PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என்னை, பிரதமர் அளவுக்கு உயர்த்தாமல், துணை முதல்வர் அளவில் குறைத்து மதிப்பிடுசெய்கின்றனர்' என்று ரொம்ப தான் வேதனைப் பட்டுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்!
தனித்து நின்று ஒரு தொகுதியில், எம்.பி.,ஆக முடியாத திருமாவுக்கு வந்துள்ள ஆசையைப் பாருங்கள்...
தி.மு.க., தயவில் வண்டி ஓடும்போதே, இவ்வளவு பேராசையா?
ஒரு பொதுத் தொகுதியில், திருமாவளவனால்தனித்து நின்று எம்.எல்.ஏ., ஆக முடியுமா?
இதில் பிரதமர் கனவா? காலக் கொடுமை!
பிரதமர் அளவுக்கு திருமாவளவனை உயர்த்த அப்படி என்ன தகுதிகள்இருக்கின்றனவாம்?
சாதாரண எம்.பி., ஆவதற்கே தி.மு.க., தலைமை சொல்வதற்கு எல்லாம், 'ஆமாம் சாமி' போட வேண்டி உள்ளது.
இவரை எல்லாம் துணை முதல்வர் அந்தஸ்த்தில் வைத்து பேசுவதே கொஞ்சம் அதிகப்படி தான்!
தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலினே,'என் தகுதி எனக்கு தெரியும்' என்று பிரதமர்ஆசையை வளர்த்துக் கொள்ளவில்லை.
இதில், ஒரு நாலு எம்.எல்.ஏ., வை வைத்துக்கொண்டு திருமா செய்யும்அலப்பறை தாங்க முடியல!
'உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்து ஆக முடியாது!' என்பதை திருமா புரிந்து, தன் கற்பனை உலகில் இருந்து, நிதர்சனத்திற்கு திரும்புவது நல்லது!
lll
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
ஆர்.சுப்பு,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்:'மூத்த அமைச்சர்களுக்கு
துணை முதல்வர் பதவி வழங்காமல்,உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி
வழங்கியதுஏன்?' என்று, கேள்வி எழுப்பி இருந்தார், பா.ம.க.,தலைவர் அன்புமணி.
இது குறித்து, பத்திரிகையாளர்கள் நீர்வளத்துறை அமைச்சர்
துரைமுருகனிடம்கேட்டபோது, கையெடுத்துகும்பிடு போட்டு விட்டு நடையை கட்டி
விட்டார்.
அந்த கும்பிடுக்கு என்ன அர்த்தம்?
'ஐயா சாமி...
வாயப் புடுங்காதீங்க... எனக்கு வயசாகிப் போச்சு. நான்,'கம்'ன்னு இருந்தால்
தான்,எம்.பி., யாக இருக்கும் என் மகன் கதிர் ஆனந்த் என் இடத்திற்கு வர
முடியும்.விபரம் புரியாமல் கேள்வி கேட்க வந்துட்டீங்களே...'என்பது தான்
அந்த,'கும்பிடு'க்குள் ஒளிந்திருக்கும், 'மைண்ட்' வாய்ஸ்!
இது, பத்திரிகையாளர்களுக்கும் புரியும்; அதைப்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கும் புரியும்!
தி.மு.க.,
மூத்த தலைவர்களான, டி.ஆர்.பாலு, துரைமுருகன், நேரு, பொன்முடி போன்றோர்
துணை முதல்வர் பதவி கேட்டு எப்படி போர்க்கொடி துாக்குவர்?
அவர்களின் மகன்கள் அமைச்சர்களாகவும், எம்.பி.,க்களாகவும் உலா வருகையில், நாக்கை சுழற்றி கேள்வி கேட்டு விட முடியுமா?
இது
ஒருபுறம் என்றால், அன்புமணியின் கேள்விக்கு,'பா.ம.க.,வில் மூத்த தலைவர்களை
எல்லாம் விட்டு விட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்... பா.ம.க.,வில் வேறு
எவருமே அன்புமணி அளவுக்கு உழைக்கவில்லையா?' என்று எதிர் கேள்வி
கேட்டுள்ளார், போக்குவரத்து துறை அமைச்சர், சிவசங்கர்.
'யோக்கியன் வர்றான்;சொம்பை எடுத்து ஒளித்துவை' என்பது போல் இருக்கிறது, இவர்களின் கேள்விகளும், பதில்களும்!
