sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பச்சோந்தியே பிச்சை கேட்கும்!

/

பச்சோந்தியே பிச்சை கேட்கும்!

பச்சோந்தியே பிச்சை கேட்கும்!

பச்சோந்தியே பிச்சை கேட்கும்!

3


PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.கே.முத்தையா, விருதுநகரில் இருந்து எழுதுகிறார்: 'பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பில்லை; தினமும் கொடுமைகள் நடக்கின்றன. எங்கும் ஜாதி அராஜகம், திராவிடக் கட்சிகளின் ஆட்டம், 50 ஆண்டுகளாக தொடர்கின்றன... ஈ.வெ.ரா.,வின் கொள்கை கைவிடப்பட்டுள்ளது'

- இப்படி அடுக்கடுக்காக குற்றம் சொல்லிஇருப்பவர், எவராவது ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்று எண்ணி விட வேண்டாம்!

தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் தான் இவ்வாறு கூறியுள்ளார்.

திராவிட மாடல் அரசு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. இப்போது கூப்பாடு போடும் இவர், இவ்வளவு நாளும் ஆழ்ந்த துாக்கத்திலாஇருந்தார்...

உச்ச நீதிமன்றம் போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளுக்கு தீர்வு தரஆணையிட்டும், அதை அமல்படுத்த மறுக்கிறது அரசு. அது குறித்து என்றாவது பாலகிருஷ்ணன் பேசியுள்ளாரா?

தி.மு.க., அரசில் நான்கு ஆண்டுகளாக சொகுசாக பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, இப்போது திடீரென்று, நேற்று தான் இப்பிரச்னைகள் எல்லாம் உதித்தது போன்று, கூப்பாடு போடும் இவரது கடமை உணர்ச்சியை நினைத்தால் புல்லரிக்கிறது!

தி.மு.க., ஆட்சியில், ஈ.வெ.ரா., கொள்கை இல்லை என்று மிகவும் வருத்தப்படுகிறார்... அதை, இன்று தான் தோழர் உணர்ந்தாரா?

தினமும் அமைச்சர்கள் நெற்றியில் பொட்டு,கழுத்தில் ருத்திராட்ச மாலை, விபூதி தரித்து கோட்டைக்கு வருகின்றனரே... கடந்த நான்கு ஆண்டுகளில் தோழரின் கண்களுக்குஅது தெரியவே இல்லையா?

பட்டியலின மக்களுக்கு தினம் தினம் கொடுமையாம்...

நான்கு ஆண்டுகளாக அதற்காக என்ன செய்தார்?

ஒரு நாகரிக சமுதாயம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு, வேங்கை வயலில்,பட்டியலின மக்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டதே... அப்போது, தோழர் தோள் கொடுத்து நின்றாரா... இல்லை அதற்காக குரல் தான் கொடுத்தாரா?

இப்போது என்ன திடீரென்று அக்கறை?

ஓ... 2026 சட்டசபை தேர்தலுக்கு இப்போதே ஒத்திகையா?

நேரத்துக்கு ஏற்ப நிறம் மாறுவதில் பச்சோந்தி கூட உங்களிடம் பிச்சை கேட்க வேண்டும்!



அவசரப்பட்டு விட்டாரா அண் ணாமலை?


எஸ்.சுப்பிரமணி, கோவையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாண்டவர்கள் சூதாட்டத்தில் பாஞ்சாலியை வைத்து தோற்றதன் காரணமாக, அவளை, தன் தொடையில் வந்து அமருமாறு அழைப்பு விடுத்தான் துரியோதனன்.

'எந்த தொடையை தட்டிநீ என்னை அழைத்தாயோ, அந்த தொடையை பிளந்து,அதில் வரும் ரத்தத்தை அள்ளி எண்ணெயாக தேய்க்கும் வரை, கூந்தலை முடிய மாட்டேன்...' என்றது பாஞ்சாலி சபதம்!

விருந்து மண்டபத்தில் விருந்துண்ண அமர்ந்திருந்த சாணக்கியரை, நந்தர்கள் அவமதித்து, எழுப்பி, வெளியே தள்ளியபோது,அவிழ்ந்த தன் குடுமியைக்காட்டி, 'நந்த வம்சத்தினரைபூண்டோடு ஒழித்துக்கட்டும்வரை, அவிழ்ந்த குடுமியைமுடிந்துகொள்ள மாட்டேன்'என்றது சாணக்கிய சபதம்.

பாரசீக துாதுவர் முன் ஆட மறுத்த சிவகாமியை, ஆட வைப்பதற்காக, தான் பிடித்து வந்த பல்லவ நாட்டினரை, சிவகாமியின் முன் கொடுமைப்படுத்தினான் சாளுக்கிய மன்னன்.

