sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?

/

சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?

சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?

சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?


PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --------------------------------------------------------------------------------------முதலீடுகளை ஈர்ப்பதற்காக என்று கூறி, அரசு செலவில் மனைவியுடன் உல்லாச டூர் சென்று திரும்பி உள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், 13,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறுகிறார்.

முதலீடுகளை ஈர்க்க முதல்வரே நேரில் சென்று முதலீட்டாளர்களை சந்திக்க வேண்டுமா என்ன? அவர்களை இங்கே வரவழைத்து ஒப்பந்தம் போட்டிருக்க முடியாதா?

அப்படியே முதலீடுகளை ஈர்க்கச் சென்றிருந்தாலும், அரசு செலவில் அவருடைய மனைவியையும் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்?

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பதே வெறும் கண் துடைப்பு!

காரணம், ஒப்பந்தம் போட்டதாலேயே உடனே முதலீடுகள் குவிந்து விடாது. மற்ற மாநிலங்களை விட தொழில் துவங்க தமிழகம் சிறந்த இடமா, தாங்கள் கேட்கும் சலுகை, வசதிகளை அரசு செய்து கொடுக்குமா, எங்கே முதலீடு செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும் என்று பல்வேறு கோணங்களில் முதலீட்டாளர்கள் ஆராய்வர்.

பின், அவர்கள் தொழில் துவங்க அரசு நிலம் வழங்க வேண்டும். தண்ணீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளால் இடையூறு ஏற்படக் கூடாது.

அதன்பிறகே தொழில் துவங்க முன் வருவர். இதற்கே, இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.

அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லையென்றால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், துபாய் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்தார், முதல்வர். அது தற்போது எந்த நிலையில் உள்ளது? எத்தனை தொழில்கள் எவ்வளவு முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது என்பதை, முதல்வரால் புள்ளி விபரத்துடன் கூற முடியுமா?

சர்க்கரை என்று சொன்னதும் வாய் இனித்துவிடுமா என்ன!



உண்மை வெளிவந்தே தீரும்! எம்.கல்யாணசுந்தரம், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் சந்திக்கச் சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சி சகாக்களை அழைத்து செல்லாமல், தொழிலதிபரான, தன் குடும்ப நண்பர் ஒருவரை அழைத்துச் சென்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்புக்கு பின் வெளியே வந்த இருவரும் , தங்கள் தலையில் துண்டை போட்டு மறைத்த படி காரில் வேகமாக வெளியேறியுள்ளனர்.

கூட்டணி கட்சி தலைவரை பார்த்து விட்டு வருவதற்கு எதற்கு ஒளிந்து கொண்டு வர வேண்டும்?

பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமித் ஷாவை சந்தித்தபோதே, இவருக்கு வயிறு கலக்கிவிட்டது.

உடனே, கட்சியின் மூத்த தலைவரான தம்பிதுரையை அனுப்பி வைத் தவர், தானும் சென்று சந்தித்துவிட்டு வந்துள்ளார். இதற்கு, 'மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க அமித் ஷாவை சந்தித்தேன்...' என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்.

இதை, அ.தி.மு.க., தொண்டன் கூட நம்பமாட்டான். தமிழக மக்களா நம்புவர்?

ஏற்கனவே, விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயரை வைப்பதற்கு புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழனிசாமியின் இந்த பேச்சால் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் கூட்டணியில் இருந்து வெளியேறுவர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளோ கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக் கின்றன . பன்னீர்செல்வம் , தினகரன், செங்கோட்டையன் தங்களுடைய ஆதரவாளர்களை வைத்து பழனிசாமிக்கு விளையாட்டுக் காட்டுகின்றனர்.

இப்படி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்றால், பழனிசாமிக்கு நான்கு திசையிலிருந்தும் அடி. எல்லாரையும் முறைத்துக்கொண்டு காட்டு ராஜாவாக வாழமுடியாது. என்னதான் முகமூடி போட்டாலும் பத்து மாதம் கழித்து குழந்தை வெளியே வந்தே தீரும்!



பள்ளிகள் என்ன கட்சி அலுவலகமா? வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணா துரை பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம் கீழ வாசலில் உள்ள அரசு உதவி பெறும் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கட்சி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர், தி.மு.க.,வினர். பள்ளிக் கூடங்கள் என்ன தி.மு.க., அலுவலகமான அறிவாலயமா... கட்சி நிகழ்ச்சிகளை நடத்த?

இப்படித்தான் நீட் தேர்வு விலக்கு வேண்டி, பள்ளிகளுக்குள் தி.மு.க., வினர் அத்துமீறி நுழைந்து , மாணவர்களை கட்டாயப் படுத்தி கையொப்பம் பெற்றனர்.

கல்வி நிலையங்களில் கட்சிக்காரர்களுக்கு என்ன வேலை?

அரசியல் செய்ய மாணவர்களின் கல்வியும், அவர்கள் கற்கும் இடமும் தானா கிடைத்தது?

நன்றாக சென்று கொண்டிருந்த கல்வித் துறையில், படித்தாலும், படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி என்று கூறி, மாணவர்களின் கற்கும் திறனுக்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனுக்கும் வேட்டு வைத்தாகி விட்டது.

கூடவே, பல்கலை மான்யக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றாமல், கவர்னரின் ஆலோசனையையும் புறந்தள்ளி, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள்' என்று கூறி, கட்சி ஆதரவாளர்களை பல்கலை துணை வேந்தர்களாக நியமனம் செய்வது, பாடங்களில் கட்சி தலைவர்கள் மற்றும் அவர்கள் கொள்கைகளை புகுத்துவது என்று மாணவர்களின் கல்வி தரம் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதை மூடி மறைக்க, 'நுழைவுத் தேர்வுகளே வேண்டாம்' என்ற சப்பைக் கட்டு வேறு!

தமிழக மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன், பிழையில்லாமல் படிப்பது, எழுதுவது, அடிப்படை கணக்கு போன்றவைகளில் பின்தங்கியுள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை யும் நடத்த துவங்கி விட்டனர். இனி, மாலை நேரங்களில், பள்ளிகளை மதுபான விற்பனை கூடங்களாகவும், கல்லுாரிகளை கட்சி அலுவலமாக பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லை!

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்!








      Dinamalar
      Follow us