/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
உள்நாட்டு பயங்கரவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்!
/
உள்நாட்டு பயங்கரவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்!
PUBLISHED ON : மே 02, 2025 12:00 AM

ஆர்.கதிரவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முஸ்லீம் நாடுகள் கூட பின்பற்றாத, 'ஷரியத்' சட்டங்களையும், கூடுதலாக சில அராஜக சட்டங்களையும் கடைப்பிடிப்பவர்கள் தலிபான்கள்!
கருணை என்றால் என்னவென்றே தெரியாமல் ஆயுதங்களால் மட்டுமே பேசுவர். அத்தகைய கொடூரமானவர்கள் கூட, ஜம்மு - -காஷ்மீர் பஹல்காமில், சுற்றுலா பயணியரான அப்பாவி மக்கள், 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததை கண்டித்து, கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் உளவுத் துறையையும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இந்திய ராணுவத்தையும் சகட்டு மேனிக்கு பேசுகின்றனர்.
திருமணம் ஆன ஏழு நாளில் ஓர் இளம் பெண் கணவனை இழந்து கதறிக் கொண்டிருக்கிறாள். 7 வயது சிறுவன் தன் கண்ணெதிரே தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டு துடிக்கிறான். ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் ஆதாரமாய் இருந்த குடும்பத் தலைவர் இறந்து கிடப்பதைக் கண்டு கதறுகின்றன பல குடும்பங்கள். ஆனால், இந்த வாய்ச்சொல் வீரர்கள் இங்கு என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர்...
'ஹிந்துக்கள் என்று அறிந்தபின் கொன்றனர் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?' என்று கேட்கிறார், வி.சி., தலைவர் திருமாவளவன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானோ, இறந்து போனவர்கள் குறித்து சிறிதும் இரக்கப்படவில்லை; மாறாக, இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தினால், பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படுவரே என்று கலங்குகிறார்.
பாகிஸ்தான் அரசுக்கே இல்லாத அக்கறை சீமானுக்கு எங்கிருந்து வந்தது? அந்த பாசத்தின் பின்ணனி குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணிக்க வேண்டியது அவசியம்!
அத்துடன், மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்... சொந்த நாட்டின் மீது பற்று இல்லாதவர்களுக்கு, சொந்த மக்கள் மீது எப்படி அக்கறை இருக்கும்?
இத்தகையோர் பயங்கரவாதிகளைக் காட்டிலும் மோசமானவர்கள். இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் போனால், தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்வர் என்பதை மக்கள் புரிந்து, தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்!
பல்கலைகளின் நிலை என்னவாகும்?
என்.எஸ்.வெங்கட்ராமன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துணைவேந்தர்கள்
மாநாட்டை கவர்னர் ஊட்டியில் கூட்டியபோது, 'மாநாட்டை பல துணைவேந்தர்கள்
புறக்கணித்தனர்' என்ற செய்தி, அதிர்ச்சியை அளிக்கிறது.
இது, அரசியல்வாதிகளின் பிடியில், பல்கலைகள் அகப்பட்டுவிட்டன என்பதையே காட்டுகிறது.
'பல்கலை
துணைவேந்தர்களை நியமிப்பதற்கு தமிழக அரசிற்கு அதிகாரம் உண்டு' என்று உச்ச
நீதிமன்றம் கூறியிருந்தாலும், 'கவர்னர் இனி வேந்தராக செயல்பட முடியாது'
என்று நேரடியாகவே, மறைமுகமாகவோ கூறவில்லை.
இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்யும் என்றும் கூறுகின்றனர்.
மேல் முறையீடு விசாரணையின் பின், இத்தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படலாம்.
மாணவர் முன்னேற்றத்திலும், பல்கலை நிர்வாகத்தை ஆக்கப்பூர்வமாக நடத்துவதிலும் பொறுப்பு உள்ளவர்கள், துணைவேந்தர்கள்.
இவர்கள்
அரசியல்வாதிகளின் நிர்பந்தங்களுக்கு செவிசாய்க்க கூடாது. பதவிக்கு
தேவையான கொள்கைப்பிடிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின்
எதிர்பார்ப்பு!
