/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
வலியுறுத்தல் வேலைக்காகாது முதல்வரே!
/
வலியுறுத்தல் வேலைக்காகாது முதல்வரே!
PUBLISHED ON : அக் 28, 2024 12:00 AM

எஸ்.ஆர்.ஐயனார்,
கள்ளக்குறிச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழகத்தின்
இளைஞர்கள், மாணவர்கள் சமுதாயத்திற்கு,உங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவனாக,
உங்கள் தந்தையாக உருக்கமான ஒரு வேண்டுகோள்... போதையின் பாதையில் யாரும்
போகக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். போதை ஒழியட்டும்;பாதை
ஒளிரட்டும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின், போதை ஒழிய வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதல்வருக்கு ஒரு பணிவான ஆலோசனை என்னவென்றால், இந்த வலியுறுத்தல் போன்ற அறிவுரைகள் எல்லாம், வேலைக்காகாது என்பதுதான்.
கடந்த
2,000 ஆண்டுகளுக்கு முன், திருக்குறளில், 4வது அதிகாரம், 'அறன்
வலியுறுத்தல்' தலைப்பில் 10 குறள்களும்,128வது அதிகாரத்தில்,
'குறிப்பறிவுறுத்தல்' தலைப்பில் 10 குறள்களும் எழுதி,
திருவள்ளுவரேவலியுறுத்தி சென்றிருக்கிறார்.
உங்கள் தகப்பனார்
கருணாநிதி அவர்கள்எழுதியுள்ள, 'குறளோவியத்தில்' இந்த 20 குறள்களையும்,
தமக்கே உரிய பாணியில் வெகு அழகாக, நேர்த்தியாக, தெளிவாக, சுருக்கமாக,
சுவையாக கழகக் கண்மணிகளும்,உடன்பிறப்புக்களும் எளிதாக புரிந்து கொள்ளும்
வகையில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனால், இந்த அறிவுரைகளை தமிழக
இளைஞர்கள், மாணவர்கள், கழக கண்மணிகள், உடன்பிறப்புகள் கிஞ்சிற்றும்
பொருட்படுத்தாமல், உதாசீனப்படுத்தி விட்டனர்.
வள்ளுவரும்,
கருணாநிதியும் கூறிய அறிவுரைகளையே புறக்கணித்து புன்னகைபுரிந்து,
புளகாங்கிதம் அடைந்து கொண்டு இருப்பவர்கள், உங்கள் அறிவுரைக்கு
செவிமடுப்பரா... 'நெவர்!'
உங்களுக்கு உண்மையிலேயே நம் இளைஞர்கள்,
மாணவ - மாணவியர் மீது அன்பு, அக்கறை இருக்குமானால், 'புதுச்சேரியில்
மூடட்டும்; மத்திய அரசு நடவடிக்கை எடுக்கட்டும்; ஆந்திரா, தெலுங்கானா,
கர்நாடகா, கேரளா, கோவா, மஹாராஷ்டிராவில் மூடட்டும்' என்று பிற
மாநிலத்தையும், மத்திய அரசையும் சுட்டிக் காட்டாமல், தமிழக மது
ஆலைகளையும்,டாஸ்மாக் கடைகளையும், ஒற்றை கையெழுத்தில் மூட ஆணையிடுங்கள்.
அதைவிடுத்து, அறிவுரை கூறுகிறேன், வலியுறுத்துகிறேன் என்றெல்லாம் கூற வேண்டாம்.
வலியுறுத்தல் ஒருபோதும் வேலைக்கு ஆகவே ஆகாது!
ஒதுங்கி போவதே உத்தமம்!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,எந்தவிதமான தடுமாற்றமோ,குழப்பமோ இன்றி சரியானஎதிர்க்கட்சியாக செயல்பட்டுவருகிறது. பன்னீர்செல்வமோ, தினகரனோ, சசிகலாவோ இல்லாததால் அக்கட்சியில் எள் அளவும்பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், அ.தி.மு.க.,வுக்கு சம்பந்தமில்லாத சிலர்அக்கட்சியில் பிளவுஏற்பட்டது போன்று, 'அ.தி.மு.க., இணைய வேண்டும்' என, ஊடகங்களிலும், பொதுவெளியிலும் மாறி மாறி கூறி வருகின்றனர்.
பழனிசாமியோ, 'விலக்கியவர்கள் விலக்கியவர்கள்தான்' என்று மிகவும் தெளிவாகக் கூறி விட்டார்.'கறந்த பால் என்றுமே மடிபுகாது' என்பது போன்று, விலக்கியவர்களை மீண்டும்அழைத்து, தன் தலையில்அமர வைப்பதற்கு பழனிசாமி ஒன்றும் விபரமில்லாதவர் கிடையாது.
