sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

 வீட்டிலேயே உண்டு, உறங்குங்கள் காங்கிரசாரே!

/

 வீட்டிலேயே உண்டு, உறங்குங்கள் காங்கிரசாரே!

 வீட்டிலேயே உண்டு, உறங்குங்கள் காங்கிரசாரே!

 வீட்டிலேயே உண்டு, உறங்குங்கள் காங்கிரசாரே!


PUBLISHED ON : ஜன 21, 2026 04:03 AM

Google News

PUBLISHED ON : ஜன 21, 2026 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.பி.குமார், சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 2002 குஜராத் கலவரத்தை விட கொடிய, 1992 - 93 மும்பை கலவரத்தின் போது, மஹாராஷ்டிர முதல்வர் யார் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா? அவர் பெயர், சுதாகர்ராவ் ராஜுசிங் நாயக்; காங்., கட்சியைச் சேர்ந்தவர்.

காங்கிரஸ் ஆட்சி நடந்த, உ.பி.,யில், 1987 ல் 350 பேரை பலி வாங்கிய, மல்லியானா மற்றும் மீரட் கலவரங்களையும்; பீஹாரில், 1989 துவங்கி, இரண்டு மாதங்கள் நீடித்து, நுாற்றுக்கணக்கானவர்களை பலி கொண்ட பாகல்பூர் அல்லது ஜாம்ஷெட்பூர் கலவரங்களையும் எல்லாருமே மறந்து விட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நடந்த நுாற்றுக்கணக்கான கலவரங்களும், காங்கிரஸ் ஆட்சிகளிலேயே நடந்தன. இதை யாராவது நினைவுபடுத்திக் கேள்வி எழுப்புகிறோமா?

கடந்த, 1984ல் இந்தியாவின் தலைநகரில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, டில்லியின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தவர் யார் என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா?

கடந்த, 2002 கலவரத்தின் போது, அனைத்து கொலைகளையும் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தியது போல், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியை பிசாசு அவதாரம் என்று வர்ணித்தனர். காங்கிரசார் நடத்திய கலவரங்களைப் பார்த்தால், யாரைப் பிசாசு என்று சொல்வது என்று யோசித்துப் பாருங்கள்!

கடந்த, 10 ஆண்டுகளில், குஜராத்தின் விவசாய வளர்ச்சி, 1,0-11 சதவீதம் என்று ஒருவர் கூறும்போது, ​அதை மறைக்கும் விதமாக காங்கிரசார், 2002 கலவரம் என்கின்றனர்.

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் ஆலையை உருவாக்கினார் மோடி என்று ஒருவர் கூறும்போது,​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!

இந்தியா முழுதிலும் உள்ள, 18,000 கிராமங்களுக்கு 24 மணி நேரமும், 365 நாட்களும் மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் என்று ஒருவர் கூறும்போது,​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்! அதிவேக ஒயர்லெஸ் பிராட்பேண்ட் வசதி இங்குள்ளது என்று சொன்னாலும், உடனே, காங்கிரசுக்கு பொல்லாப்பு தான்!

கடந்த, 2011ம் ஆண்டின், உலக வங்கியின் அறிக்கையின்படி குஜராத் சாலைகள் சர்வதேச தரத்திற்கு சமமானது என்று ஒருவர் கூறும்போது,​மற்றவர் 2002 கலவரம் என்கிறார்!

போர்ப்ஸ் ஆங்கில இதழும், ஆமதாபாதை, இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரம் என்று குறிப்பிட்டுள்ளது; ஆனால் ஒருவர், 2002 கலவரம் என்கிறார்.

மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தின் அறிக்கையின்படி, நாட்டிலேயே குஜராத்தில் வேலையின்மை விகிதம் குறைவாக இருப்பதாக ஒருவர் கூறும்போது,​மற்றொருவர் 2002 கலவரம் என்கிறார்!