இதனால் மனம் வெதும்பிய சிவகாமி, 'என்காதலர் நரசிம்ம பல்லவர், இவ்வாதாபி நகரத்தை தீக்கிரையாக்கி, என்னை மீட்டுச் செல்லும் வரை, நான் இந்நகரை விட்டு வெளியேறப் போவதில்லை'என்று சூளுரைத்தது, சிவகாமியின் சபதம்.

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், இன்ஜினியரிங் மாணவிக்குநடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கொதித்து எழுந்த தமிழகபா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க., ஆட்சியை ஒழித்துக் கட்டும்வரை, கால்களில் காலணி அணிய மாட்டேன்' என்wது,அண்ணாமலை சபதம்!

தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டது,துணை சபதம்!

ஆனால், தமிழக மக்களின்மனோபாவத்தை புரிந்து கொள்ளாமல், அவசரப்பட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

காரணம், தமிழக மக்களுக்கு எதிர்கால நலனைக் காட்டிலும், நிகழ்கால இலவசங்களே முக்கியம்!

மரத்தில் இருக்கும் பலாக்காயைக் காட்டிலும்,கையில் கிடைக்கும் களாக்காய்க்கே புத்தியை அடகு வைப்பர்.

ரூபாய்க்கு மூன்று படிஅரிசியில் துவங்கி, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் என உயர்ந்து, தற்போது இலவச பேருந்து பயணத்தில் இருந்து, மகளிர் உரிமைத்தொகை, உதவித்தொகை, பொங்கல் பரிசுப்பொட்டலம் என்ற வகைகளில், 'ட்யூன்' செய்யப்பட்டு இருப்பவர்கள்.

இவர்களுக்கு நீதி, நியாயம், நேர்மை எல்லாம்இரண்டாம் பட்சம்; இலவசம் ஒன்று தான் குறி; அதுதான் அவர்கள் மூளையில் உருவேற்றப்பட்டு உள்ளது; அவ்வளவுஎளிதில் மாற மாட்டார்கள்.அண்ணாமலை அவசரப்பட்டு சபதம் போட்டிருக்க வேண்டாம்!



தப்பிக்கும் தந்திரம்!


கு.காந்தி ராஜா, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றை மட்டும் வழங்கி விட்டு, 'பொங்கல் பணம் வழங்க முடியாது' என அறிவித்துள்ளது, தி.மு.க., அரசு.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, பொங்கல்பரிசாக, 2,000 ரூபாய் வழங்கப்பட்ட போது, அதை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்என்று கோரிக்கை வைத்த ஸ்டாலின், இப்போது, 1,000 ரூபாய் வழங்க மறுத்துள்ளார்.

இதற்கு, வழக்கம் போல்,மத்திய அரசு போதுமான நிதி வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது பழியைப் போட்டுள்ளார்,நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

மழை பெய்து வெள்ளம்வந்தால், அரசு ஊழியர்களுக்கு நிலுவை பணம் கொடுக்க, பொங்கல் பண்டிகைக்கு இலவசம்கொடுக்க என எது என்றாலும், மத்திய அரசு தான் நிதி தர வேண்டும் என்றால், மாநில அரசு எதற்கு?

மாநில அரசுக்கு தமிழகமக்கள் கொடுக்கிற வரிகள்மற்றும் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக வருகிற பணம் எல்லாம் எங்கே போகிறது? டாஸ்மாக் வாயிலாக, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய், அரசுக்கு வருமானமாக வருகிறதே...ஜி.எஸ்.டி., வரியில், 50 சதவீதம் உடனடியாக மாநில அரசுக்கு கிடைக்கிறது. மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்மான தொகையையும் முழுமையாக வழங்கி வருகிறது.

அப்படியும், தமிழகத்தின்எந்த ஒரு சிறு திட்டத்திற்கும்மத்திய அரசு தான் நிதி தர வேண்டும் என்றால், மாநில அரசுக்கு என்று நிதி நிலையே இல்லையா?

மத்தியில், காங்., ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு வழங்கியதொகையை விட, தற்போதுமோடி அரசு மிக அதிக நிதியை வழங்குகிறது; ஆனாலும், தி.மு.க., அரசு பஞ்சப்பாட்டு பாடுகிறது.

அதேநேரம், கருணாநிதிக்கு பேனா சிலை அமைப்பது, நுாற்றாண்டு விழா எடுப்பது என்று தாராளமாக செலவுசெய்யப்படுகிறதே... அதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது?

ஒருவேளை, அது தமிழகமுதல்வரின் சொந்தப் பணமோ?








      Dinamalar
      Follow us