PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

எஸ்.வள்ளியப்பன், சிவகங்கையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயக நாட்டில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கும் அரசியல்கட்சி, நாட்டை நல்ல முறையில் நிர்வகிக்கவும், நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதை, நடைமுறைப்படுத்தவும் தெரிந்து இருக்க வேண்டும்.
அப்படியொரு நல்ல நிர்வாகத்தை நம் நாட்டுக்கு கொடுத்துக் கொண்டிருப்பதால் தான், உலக நாடுகளே பிரதமர் மோடியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.
ரஷ்யா- - உக்ரைன் இடையே நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கும் போரை, பிரதமர் மோடி ஒருவரால் தான் நிறுத்த முடியும் என்று, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் நம்புகின்றன.
ஐ.நா., பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ், சமீபத்தில் இஸ்ரேலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்; ஆனால், அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய, இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
அவர், இஸ்ரேலுக்குள் நுழைய அந்நாடுதடை விதித்ததும், நம் பொருளாதாரப் புள்ளி ப.சிதம்பரத்துக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.
உடனே, கணினியின் முன் அமர்ந்து, சமூக வலைதளத்தில், 'இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது. ஐ.நா., பொதுச்செயலருக்கு இஸ்ரேல் தடை விதித்தது பெரும் தவறு. அதை இந்தியா கண்டிக்காதது, அதைவிட பெரிய தவறு' என, பதிவிட்டு குதுாகலித்து இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆண்டு கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சிகள் கூறிய எந்த ஆலோசனையையாவது செவிமடுத்து இருக்கிறீர்களா... எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரிதானே நடந்து கொண்டீர்கள்!
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகளின் அபிப்ராயத்தை கேட்டு தான் அமல்படுத்தினீர்களா?
ரூபாய் நோட்டு அச்சிடும் இயந்திரம், நல்ல நிலையில் இருந்தபோதும், பழையதாகிவிட்டதாகச் சொல்லி, எதிரி நாடான பாகிஸ்தானுக்கு சகாய விலையில் விற்றபோது, எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகா விற்றீர்கள்?
இயந்திரத்தை விற்றதோடு நிறுத்திக் கொள்ளாமல், இந்திய கரன்சி அச்சிடும் காகிதத்தை, எந்த நாட்டில் இருந்து வாங்குகிறோம் என்ற விலாசத்தையும் அல்லவா போனசாக வழங்கினீர்கள்?
ஐ.நா., பொதுச்செயலரை இஸ்ரேலுக்குள்அனுமதிப்பதும், அனுமதி மறுப்பதும் இஸ்ரேல் நாட்டின் உள்நாட்டு பிரச்னை; அதில்எப்படி நம் தலைமை கருத்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து, எதிர்க்கட்சிகள் இதுபோல ஒரு கருத்து சொன்னால், ஏற்றுக் கொண்டிருப்பீர்களா?
யாரை ஏமாற்ற இந்த குட்டையை குழப்பும்வேலை?
அநாவசியமாக மோடிக்கு கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதையாவதுசொல்லி, மூக்குடைபட்டு நிற்க வேண்டாம்.
சேர்க் கத் தயாராக இருக்கிறோம்!
எம்.பி.சிவராமன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: 'கனவு காணாதீர்கள்'என்ற
தலைப்பில், ஒரு வாசகர் தன் ஆதங்கத்தை இப்பகுதியில் தெரிவித்து இருந்தார்.
சிந்திக்கும்
திறனை இழந்து, சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாகஇளைஞர்கள் இருக்கின்றனர்,
குவாட்டர் குடித்துவிட்டு வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர், அவர்களிடம்
நாட்டுப்பற்று,சமூக சேவை, கோவில் திருப்பணி போன்றவை எல்லாம் எடுபடாது
என்று,சமுதாயத்தின் மீது நம்பிக்கைஇழந்தது போல எழுதிஉள்ளார்.
நான்
ஒரு ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர்; சேர்ந்து 11 ஆண்டுகள் ஆகிறது. 10 ஆண்டுகளுக்கு
முன்இருந்ததை விட, எங்கள்பகுதியில், ஷாகா என்ற தொண்டர்கள்
எண்ணிக்கைஅதிகரித்துள்ளது; ஏராளமானபுதியவர்கள் இணைந்தபடி இருக்கின்றனர்.