ஆனாலும் என்ன செய்ய... அரசியல்வாதிகளின் கைகளில்
பல்கலைகள் சென்றதன் காரணமாக, இனி, தேர்வு கமிட்டி என்ற கண்துடைப்பு நாடகம்
நடத்தி, முதல்வரின் விருப்பப்படியே துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர்.
அரசியல் சார்பு உடையவர்களும், அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களும், பெரும் பணம் படைத்தோருமே துணை வேந்தராக நியமிக்கப்படுவர்.
இதன் வாயிலாக, காவல் துறை ஏவல் துறை ஆனது போல், துணைவேந்தர்களும் கழகங்களின் புகழ்பாடும் பாவலர்களாக மாறுவர்.
கல்வியின் தரமோ கவலைக்கிடமாக மாறி விடும்!
கல்வியில் சிறந்த தமிழகம் இனி கற்பனையாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை!
குட்டையை குழப்பாதீர்கள்!
என்.ராமகிருஷ்ணன்,
பழனி யில் இருந்து எழுதுகிறார்: 'அ.தி.மு.க., ஆட்சியில் எவருக்கும் பங்கு
தர மாட்டோம்' என்று பழனிசாமி கூறி விட்டாராம்... வாசகர் சிலர் இப்பகுதியில்
கிண்டலாக எழுதுகின்றனர்.
தமிழக மக்கள் எப்போதுமே கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள் என்பதற்கு, கடந்த கால வரலாறே சான்று!
கடந்த
1979ல் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க., மற்றும் காங்.,
கட்சிகள் 38 இடங்களில் வென்றன. கருணாநிதியின் துாண்டுதலின் பேரில்,
எம்.ஜி.ஆர்., ஆட்சியை கலைத்தார், இந்திரா. மூன்று மாதங்களுக்கு பின் நடந்த
சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மாபெரும் வெற்றி
பெற்று, எம்.ஜி.ஆர்., மீண்டும் முதல்வர் ஆனார்.
'அரசியல்
சாணக்கியன்' என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் கருணாநிதி,
அத்தேர்தலில் இந்திராவின் மிரட்டலுக்கு பயந்து, தலா 117 இடங்கள் என
போட்டியிட்டனர்.
தி.மு.க., தொண்டர்களே அதை விரும்பாமல், காங்., நிற்கும் தொகுதிகளில் ஓட்டு போடவில்லை. தமிழக மக்களும் கூட்டணி ஆட்சியை ஏற்கவில்லை.
அதேபோன்று,
2011ல் அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
'அ.தி.மு.க.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது; நாம் ஆட்சியில் பங்கு
கேட்போம்' என்று நினைத்தார், விஜயகாந்த். ஆனால், ஜெயலலிதாவுக்கு தனி
மெஜாரிட்டி கிடைத்து, ஆட்சி அமைத்தார்.
தற்போது தி.மு.க.,
கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், கம்யூனிஸ்டுகள், வைகோ ஆகியோர் இணைந்து,
விஜயகாந்திற்கு முதல்வர் ஆசை காட்டி, 2016ல் மக்கள்நல கூட்டணி அமைத்தனர்.
அதில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.
ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் மனநிலை மாறிக் கொண்டே தான் இருக்கிறது.
ஸ்டாலினை
ஏற்றுக் கொண்ட தி.மு.க.,வினர்,அவரது அண்ணன் அழகிரியை ஏன் ஏற்கவில்லை? இதே
தி.மு.க., கட்சியை துரைமுருகனுக்கோ, பொன்முடிக்கோ கொடுத்துப்
பார்க்கட்டும். அப்போது தெரியும் பழனிசாமியின் அருமை!
ஆகவே,
மரத்தில் பழம் பழுக்கும்முன் வேரில் வெந்நீரை ஊற்றாதீர்கள். அ.தி.மு.க., -
பா.ஜ., இரு கட்சியினரும் மனமாச்சரியங்களை மறந்து ஒன்றுபடும் நேரத்தில்
குட்டையை குழப்ப வேண்டாம்!