PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய - மாநில அதிகாரங்களில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் தேவை' என, மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
மேலும், 'மத்திய -- மாநில அரசுகள் முரண்படாமல் ஒன்றையொன்று சார்ந்து, மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'படிப்பது ராமாயணம்; இடிப்பது ராமர் கோவில்' என்பது போல், எப்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி பிரமாணம் எடுத்தாரோ, அன்றிலிருந்து, மத்திய அரசுக்கு,'ஒன்றிய அரசு' என்று நாமகரணம் சூட்டி, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருபவர், இப்போது மத்திய - மாநில அரசுகளின் இணக்கம் குறித்து பாடம் நடத்துகிறார்.
'மத்திய அரசின் தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், அதன் கொள்கைகள், அதிகார சமநிலையை தங்களுக்கு சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன' என்றும் கூறியுள்ளார்.
இவர் இப்படி கூறக்காரணம், சமீபத்தில் பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி, 30 நாட்கள் சிறையில் இருந்தால், தானாக பதவி இழக்க வகை செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 130வது திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் தாக்கல் செய்தது தான்!
தற்போதுள்ள சட்டத்தின்படி, குற்ற வழக் கில் சிக்கிய அமைச்சர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் பட்டால் மட்டுமே பதவியை இழப்பர்.
அதனால் தான், அரவிந்த் கெஜ்ரிவால், செந்தில் பாலாஜி போன்றோர் சிறையில் இருந்தபடியே பதவி சுகத்தை அனுபவித்து வந்தனர். அப்படியான நடை முறையை ஒழித்துக்கட்டவே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டுப்பாடு இல்லாமல் திரியும் அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இம்மாதிரியான சட்டங்கள் தற்போதைய சூழ்நிலையில் கண்டிப்பாக தேவை என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, 'பிரதமருக்கு கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றவே அரசியலமைப்புச் சட்டத்தையும், அடித்தளத்தையும் களங்கப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது' என்று கூறி, தன்னை ஊழல்வாதியாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
மடியில் கனம் இருப்பவர்களுக்கு வழியில் பயம் இருக்கத் தானே செய்யும்!
மத்திய அரசின் தலையீடு இல்லாமல், மாநிலங்கள் முழு அதிகாரம் பெற்று இருக்குமேயானால், அரசியல்வாதிகள், இந்நேரம் நாட்டை கூறு போட்டு துபாய் ஷேக்குகளுக்கு விற்றிருப்பர்!
மக்களால் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல அரசியல் நிர்ணய சபை; அதில் திருத்தம் செய்யக் கூடாது என்று சொல்ல!
அதேநேரம், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வரலாம் என்பதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த சட்ட திருத்தங்களே சாட்சி!
எனவே, முதல்வர் புலம்புவதால் எந்த நன்மையும் விளையப்போவது இல்லை!
காதலுக்கு மரியாதை! என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன் விளை, கன்னியாகுமரி
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் ஜாதிய
ஆதிக்கம் தலை விரித்தாடுவதால் காதலுக்கு மரியாதை இல்லை; மாறாக, காதல்
திருமணம் செய்தவர்களை ஆணவக் கொலை செய்கின்றனர். அதை தடுத்து நிறுத்த
வேண்டும்...' என்று கூறியுள்ளார், மார்க் சிஸ்ட் கம்யூ., கட்சி
பொதுச்செயலர் சண்முகம்.
அத்துடன், நெல்லையில் மட்டும் ஓர்
ஆண்டிற்குள், 240 கொலைகள் நடந்துள்ளன. அதனால், காதலர்களுக்கு ஆதரவு தரவும்,
திருமணம் நடத்த இடம் தரவும் மார்க்., கட்சி தன் அலுவலகங்களை திறந்து
வைத்துள்ள தாகவும் கூறியுள்ளார்.
