/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
காங்., 'கப்சிப்' காக்க வேண்டும்!
/
காங்., 'கப்சிப்' காக்க வேண்டும்!
PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

எஸ்.சுப்ரமணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன், மத்தியில் கோலோச்சிக் கொண்டிருந்தது காங்கிரஸ்.
அப்போதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதாக சரித்திரமே இல்லை.
தற்போது, 'கச்சா எண்ணெய் விலை 32.5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும்,பா.ஜ.,வின் எரிபொருள் கொள்ளை தொடர்கிறது. பா.ஜ.,வால் துாண்டி விடப்பட்ட விலைவாசி உயர்வுக்கு, தேர்தல் நடக்கும்மாநிலங்களில் உள்ள மக்கள் பதிலடிகொடுப்பர்' என்கிறார், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
விலைவாசி உயர்வு என்பது, பா.ஜ.,வால் துாண்டி விடப்பட்டது என்றும், எரிபொருள் விலை குறையாததற்கும் பா.ஜ., தான் காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அள்ளி அள்ளி வீசி இருக்கிறார்.
கடந்த 2014க்கு முன் ஆட்சியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எத்தனை முறை, பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து அறிவித்தது என்ற விபரத்தையும் மல்லிகார்ஜுன கார்கே, அள்ளி அள்ளி வீசினால் மிகவும் நல்லது.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், நான் இரு சக்கர வாகனம் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். வாங்கியது முதல், பயன்படுத்திக் கொண்டிருந்த கடைசி நாள் வரை, ஒவ்வொரு முறை எரிபொருள் நிரப்பும் போதும், 50 காசுகள் முதல் இரண்டு ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து தான் நிரப்பிக் கொண்டிருந்தேன். அந்த, 15 ஆண்டுகளில், ஒரு முறை கூட அந்த எரிபொருளின் விலையில் ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ குறைந்ததில்லை.
அந்நேரத்தில் சாட்சாத் இந்த காங்கிரஸ் தான் ஆண்டுகொண்டிருந்தது.
இப்போது சொல்லுங்கள் கார்கே... எப்போது நீங்கள் விலை குறைத்தீர்கள் என்று!
கார்கே எந்த விஷயத்தைப் பேசத் துவங்கினாலும், தன் முதுகில் உள்ள அழுக்கைத் திரும்பிப் பார்க்கும் திறன் இருந்தால் மட்டுமே பேச வேண்டும்; இல்லையேல், 'கப்சிப்' காக்க வேண்டும்!
விரைந்து முடிவு எடுப்பதே விவேகம்!
-வி.சி.கிருஷ்ணரத்னம்,
காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ -
மெயில்' கடிதம்:தேசிய கல்விக் கொள்கையை ஏற் காததால், சமக்ரா சிக் ஷா
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை,
மத்திய பா.ஜ., அரசு தர மறுப்பதாக தி.மு.க., அரசு குற்றம் சாட்டுகிறது.
முன்னதாக,
அண்ணாமலை லண்டன்செல்வதற்கு முன்பாக,'பி.எம். ஸ்ரீ., பள்ளி திட்டத்துக்கு
மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில்கையெழுத்திட்ட தி.மு.க., அரசு, அரசியல்
லாபத்துக்காக அந்தத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது; அதனால்
ஏற்க மாட்டோம் என்று இப்போது கூறி வருகிறது. மத்திய அரசுகல்விக்கு நிதி
ஒதுக்கிக் கொண்டு தான் இருக்கிறது'என்று கூறியிருந்தார்.
முதல்வர்
ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், 'தேசிய கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக,
சிறப்பாக செயல்படும்மாநிலங்களுக்கு நிதியை மறுப்பதும், அதே நேரம்
இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்குநிதியை வாரி வழங்குவதும் தான், தரமான
கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் மத்திய பா.ஜ., அரசின்
திட்டமா?'என்று காட்டமாக கேட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக மத்திய
கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஸ்டாலினிடம் நான்கு கேள்விகளை
முன் வைத்திருக்கிறார்... அதில், 'தமிழ் உட்பட தாய்மொழியில் கல்வி கற்பதை
எதிர்க்கிறீர்களா? தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்து வதை
எதிர்க்கிறீர்களா?
