PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

ஆர்.சுகுமாறன், கிருஷ்ணகிரியில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முதல்வர் ஆகிறார்; இந்த அறிவு கூட அந்த ஆளுக்கு இல்லை' என, வி.சி., கட்சியின் துணைப் பொதுச்செயலராக ஆதவ் அர்ஜுனா இருந்த போது பேசிய பேச்சுக்கு, எகிறி குதித்து உள்ளார், துணை முதல்வர் உதயநிதி.
அவரது இந்த ஆவேசத்தைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்று ஒன்றும் புரியவில்லை.
காரணம், அமெரிக்கா போன்ற நாடுகளில்மட்டும் தான், ஜனாதிபதி அல்லது அதிபரைமக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்வு செய்வர். இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.,யைத் தான், ஓட்டளித்து தேர்ந்தெடுப்பர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் இருந்து, ஒருவரை கட்சித்தலைமையின் கண்ணசைவுக்கேற்ப, முதல்வராகவோ, பிரதமராகவோ தேர்ந்தெடுத்து பதவியில் அமர வைப்பரே தவிர, மக்களுக்கும், அதற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
உதயநிதிக்கு இது தெரியுமா, தெரியாதா?
பிரதமர் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த ஓரிரு நாட்களிலேயே, விமான ஓட்டியாக இருந்த, ராஜிவ் பிரதமராக நியமிக்கப்பட்டார்; அப்போது, அவர் எம்.பி., யே அல்ல. பதவியேற்ற அடுத்த ஆறு மாதங்களுக்குள், ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற வேண்டும். அவ்வளவு தான்!
தி.மு.க., ஆட்சி காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது.
அதற்குள், கழகக் குடும்பத்தில் இருந்து, துர்கா ஸ்டாலினையோ, கிருத்திகா உதயநிதியையோ, இன்ப நிதியையோ துணை முதல்வர்களாக நியமித்தாலும், இந்நாட்டு சட்டங்களால், அதை தடுக்க முடியாது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள், பதவியில்உள்ள ஒரு எம்.எல்.ஏ.,வை பலிகடாவாக்கி,பதவியை ராஜினாமா செய்ய வைத்து, காலியாகியுள்ள அந்த சட்டசபை தொகுதியில்நிறுத்தி, வெற்றி பெற வைக்க வேண்டும் அவ்வளவு தான்!
இதெல்லாம், நாட்டு மக்களான இந்த மாங்கா மடையர்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்ற இறுமாப்பில், புருடா விட்டுக்கொண்டு இருக்கிறார் உதயநிதி!
ஆசிரியர்களின் குறைகள் களையப்படுமா?
வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த, 2022, அக்.,10 முதல்,
2024 நவ., 14 வரை 234 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளைஆய்வு
செய்து, அறிக்கையாகதொகுத்து, முதல்வரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்
வழங்கியுள்ளார்; இது,பாராட்டத்தக்க விஷயம்.
பள்ளி மற்றும்
ஆசிரியர்- மாணவர் நலன் சார்ந்தகோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள்
ஒருபக்கம் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும், கல்வி அமைச்சரின் ஆய்வு
அறிக்கையில், எது எது உடனுக்குடன் நிறைவேறும், எது தேர்தல் வாக்குறுதியாக
வெளிவரும்என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் - மாணவர்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
அமைச்சர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
இன்று,
கற்பித்தல் பணியைத் தாண்டி, ஒவ்வொரு ஆசிரியரும் பல வகைப்பட்ட பணிகளைசெய்ய
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அத்துடன், மாணவர்களால்உருவாகும் பல்வேறு
வகையான பிரச்னைகளுக்கும்ஆசிரியர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
இத்தகைய நெருக்கடி இல்லாமல், மன உளைச்சல் இன்றி பணி செய்யவே அவர்கள் விரும்புகின்றனர்.
அத்துடன்,
எத்தனையோபள்ளிகள் இன்று சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளன.இதனால், விடுமுறை
நாட்கள்மற்றும் இரவு நேரங்களில்,மது அருந்தும் இடமாகவும்,கழிப்பறையாகவும்
மாறிவிடுகின்றன. இதை, அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்!