அமைச்சர்
அவர்களே...அன்புமணியிடம் நீங்கள் கேட்கும் அதே கேள்வியை தான்,
எதிர்க்கட்சியினரும், மக்களும் கேட்கின்றனர்... 'தி.மு.க.,வில் மூத்த
தலைவர்கள் பலர் இருக்க, நேற்றுஎம்.எல்.ஏ., ஆன ஒருவர்,அமைச்சராகி, இன்று
துணை முதல்வராகி உள்ளாரே... உதயநிதி அளவுக்கு, தி.மு.க.,வில் வேறு எவரும்
கட்சிக்காக உழைக்கவில்லையா?' என்று!
'அதிகாரம் தி.மு.க., முதல்
குடும்பத்திடம் மட்டுமேகுவிந்து இருக்க வேண்டும்;அமைச்சர்கள், எம்.பி., -
எம்.எல்.ஏ.,க்கள் குறுநில மன்னர்களாக கோலோச்ச வேண்டும். கடைக்கோடிஉடன்
பிறப்புகள், காலம்முழுதும் பல்லக்கு துாக்கும்அடிமைகளாக இருக்க வேண்டும்.
இதுதான், தி.மு.க.,வின் அரசியல் சமூக நீதி...' என்று சொல்லி விட்டுப் போங்களேன்!
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! இதில் எந்த மட்டை நல்ல மட்டை?
lll
காப்பாற்ற ஏன் முன் வரவில்லை?
எம்.பழனிவாசன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது,
மாபாதக கொடுமைஎன்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
குற்றவாளி கடுமையாக
தண்டிக்கப்பட வேண்டும்;ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் அதற்கு
வாய்ப்பில்லை என்பது, கருவில் இருக்கும் சிசு கூட நன்கு அறியும்; ஆகவே,
அதை கடந்து போவோம்!
அக்குற்றத்தில் இன்னும்யார்
சம்பந்தப்பட்டுள்ளனர்என்பதைக் கண்டறிய, அரசு தான் தீவிரம் காட்ட வேண்டும்.
அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது, ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில்
மக்களுக்குநன்கு உணர்த்தப்பட்டு விட்டது; ஆகவே, அதுபற்றி பேசிப்
பயன்இல்லை; எனவே, இதையும் கடந்து விடுவோம்!
ஆனால், மாணவியின்
புகார்படி, அப்பெண்ணின்காதலன், ஞானசேகரன் எனும் குற்றவாளியால்
மிரட்டப்பட்டு, அவனுடையதாக்குதலுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலிருந்து
விரட்டப்பட்டுள்ளான் என்று பத்திரிகைகளில் செய்திவெளியாகி உள்ளது.
இங்கு தான் பல சந்தேகங்கள் எழுகின்றன...
குற்றவாளி விரட்டியதும், அவ்விடத்தை விட்டு காதலன் உடனே போய் விட்டானா... அப்படியெனில்அவன் எங்கே போனான்?
அவன் ஏன் தன்நண்பர்கள் அல்லது கல்லுாரி காவலர், விடுதி வார்டன், போலீசாருக்கு தகவல் சொல்லி, தன் காதலியை காப்பாற்ற முன் வரவில்லை?
இந்த நவீன யுகத்தில் வாட்ஸாப் தகவல் ஒன்று போதுமே... அனைவரிடமும் விஷயத்தை எளிதில் தெரிவிக்க!
அப்படி இருந்தும், நடந்த சம்பவத்தை பிறருக்கு தெரிவிக்க அவன்ஏன் முன்வரவில்லை?
தான் காதலித்த பெண்ஆபத்தில் இருப்பதை அறிந்தும், அவன் மவுனமாக இருந்த மர்மத்திற்கு காரணம் என்ன?
எந்த சக்தி அவனை பயமுறுத்தியது அல்லது எது அவன் வாயைக்கட்டிப் போட்டது?
போலீசார்
குற்றவாளியைதேடியபோது, அவன் ஏன்உண்மையைச் சொல்ல முன்வரவில்லை அல்லதுகாதலன்
என்பதேஅப்பெண்ணை வைத்து போலீசார் உருவாக்கிய கட்டுக் கதையா?
இப்படி
பல கேள்விகள்பொதுமக்களிடம் தொக்கி நிற்கிறதே... எல்லாவற்றுக் கும் சப்பைக்
கட்டுகட்டும் சட்ட அமைச்சரும், காவல் துறை கமிஷனரும் இதற்கு விளக்கம்
அளிப்பரா?
lll