ஏறக்குறைய அனைத்து சர்வே கருத்துக்கணிப்புகளிலும், தற்போதைய இந்தியத் தலைவராக நரேந்திர மோடி மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பொல்லாப்பு கொண்ட அனைவருக்கும் சொல்ல ஏதுவானது, 2002 குஜராத் கலவரம் மட்டுமே!

கீழே உள்ள பட்டியலில்...

காங்கிரஸிலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலும் நடந்த கலவரங்களைப் பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவோம்:

*1947 வங்கதேச பிரிவினைக் கலவரம் - ஆயிரக்கணக்கில் உயிர்கள் மாண்டன - காங்கிரஸ் ஆட்சி.

* 1967 ராஞ்சி மதக் கலவரம் - 200 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

*1969 ஆமதாபாத் மதக் கலவரம் - 512 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1970 பிவாண்டி மதக் கலவரம் - 80 பேர் மாண்டனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1979 ஜாம்ஷெட்பூர் மதக் கலவரம் - 125 பேர் இறந்தனர் - மார்க்., கம்யூ., ஆட்சி.

* 1980 மொராதாபாத் கலவரம் - 2,000 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1983 அசாமின் நெல்லி படுகொலை - 5,000 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1984 டில்லி சீக்கிய எதிர்ப்பு - 2,733 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1984 பிவாண்டி மதக் கலவரம் - 146 இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

*1985 குஜராத் மதக் கலவரம் - 300 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1986 ஆமதாபாத் மதக் கலவரம்- 59 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1987 மீரட் மதக் கலவரம் - 81 இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1989 பாகல்பூர் மதக் கலவரம் - 1,070 பேர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1990 ஹைதராபாத் மதக் கலவரம் - 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1992 மும்பை மதக் கலவரம் - 900 முதல் 2000 வரை இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

* 1992 சூரத் மதக் கலவரம் - 175 இறந்தனர் - காங்கிரஸ் ஆட்சி.

போதுமா பட்டியல்? மதக் கலவரங்களை உருவாக்குவதும், அதை வேடிக்கை பார்ப்பதும் காங்கிரசின் வேலை. மேற்சொன்னவற்றை படிக்கவோ, காது கொடுத்து கேட்கவோ, இப்போதைய காங்கிரசாருக்கு கண்ணும் இருக்காது; காதும் கேக்காது.

இவர்களை நம்பியா நாம் இனி சவாரி செய்யப் போகிறோம்? மிச்சம் மீதி இருக்கும் காங்கிரசார், வீட்டில் அமர்ந்து, நிம்மதியாக சாப்பிட்டு உறங்க மட்டுமே லாயக்குப்படுவர். அதற்கான வேலைகளைச் செய்வோம்!

தார்மீக உணர்வு இருப்பதாக தெரியவில்லை!


வீ.மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜல்லிக்கட்டு காளை பிடிக்கும் விளையாட்டில், வெற்றி பெறும் இளைஞர்களுக்கு, அரசு வேலை தரப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது, மக்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஏனெனில், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுபவர்கள் எல்லாம், உயர்படிப்பு படித்தவர்களாகவோ, மேல்தட்டு மக்களாகவோ இருக்க வாய்ப்பில்லை; எல்லாரும், மிகவும் சாதாரண மக்களே!

ஆனால், 2021ல் ஜல்லிக்கட்டு நடந்தபோது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டு விளையாடும் வீரர்களுக்கு, மாதம், 1000 ரூபாய் கொடுப்போம்' என, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராகவும், இப்போதைய முதல்வராகவும் உள்ள ஸ்டாலின் அறிவித்திருந்தார்; அது அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ, மறந்து விட்டதோ தெரியவில்லை.

தேர்தல் சமயத்தில், ஓட்டு பெறுவதற்காக, போகுமிடமெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தபடியே போக வேண்டியது; ஆனால், தேர்தல் முடிந்தபிறகு, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீக அடிப்படை உணர்வு கூட இல்லை என்பதை, கண்கூடாக பார்த்து விட்டோம். போதும்டா சாமி!






      Dinamalar
      Follow us