மாணவர்களின்
எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமனம்இருக்க வேண்டும். ஒற்றைஇலக்க
மாணவர்கள் உள்ளஅரசு துவக்கப் பள்ளிகளை,அருகில் உள்ள பள்ளிகளுடன்இணைக்க
வேண்டும்.இதன் வாயிலாக, அரசுக்குபல நுாறு கோடிகள் மிச்சமாகும். இதை, பள்ளி
வளர்ச்சிக்கு பயன்படுத்துவதன் மூலம், உட்கட்டமைப்பு மேம்படும்.
ஒரே
பள்ளியில்ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களை, அதே
ஒன்றியம், வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்வதன் வாயிலாக,
ஆரோக்கியமானமாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த நடைமுறையை
பெரும்பாலானஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி வேலை
நேரத்தில்,பிற பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமல்,வகுப்பறையில் இருக்க
வேண்டும் என்பதே பெற்றோர் - மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கல்வி அமைச்சர் இதை கவனத்தில் கொள்வாரா?
ஜாடிக்குள் அடைபட்டுள்ள தலைவர்கள்!
ஆர்.பாலமுருகன்,
மதுரையில்இருந்து அனுப்பிய,'இ -மெயில்' கடிதம்: சுதந்திர போராட்ட
தலைவர்கள் எல்லாம், இன்று, ஜாதிக்கு ஒரு தலைவராக பங்கிடப்பட்டு, ஜாதி
எனும் ஜாடிக்குள் அடைக்கப்பட்டுஉள்ளனர். இதனால், ஒரு ஜாதி தலைவரை, அடுத்த
ஜாதியினருக்கு பிடிக்காமல் போய்விட்டதுடன், இளைய தலைமுறையினர்,இவர்களைப்
பற்றி அறிந்துகொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.
நாட்டிற்காக தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்த தலைவர்களை வைத்து, இங்கு, சுயநலஅரசியல் நடந்து
கொண்டு இருக்கிறது. அரசியல்வாதிகளோ, ஓட்டுக்காக இதைக் கண்டும்
காணாமல்உள்ளனர்.
வ.உ.சி., பாரதியார், முத்துராமலிங்கத்தேவர்,
காமராஜர், சுந்தரலிங்கனார் போன்ற இன்னபிற சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு,
சம்பந்தப்பட்ட ஜாதியினர்மட்டும் விழா எடுக்க தடை விதிக்க வேண்டும்.
தேசிய
தலைவர்களாக அடையாளம் காட்டப்பட்டஅனைவருக்கும், அரசே மரியாதை செய்து, அரசு
சார்பாக மட்டுமே விழா எடுக்க வேண்டும்; ஜாதி சங்கங்கள், பொதுமக்கள்
சார்பாக எந்த விதமான விழாவோ, ஊர்வலமோ நடத்துவதற்கு அரசு தடை விதிக்க
வேண்டும்.
இப்படி செய்தால் மட்டுமே, அடுத்துவரும் தலைமுறையினரும்,
தேசிய தலைவர்களை அடையாளம் கண்டு, நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய பங்களிப்பை
அறிந்து கொள்ள முடியும்.
ஒரு இனத்தில் பிறக்கும்குழந்தைக்கு, அவருடையஜாதி தலைவரை மட்டுமே அடையாளம் காட்டி வளர்க்கப்படுவது, அநாகரிகத்தின் உச்சம்.
இன்று
தேசிய தலைவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவோர், உண்மையான
பற்றுடனாகொண்டாடுகின்றனர்... தங்கள் ஜாதிப் பெருமையையும்,
செல்வாக்கையும்காட்டுவதற்காகவே இவ்விழாக்கள் எடுக்கப்படுகின்றன.
இதை மாற்ற அரசு முயற்சி செய்ய வேண்டும்.
தலைவர்களின்
தியாகத்தை போற்றும்விதமாக, அரசே ஒவ்வொருதலைவருக்கும் விழா எடுக்கும்
பட்சத்தில் அனைவருக்கும் சரிசமமான மரியாதை கிடைப்பதுடன், வரும்
தலைமுறைக்கும்அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான ஓர் ஆர்வம் பிறக்கும்.
அரசு இதை நடைமுறைப்படுத்துமா?