/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கம்யூ.,வின் நகைப்புக்குரிய பேச்சு!
/
கம்யூ.,வின் நகைப்புக்குரிய பேச்சு!
PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில்,சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:'ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக, த.வெ.க., தலைவர் விஜய் கூறியது, இழிவுபடுத்துவதாக உள்ளது' என்று, மார்க்.கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அவருடையகருத்து தான், அக்கட்சியையே இழிவுபடுத்துவதாக உள்ளது.
ஜனநாயக நாட்டில், கட்சி துவங்கி 100 ஆண்டாக இருந்தாலும், ஒரு மாதமாக இருந்தாலும், தங்கள் கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கூற, அரசியல் தலைவர்களுக்கு முழு உரிமை உண்டு.
தி.மு.க., தலைவர் அண்ணாதுரை, 1967ல்சட்டசபை தேர்தலை சந்தித்தபோது,'தமிழகத்தில் நிலம் இல்லா ஏழைகளுக்கு, 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும். ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று, கூறி இருந்தார். கம்யூனிஸ்ட்கட்சியின் ஆதரவுடன் தி.மு.க., வெற்றி பெற்ற அந்த தேர்தலில், ஆட்சியில் பங்கு கேட்க, கம்யூ., ஏன் தயங்கியது?
தற்போது, 'நாங்கள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில்பங்கு' என்று விஜய் கூறியுள்ளார். கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்துள்ள கட்சி வெற்றி பெற்றால், அப்படி கூற முடியுமா?
இது எல்லாம், ஒரு புறம் இருக்கட்டும்.
கடந்த 1925ல் துவக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய வளர்ச்சி எப்படி இருக்கிறது?
இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடங்கும். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பின் துவங்கப்பட்ட பல தேசிய, மாநில கட்சிகள், பிரமாண்டவளர்ச்சி அடைந்து விட்டன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒரு சில மாநிலங்களைத் தவிர, பார்லி., மற்றும் சட்டசபை தேர்தல்களில், மிக மோசமான தோல்வியையே சந்தித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில், ஆட்சியை இழந்து விட்டது; கேரளாவில்மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
இப்படிப்பட்ட தேய்மானம் காணும் கம்யூ., கட்சி, விஜயைப் பார்த்து நக்கலடிப்பது,நகைப்புக்குரியதாக இருக்கிறது.
முன் வாங்க மோடி!
நெல்லை குரலோன்,
பொட்டல்புதுார், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ-மெயில்' கடிதம்:
சமீபத்தில்,பிரேசில் நாட்டில் நடந்த, ஜி-20 உச்சி மாநாட்டில் பேசிய நம்
பிரதமர் மோடி, 'தற்போது நடக்கும் போர்களால், உலகின் தென் பகுதியில், உணவு,
எரிபொருள், உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நேரத்தில் பசி
மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை நிறுவுவதற்கான பிரேசிலின்
முயற்சி பாராட்டத்தக்கது' என்று கூறி, பலத்த கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டு பயணத்தின்போது, 'இது போருக்கானகாலம் இல்லை' என்று அவர் பேசியதை அனைவரும் அறிவோம்.
அன்பு,
அஹிம்சை, உலகஅமைதி குறித்து துணிந்து கருத்து சொல்லி, ஆக்கப் பூர்வமான
முன்னெடுப்புக்குஇந்த உலகை வழி நடத்திச்செல்லும் முழுத்தகுதியும் நம்
தேசத்திற்கு உண்டு. அஹிம்சையைக் கைக்கொண்டு வெற்றி கண்ட மகாத்மா காந்தி
பிறந்த மண் இது.
போரை விரும்பாத தேசம் என்ற முத்திரையை நிரந்தரமாகப்
பெற்றுள்ள பெருமையும், நம் நாட்டுக்குசொந்தம். இத்தகைய சிறப்புகளையெல்லாம்
இயல்பிலேயே நாம் பெற்றிருப்பது ஒரு வரம், யோகம், பேறு என்று தான் சொல்ல
வேண்டும்.