'தமிழ் உள்ளிட்ட இந்தியமொழிகளில்
பாடப்புத்தகங்கள் மற்றும்உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை
எதிர்க்கிறீர்களா?தேசிய கல்விக் கொள்கையின்முழுமையான, ஒழுங்கமைப்பான,
சமமான, எதிர்காலத்துக்கான உள்ளடக்கம் சார்ந்த கட்டமைப்பை எதிர்க்கிறீர்
களா?' என கேட்டுள்ளார்.
முத்தாய்ப்பாக, 'அப்படிஎதுவும் இல்லை
என்றால்,உங்களின் அரசியல் ஆதாயங்களை விட தமிழகமாணவர்களின் நலன்களுக்கு
முன்னுரிமை கொடுத்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்
கொள்கிறேன்' என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு இந்தவிவகாரத்தில், 'ஈகோ' பார்க்காமல், மாணவர்களின் நலன் கருதி, விரைந்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.
ராகுலின் பேச் சுக்கு கடிவாளம் அவசியம்!
கிருஷ்ணமூர்த்தி
ராமசுப்ரமணியன், ஆசிரியர் (பணி நிறைவு), நைனார் மண்டபம்,புதுச்சேரியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்
ராகுல், சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, அங்குள்ள
பல்கலைக்கழகம் ஒன்றில், இந்தியாவில் சீக்கியர்களுக்கு சுதந்திரம் இல்லை
என்பது போன்ற ஒரு கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், நாட்டைதுண்டாடும்
வன்ம விஷக் கருத்துக்களை கக்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா,
சீக்கிய பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட பின், சீக்கியர்களுக்கு
எதிராககாங்கிரசாரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை யாரும்
மறந்திருக்க முடியாது. 1984 நவம்பர் 1ல் புதுடில்லி ஆசாத் மார்க்கெட்
பகுதியில் உள்ள குருத்வாரா எரிக்கப்பட்டதுடன், அங்குள்ள சீக்கியர்கள் சிலர்
எரித்தும் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு
பதியப்பட்டு, அது தொடர்பான வழக்கு இன்றும் நடைபெற்று வருவதையும், தற்போது
அவர் ஜாமினில் தான் உள்ளார் என்பதையும், ராகுல் மறந்து விட்டாரா?
மேலும்,
சீக்கியரானமன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின் தலையாட்டி பொம்மையாக, வாய்
பேச முடியாத மவுனியாக, சுதந்திரம் இல்லாத பிரதமராக, 10 ஆண்டுகள் வலம்
வந்தார்என்பதும் ராகுலுக்கு தெரியாதா?
தவிர, அரசியலில்ஏற்ற
இறக்கங்களை சந்திக்காமல், மோடி நேரடியாக பிரதமர் ஆகிவிட்டதாகவும் ராகுல்
தெரிவித்துள்ளார். ஏறக்குறைய, 14 ஆண்டுகள் குஜராத் மாநிலத்தின் முதல்வராக
இருந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் மோடி பிரதமரானார்.
மாறாக,
நாட்டின் மன்னர்பரம்பரையாக தன்குடும்பத்தையும், பட்டத்துஇளவரசராக தன்னையும்
பாவித்து, கட்சியில் உள்ள பல சீனியர்களை பின்னுக்கு தள்ளி, வாரிசு அரசியல்
காரணமாக ராகுல் லோக்சபாஎதிர்க்கட்சி தலைவராகி உள்ளார் என்பதை, அவர்
நினைவில் கொள்ள வேண்டும்.
'நடந்து முடிந்த லோக்சபாதேர்தல் நியாயமான
முறையில் நடைபெறவில்லை' என்று கூறும் ராகுல், எந்த முறையற்ற தேர்தல்
அடிப்படையில், 99 இடங்களில் ஜெயித்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகி
உள்ளார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
ராகுலின் இத்தகைய
பிரிவினைவாத பேச்சுகளுக்கு, காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் ஆதரவு
தெரிவித்துள்ளன. அன்னியநாடுகளில் தொடரும் ராகுலின், ஜாதி, மத, பிரிவினைவாத
பேச்சுகளுக்கு மத்திய அரசு சட்ட ரீதியிலான கடிவாளம் போட வேண்டும்.