அ.தி.மு.க.,வில் நம்பர்1 ஆக இருப்பவர், அவர்களை உள்ளே இழுத்துவிட்டு, மூன்று, நான்காம் இடத்திற்கு இறங்கிப் போகவும் முடியாது. தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வுக்கு உள்ள சொத்துக்கள் மீது கண் வைத்தே, பலரும் அக்கட்சியைக் கைப்பற்றத்துடிப்பது நன்றாகதெரிகிறது.
எனவே, பன்னீர்செல்வம்,சசிகலா ஆகியோர்,தினகரன் கட்சியில் இணைந்து அரசியல் செய்யலாம் அல்லது அவர்கள் இருவரும் புதிதாகஒரு கட்சியே துவங்கலாம்.வெட்டியாக புது கட்சி துவக்கி பணத்தை செலவு செய்ய வேண்டாம் என நினைத்தால், பா.ஜ.,வில் இணைந்து, தங்களிடம் உள்ள சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தாங்கள் தெய்வமாக மதிக்கும் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெ., சிரமப்பட்டு வளர்த்த கட்சியை அழிக்க எண்ணாமல், பழனிசாமி வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கிப் போவதே உத்தமம்.
எ ம்.ஜி.ஆர்., கொண்டாடப்படுவது இத னால் தான்!
சி.சிவஆனந்தன், சென்னை யிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
என்ஆரம்பப்பள்ளி நாட்களில், எம்.ஜி.ஆர்., ஆட்சி நடந்தது.விடுமுறை நாட்களில் கூட,மதிய உணவு போடுவர்.
அப்போது, கூட்டாஞ்சோறு போல இல்லாமல், சோறு வைத்து குழம்பு ஊற்றுவர்; விரும்பிய மாணவர்கள் சாப்பிடலாம். வரும் மாணவர்களின் எண் ணிக்கை, ஊழியர்களுக்குதெரியும் என்பதால், அதற் கேற்ப தயார் செய்வர்.
இந்த வழக்கம் எப்போதுவழக்கொழிந்தது என்று தெரியவில்லை.
அரசால் சான்றளிக்கப்பட்ட, அங்கீகாரம் வழங்கப்பட்ட சமையல் கம்பெனிகள்மூலம், பொதுமக்களும் இந்த திட்டத்தில் இணையலாம் என, அரசு அனுமதிஅளித்தால், பிறந்த நாளை சிறுவர்களுடன் கொண்டாடவிரும்பும் பல வசதி படைத்தவர்கள் மூலமாக, நல்ல வகையான உணவும்,ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும்.
தற்போதைய துணை முதல்வர் உதயநிதி சுறுசுறுப்பாக பல இடங்களில் ஆய்வு செய்கிறார்; இதையும் கவனிக்கலாம். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தராத நல்ல பெயரை, மக்கள் நலன் சார்ந்த ஏதாவதொரு சாதாரண திட்டம் பெற்றுத் தரும்.
எம்.ஜி.ஆர்., காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறார் என்றால், இது போன்ற சில காரணங்களால்தான்!
இவர்கள் வாழ்த்து இல்லையெ னில் கொண்டாட்ட மே கிடையாதா?
வி.ரகுநாதன், சென்னையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
சித்திரைக்கு பின் முடிந்த பல பண்டிகைகளுக்குப் பிறகு, இன்னும் சில நாட்களில் தீபாவளி கொண்டாட இருக்கிறோம்.
எல்லா பண்டிகைகளுக்குமுன்னும், அந்த நாட்களிலும், எல்லா கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. அந்தந்த பண்டிகை நாட்களில், அதற்குரிய வழிமுறைகளில்சிறப்பாக கொண்டாடியபடி தான் இருக்கிறோம்.
உறவினர்கள், நண்பர்கள்ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், அக்கம்பக்கம் உள்ளவர்களுடன், இனிப்பு மற்றும் பிற தின்பண்டங்களை பகிர்ந்து கொண்டும், கோவில்களுக்கு சென்று வழிபட்டும் கொண்டாடிவருகிறோம். பிறகு ஏன்,ஒரு சிலரிடமிருந்து வாழ்த்துவரவில்லை என்று ஏங்க வேண்டும்?
அவர்கள் வாழ்த்து சொல்லாவிட்டால் நமக்கு பண்டிகை சிறக்காதா என்ன? அவர்கள், நமக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றாலும், வீட்டில்ரகசியமாக எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி, லேகியம்- பலகாரம் சாப்பிட்டு பட்டாசு வெடித்து கொண்டாடாமல் இருக்கப்போவதில்லை.
அரசியல் செய்வதற்கு, அவர்களுக்கு தெரிந்த வழி அது தான் என்றால், நாம் எதற்கு விசனப்பட வேண்டும்?
அவர்கள் போல் அல்லாமல், பொதுவெளியில்மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம் தீபாவளியை!