சங்கத்தில்
புதிதாக இணையவிரும்புபவர்களுக்கு, 'ஜாயின் ஆர்.எஸ்.எஸ்.,' எனும் இணையதளம்
கூடஉள்ளது. அதில் ஒவ்வொருமாதமும், தமிழகத்தில் இருந்துமட்டும்,
நுாற்றுக்கணக்கானவர்கள் பதிவு செய்கின்றனர்.
புதிதாக
வருபவர்களுக்குஅறிமுக முகாம்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்
வாடிக்கையாக நடக்கிறது; இவற்றில் எண்ணிக்கை கூடி வருகிறது. இன்னும்
சொல்லப்போனால், ஒரு காலத்தில் தீவிரமாகஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்தவர்கள்
கூட, இன்று எங்களுடன்பயணிக்கின்றனர்.
அதே நேரத்தில், தமிழகத்தில்
உள்ள அனைத்துகிராமங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., இருக்கிறது என்று பொய்யாக ஒரு
பிம்பத்தை ஏற்படுத்தவும் விரும்பவில்லை. தமிழகத்தில்,80 சதவீத பகுதிகளில்
தற்போது வரை ஷாகா இல்லை; ஷாகா இல்லாவிட்டாலும், பல இடங்களில்சேவைப் பணிகள்
நடக்கின்றன.
வாசகர், சங்கம் வளரவில்லை என்று எழுதியதற்கு,அவர்
விபரம் அறிந்திருக்கவில்லை என்பதுடன், இன்னொரு காரணம் கூட இருக்கலாம்...
ஆர்.எஸ்.எஸ்.,அகில பாரத தலைவர் வந்தால் கூட, நாங்கள்போஸ்டர் ஒட்டுவதில்லை;
யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைப்பதில்லை.
நிவாரணப்
பணிகளின் போது, வாகனத்தில் சில பேனர்கள் வைப்பதுண்டு; அதுவும் அரசு
விதிமுறை காரணத்திற்காக. ஒன்று அல்லது இரண்டு போட்டோக்கள், ஆவணங்களுக்காக
வைப்போம்; அவ்வளவு தான்!
புதிதாக யார் வந்தாலும் சேர்க்கத் தயாராக இருக்கிறோம்;வாருங்கள்!
உருப்படியாக செய்வாரா உதயநிதி?
-அ.குணா,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாத்மாவை விடுங்கள்...
மற்ற தியாகிகளை விடுங்கள்... காந்தியின்மனைவி, மகன்கள் கூட, சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர்.காந்தியின்
மனைவி சிறைவாசப்பட்டு, உடல் நலம் குன்றி மரணத்தையேஎய்தினார்.
ஆனால் இவர்கள் யாருமே, அரச பதவிக்கு ஆசைப்பட்டு இதைச் செய்யவில்லை; தேச நலன்மட்டுமே பிரதானமாக இருந்தது.
தமிழகத்தில், சுதந்திரத்திற்காக போராடிய பலரும்அதேபோல தான்; ஆட்சி,பதவியை மனதில் கொண்டு சிறை சென்றதாக சரித்திரம் இல்லை.
அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.,வும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர்; அப்போதுகூட அவர்களுக்கு பதவி ஆசை ஏதும் எழவில்லை.
கருணாநிதி, சுதந்திரத்திற்குமுன்பே பிறந்தாலும், தேச விடுதலைக்காகப் போராடவில்லை.
தி.மு.க.,
தலைவராகி, ஆகி, முதல்வர் பதவியில் அமர்ந்த உடனேயே, குடும்பத்தினர்
அனைவரும்பதவி ஒட்டுண்ணிகளாகி விட்டனர். அன்று துவங்கிய இந்த ஒட்டுண்ணி
கலாசாரம்,இன்று ஆலமரமாய் அவர்கள் குடும்பத்தில் வேரூன்றி விட்டது.
இப்போது
புதிதாக பதவி ஏற்றிருக்கும் துணை முதல்வர் உதயநிதியால், தமிழகத்திற்கு
என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது? தி.மு.க., ஆட்சி அமையும்போதெல்லாம்,
அடிப்படைப் பிரச்னைகளிலும், அச்ச வாழ்க்கையிலும்தான் மக்கள் உழன்று
வந்துள்ளனர்.
இந்த மடையை மாற்றி, உதயநிதி, தமிழகத்திற்காக ஏதாவது
உருப்படியாகச் செய்தால் நல்லது; இல்லையேல், இந்த நுாற்றாண்டு,
தமிழகத்திற்கு சாபக்கேடு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.