மாநிலத்தில் தீர்க்கப்படாத,
தீர்வு கிடைக்காத மக்கள் பிரச்னைகள் எத்தனையோ வரிசைகட்டி நிற்கும்
நிலையில், அதற்கான தீர்வு பெற வேண்டி அரசியல் செய்யாமல், காதலுக்கு மரியாதை
செய்ய கிளம்பியுள்ளதன் உள்நோக்கம் என்ன?
கூட்டணிக்குள் குழப்பம் வந்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணமோ!
காதலர்கள் திருமணம் புரிய இடம் தர தேவையில்லை; அதற்கு ஒரு கோவில், நாலு
நண்பர்கள் போதும். ஆனால், அவர்கள் உயிரோடு வாழ வேண்டுமே... அதற்கு பாது
காப்பு தருமா மார்க்சிஸ்ட் கட்சி?
எவர், எப்போது, எந்த பக்கத்தில்
இருந்து ஆயுதத்தோடு வந்து தாக்குவர் என, விழிப்பாக இருக்க வேண்டிய மரண
அவஸ்தையில் அல்லவா காதல் திருமணம் புரிந்தோர் வாழ்கின்றனர்!
அது சரி... காதலர்களுக்கு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டால் மட்டும் ஆணவக் கொலைகள் நின்று விடுமா என்ன?
எவருமில்லாமல் காற்று வாங்கும் மார்க்., கட்சி அலு வலகம், மக்கள் கூட்டத்தில் கலகலக்க இப்படியும் ஒருவழி இருக்கிறதே!
'ஷாக்' அடிக்கும் மின் கட்டணம்! ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: தமிழக மின்வாரியத்தில், கடந்த ஜூலை 2024 க்கு பின்,
மின் கட்டணத்தில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த அக்டோபர்
2024ல் கூட எங்கள் வீட்டிற்கான மின் கட்டணம், 2,443 ரூபாய் மட்டுமே
கட்டினோம். ஆனால், ஏப்ரல் 2025க்கு பின் வரும் கட்டணங்கள் தலை சுற்றவைக்கி
ன்றன.
இருமாத கட்டணமாக ஏப்ரலில், 3,060 ரூபாய் கட்டிய நிலையில்,
ஜூன் மாத கட்டணமோ, 7,228 ரூபாய். இந்த இரு காலகட்டங்களில் 'ஏசி'
உபயோகத்திலும் எந்த மாற்றமும் இல்லை.
இன்னும் சிலருக்கு, 17,000 ரூபாய் வரை பில் வருகிறதாம்.
இத்தனைக்கும் அவர்கள் இரு அறைகள் கொண்ட சாதாரண வீடு களில் குடியிருப்போர்.
நுகர்வோர் நீதிமன்றம் சென்றால், கண்துடைப்பிற்காக சிறு தொகை வாபஸ்
செய்யப்படுகி றதாம்.
இந்த மின்கட்டண கொள்ளை, தமிழக முதல்வரின் பார்வைக்கு வராமலா நடக்கிறது?
இதில், 'சொன்னதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம்' என்று பேச்சு ஜாலம் வேறு!
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்ன?
'இருமாத ரீடிங்குக்கு பதில், மாத ரீடிங் செய்வோம்' என்று சொன்னார் தானே...
நம்பி ஓட்டுப் போட்டதற்கு மக்களுக்கு கொடுக்கும் தண்டனையா இது?
அவசியம் என்றால், கட்டணத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாமே தவிர, மற்ற
மாநிலங்களில் இதைவிட அதிகம் என்று சாக்குபோக்கு சொல்வது என்ன நியாயம்?
இதை அரசு கண்டுகொள்ளவில்லை எனில், கடந்த 2011 சட்டசபை தேர்தலில்
தி.மு.க.,வின் தோல்விக்கு மின்வெட்டு காரணமாக இருந்தது போல், 2026
தேர்தலில் மின் கட்டண கொள்ளை தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பி வைப்பது
நிச்சயம்!