கிடைத்தற்கரிய பெருமைகளைப் பெற்றிருக்கும் இந்த
தேசத்துக்கு, உலக அமைதியை நிலைநாட்ட வேண்டிய அதி முக்கிய பொறுப்பும் கூடவே
உண்டு என்பதை, நாம் உணர வேண்டும்.
இன்னும் சரியாக சொன்னால், போரை முற்றிலும் ஒழித்துவிட்டு, உலக அமைதியை கொண்டு வரும் காலம் கனிந்திருக்கிறது.
சமீபத்தில்
அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும்டிரம்ப், வெற்றிச் செய்தி தனக்குக்
கிடைத்ததும், 'அமெரிக்கா போரை விரும்பாது; நடத்தாது' என்று கூறி
இருக்கிறார்.
இதுவரை இந்திய எதிர்ப்பில் தீவிரத்தை கடைப்பிடித்து
வந்த சீனாவும்,இப்போது அடக்கி வாசிக்கஆரம்பித்துள்ளது. இந்த அற்புதமான
சூழலை மோடி,மிகச் சரியாக பயன்படுத்தி உலக அமைதிக்கான முயற்சிகளில் படு
தீவிரமாகமுனைய வேண்டும். வாருங்கள் மோடி ஜி... உலகை தலைமை தாங்குங்கள்!
கறையான் புற்றாக கூடாது இரும்பு கோட்டை!
ச.ஜான்
பிரிட்டோ,திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
'நடிகர்விஜய் புதிதாக கட்சி துவங்கியதால், அ.தி.மு.க.,வுக்கு எந்த
பாதிப்புமில்லை. இனிமேலும் யாராலும் அப்படி ஒரு நிலைமை எங்கள்
கட்சிக்குவராது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிகூறியிருந்தார்;
இப்போது அக்கட்சியுடன் கூட்டணி பேச்சு நடக்கிறது என்பது, சற்றே ஆறுதலான
செய்தி.
முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா
ஆகியோர்,இருபெரும் சக்திகளாகஇருந்து வளர்த்தெடுத்த, அ.தி.மு.க.,
தேர்தல்களில் தொடர் தோல்வி கண்டு வருவதை, அந்த கட்சியின் முக்கிய புள்ளிகள்
அலட்சியம் செய்து வருவது, கட்சியை பேரழிவு பாதைக்கு கொண்டு செல்லும்
நேரடியான வழி.
உட்கட்சி பூசல், கூட்டணி குழப்பம், தேர்தல் தொடர்
தோல்விகள் என நெருக்கடிகள்நாலாபுறமும், அ.தி.மு.க.,வை சூழ்ந்துள்ளபோதும்,
அதன் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் பொதுச்செயலர் செயல்படுவது, ரோம்
நகர் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் செயல் போலாகிறது.
தற்போதைய
சூழலில் இலவசங்களை மட்டுமே வாரி வழங்கி, மக்களை வசியப்படுத்த
முயற்சிக்கும்,தி.மு.க.,வின் தேர்தல் வியூக கணக்கு தோல்வி அடைந்து வருகிறது
என்பதே நிதர்சனம்.
நாட்டில் சர்வ சாதாரணமாக தாண்டவமாடும் போதை
பொருட்கள், கட்டப்பஞ்சாயத்து, மணல் மாபியாக்கள், 24 மணி நேர டாஸ்மாக் மது
விற்பனை, சாதாரண கவுன்சிலர் வரையான தி.மு.க.,வினரின் அரசியல்அதிகார,
'அட்ராசிட்டி' என, அந்த கட்சியின் இமேஜ் சுக்குநுாறாகி வருகிறது.
இந்த
நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நிதானமாக முடிவெடுத்து
கட்சியை வழிநடத்தினால், வரும் தேர்தலில் வெற்றி மீண்டும் சாத்தியப்படும்.
இல்லையேல், கறையான் புற்றாக மாறி விடும், அ.தி.மு.க.,வெனும்
இரும்புக்கோட்டை.
சமீப காலமாக, விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சு
நடப்பதாகவும், 154:80 என்ற விகிதத்தில், அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி
வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டது; ஆனால், விஜய் மறுப்பு தெரிவித்து
விட்டார். அ.தி.மு.க., விழிக்க வேண்டும்!