sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

வெறுப்பு, திணிப்பு வித்தியாசம் தெரியலையா?

/

வெறுப்பு, திணிப்பு வித்தியாசம் தெரியலையா?

வெறுப்பு, திணிப்பு வித்தியாசம் தெரியலையா?

வெறுப்பு, திணிப்பு வித்தியாசம் தெரியலையா?

4


PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.மூர்த்தி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்தி மீது வெறுப்பு இல்லை; அதை திணிப்பதை தான் எதிர்க்கிறோம். மத்திய பா.ஜ., அரசின் மதவாதக் கொள்கைகளை தமிழகமும், கேரளாவும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்' என, கோழிக்கோட்டில் நடந்த 'மலையாள மனோரமா' பத்திரிகையின், இலக்கிய கலைதிருவிழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசி இருக்கிறார்.

கேரளாவில் உள்ள அனைவரும், பள்ளியிலேயே ஹிந்தி மொழியை ஒரு பாடமாக படித்து, அதில் தேர்ச்சியும் பெற்று, இன்று இந்தியா முழுதும் வேலை வாய்ப்பில் முதலிடம் பெற்றுள்ளனர்.

அந்த இடத்திற்கு சென்று உதயநிதி, வெறுப்பு, திணிப்பு என்று சம்பந்தம்இல்லாமல் பேசி, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ஏளனத்திற்கு இலக்காகி இருக்கிறார்.

நாங்கள் பள்ளியில் பயிலும்போது, ஹிந்தி ஒரு பாடமாக இருந்தது உண்மையே.ஆனால், தேர்ச்சி பெறுவதற்கு அந்த பாடத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

ஆனால், அதையே இந்த கழகத்தினர்திணிப்பு, வெங்காயம், வெள்ளைப்பூண்டுஎன்று கூறி, எங்களை மூளைச்சலவை செய்து, படிக்கும் பள்ளியின் மீதே கல்லெறியவைத்தனர்.

அதன் விளைவாக, இன்று நாங்களும், எங்கள் தலைமுறையினரும் கும்மிடிப்பூண்டிதாண்டி செல்ல முடியாத முட்டாள்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம்; வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லக்கூட அருகதைஅற்றவர்களாக, குண்டுசட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

சரி... திணிப்பு என்றால், என்னவென்று தெரியுமா?

தான் பெற்ற குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால், அது குணமாவதற்குரிய கசப்பு மருந்தை சங்கில் ஊற்றி, குழந்தையை மடியில் கிடத்தி, மருந்தை வலுக்கட்டாயமாக குழந்தையின் வாயில் புகட்டுவதற்கு பெயர்தான் திணிப்பு. அந்த திணிப்பும்கூட, குழந்தை நலம் பெற வேண்டும் என்ற அக்கறையில், தாய் செய்யும் நற்காரியம்தான்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 'தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஹிந்தியை பயிலுங்கள்' என்று அறிவுறுத்தியது, அவ்வளவுதான். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டன.

ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்த மூன்றாவது மொழி திட்டத்தை அரசியலாக்கி, தமிழர்களை முட்டாள்களாக்கி,இவர்கள் மட்டும் புத்திசாலிகளாக ஹிந்தி படித்து, டில்லியில் பதவி சுகத்தை அனுபவித்தனர். தற்போது, 'ஹிந்தி மொழியை நாங்கள் வெறுக்கவில்லை' என்று, 'கப்சா' விடுகின்றனர்.



பைக்கில் சென்று ஆய்வு செய்யுங்கள்!


அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்சாலையில் உள்ள பள்ளங்களுக்காக, தங்கள் வாகனங்களை வளைத்து, நெளித்து ஓட்டிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

சமீபத்தில், திருவண்ணாமலை - ஆரணி சாலையில்பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் சாலையின் நடுவில் இருந்த திடீர் பள்ளத்தை பார்த்து, தாங்கள் ஓட்டிச் சென்ற பைக்கை வளைத்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார் மோதி,சம்பவ இடத்திலேயே இறந்த செய்தியை பார்த்து,நெஞ்சம் பதைபதைத்துப் போனது.

