை கண்டும், ஆட்சியாளர்களும், ஜனநாயக துாண்களும் கண்மூடி
துாங்கிக் கொண்டிருக்கின்றன!
இதே ஒரு மசூதி அருகில், பன்றி மாமிசக் கடை போட்டாலோ, அருகில் பன்றி மாமிசம் சாப்பிட்டாலோ சும்மா இருப்பரா?
ஆனால், எங்கெங்கு கோவில்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் திட்டமிட்டே, பிரியாணிக் கடை, கறிக்கடை போடுகின்றனர்.
அப்போதும், அதை பெருந்தன்மையுடன், கடந்து சென்று விடுகின்றனர், ஹிந்துக்கள்!
இந்த சகிப்புத்தன்மை, சனாதன தர்மத்தினால், ஹிந்துக்களின் ரத்தத்தில் ஊறியது; 'என் மதத்தை வணங்குகிறேன்; மற்ற மதத்தை மதிக்கிறேன்'
- இதுதான் ஹிந்துக்களின் சனாதனம்.
அந்த பெருந்தன்மைக்கு கிடைத்த பரிசுதான் திருப்பரங்குன்றத்தில் நடந்த அத்துமீறல்கள்!
இதற்கு
காரணமானவர் களையும், அவர்களை ஊக் குவிக்கும் அமைப்புகளையும் இப்போதும்
மன்னிக்கிறோம்; மன்னிப்பு தான் மிகப் பெரிய தண்டனை; அதுவே, சனாதன
தர்மத்தின் கோட்பாடு!
கட்டுப்பாடான சுதந்திரமே வேண்டும்!
சி.ஆ.ஸ்ரீனிவாச
ஷர்மா, அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்க
அதிபராக டிரம்ப் பதவி ஏற்று, ஒரு வாரம் முடிந்து விட்டது. அதற்குள், அவர்
எடுத்துக் கொண்ட, 100 நாட்கள் திட்டம் அமெரிக்காவையும், உலக நாடுகளை யும்
உலுக்கி வருகிறது.
கனடா மற்றும் மெக்சிகோ நாட்டு கொள்கையை
வெளியிட்ட கையுடன், பாலஸ்தீன மக்கள், எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற
நாட்டில் குடியேற வேண்டும் -என்று கூறியுள்ளது, அரபு மக்களை உலுக்கி உள்ளது
என்றால் மிகையாகாது.
மேலும், குருத்வாரா, சர்ச் மற்றும்
மசூதிகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் கணக்கு எடுக்கப்பட்டு, அவர்களது
நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதுகுறித்து, நம்
நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் மற்றும் அவர்கள் சார்ந்த என்.ஜி.ஓ.,
நிறுவனங்கள் கருத்து கூறாமல், அமைதியாக இருக்கின்றனவே... என்ன காரணம்?
தடையில்லாமல் தொடர்ந்து நிதி உதவி வர வேண்டுமே!
இஸ்ரேல்
நாட்டிற்கு எதிராக, இங்கு போராட்டம் நடத்திய கூட்டம், கட்சிகள், இன்று
அமெரிக்க அதிபருக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த முடியவில்லை!
டிரம்ப் செயல்கள் அதிரடியாக இருந்தாலும், அது அந்நாட்டின் பாதுகாப்புக்கு, உயர்வுக்கு வழி செய்பவை.
நம்
நாட்டிலும், சட்ட விரோதமாக தங்கி, நாட்டிற்கு எதிராக சதி வேலை செய்வோரை
களை எடுக்க வேண்டும். ஏற்கனவே, பா.ஜ., அரசு பல ஆயிரம் போலி ஆதார்
கார்டுகள், லட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகளை களைந்து எடுத்து விட்டது.
அதன்
வாயிலாக, நாட்டின் நிதி நிலையை சீர் செய்தது. இன்னும் போலி பிரஜைகள், தேச
விரோதிகள், நாட்டில் இருந்து கொண்டு தேசத்திற்கு எதிராக வேலை செய்து
வருகின்றனர்.
மே.வங்கம், கேரளா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களில், பல வெளிநாட்டு மக்கள் குடியேறி உள்ளனர்.
நம்
நாடு, பல ஆண்டுகளாக அகதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. அவர்கள்
இப்பொழுது குறுகிய நோக்கு கொண்ட அரசியல்வாதிகளால், அகதி கள் வாக்கு
வங்கியாக மாற்றப்படுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்
நாடுகளில், கட்டுப்பாடற்ற மக்கள் குடியேற்றத்தால், இப்பொழுது தீவிரவாதம்,
மற்றும் மதம் சார்ந்த வன்முறைகள் தீ போல் பரவி, நாட்டை சீர்குலைத்து
வருகிறது.
கட்டுப்பாடான சுதந்திரம் மட்டுமே நாட்டையும், வீட்டையும் காக்கும்; இதை நம் நாட்டு அரசியல்வாதிகள் உணர வேண்டும்!