இதுபோன்று,தினந்தோறும் பல்வேறு சாலைகளில் இப்படிப்பட்டவிபத்துகள் ஏற்படுவதற்குகாரணம், சாலை பள்ளங்கள்தான் என்பது உறுதியாகிறது. நெடுஞ்சாலை அதிகாரிகள் சிறுசிறு பள்ளங்களை மூடும் பணிகளை செய்வதே இல்லை. ஒட்டுமொத்தமாகபுதிய தார் சாலை அமைக்க மட்டுமே முற்படுகின்றனர்.

ஒப்பந்த விதிகளின்படி,ஐந்தாண்டுக்கு ஒருமுறை தான் புதிய சாலைகள் போட முடியும். அதுவரைபள்ளங்களை வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே,பல்வேறு உயிரிழப்புகள்ஏற்பட்ட பிறகும் வேடிக்கை பார்க்காமல் சின்ன சின்ன பள்ளங்கள் ஏற்படும்போது, உடனுக்குடன் அவற்றை மூடும் தலையாய பணியை நெடுஞ்சாலை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நெடுஞ்சாலைபொறியாளர்கள், 'ஏசி' கார்களில் செல்லாமல்,பைக்கில் சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளை மாதத்திற்கு ஒருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போதுதான், இதுபோன்ற பள்ளங்கள்கண்ணுக்குத் தெரியும்; மக்கள் படும் அவஸ்தையும் புரியும். இதுகுறித்து, அரசும் அதிகாரிகளுக்கு கறாராக உத்தரவிட வேண்டும்.

சாலை பள்ளங்களின்பாதிப்பை சரி செய்யாவிடில்,எதிர்காலத்தில் இன்னும் பல அப்பாவி உயிர்கள் பலியாவதுடன், பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வருவதும் உறுதி.

எனவே, மக்களை பாதுகாக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இனியாவது கண்ணை மூடிக்கொண்டு செல்லாமல், சாலைகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.



பாராட்டத் தான் போகின்றனர்!


கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, குமரிமாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சீனாவின் குள்ளநரித்தனம் குறித்து, இதே பகுதியில், 'குள்ள நரிசீனாவை அடக்கியமோடி' எனும் தலைப்பில், வாசகர் ஒருவர் எழுதி இருந்தார்.

ஒருவர் உயிரோடு இருக்கும் வரை, அவரதுநல்ல செயல்களை ஆதரிக்காமல், தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர் காலத்திற்குப் பின், அவரை பெருமையாக பேசுவதும் வாடிக்கையாகி விட்டது.

முன்பு, இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, லாகூரை இந்தியாவுடன் சேர்க்க பிரியப்பட்டார் சர்தார் வல்லபபாய் பட்டேல். அத்துடன் இந்திய - சீன எல்லைக்குட்பட்ட சில பகுதிகளையும், இந்தியாவுடன் இணைக்க பாடுபட்டார்.

ஆனால், அவரது கோரிக்கை எடுபடாமல்,நேருவின் குரலே ஓங்கிஒலித்தது.

அதன் விளைவு,இன்று வரை நாம் பாகிஸ்தானுடனும்,சீனாவுடனும், பிரச்னைகளைதொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

'சீனா துரோகம் செய்துவிட்டது' என, சீன - இந்திய போருக்கு பின், தலையில் அடித்துக் கொண்டார் நேரு.

சீனா, இன்றும் நமக்கு துரோகம் செய்கிறது என அறிந்தும், அந்நாட்டு பொருட்கள், நம் நாட்டு சந்தைகளில், சர்வ சாதாரணமாக விற்பனைஆகின்றன.

இன்று, நம் பிரதமர்மோடி எடுத்துள்ளமுயற்சிகளை, மோடி எதிர்ப்பு' எனும் ஒரேகொள்கைக்காக எதிர்ப்போர், வருங்காலத்தில் விளையப் போகும் நன்மைகளைப் பார்த்து, பாராட்டத் தான் போகின்றனர்.








      Dinamalar
      Follow us