PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

சா.பா.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.,கட்சி சில நாட்களாக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும்நிலையில், தற்போது, மா.கம்யூ., கட்சியும் கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க, இதுபோன்று ஆளும் கட்சியை, அதன் கூட்டணிக் கட்சிகள் அவ்வப்போது சாடிக் கொண்டே தான் இருக்கும்.
அப்போதுதானே கூட்டணி பேரத்தின்போது, அவர்கள் கேட்கும் தொகுதிகளை மறுக்காமல் கொடுப்பர்!
இங்கு கொள்கை ரீதியாகவா கூட்டணிகள் உருவாகின்றன... எத்தனை தொகுதிகள், செலவுக்கு பணப்பெட்டி எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டல்லவாகூட்டணி சேர்கின்றனர்!
அதனால் தானே, ஒரு அநியாயம் நடந்தால், தங்கள் கூட்டணிக் கட்சி என்றால், வெண் சாமரம் வீசுவதும்,எதிர்க்கட்சி என்றால், புழுதி வாரி இறைப்பதும்,இவர்களின் தலையாக வேலையாக உள்ளது!
இவைகள், மக்களுக்காக உருவான கட்சிகள் அல்ல; தனி நபர்களால் நடத்தப்படும் அரசியல் கம்பெனிகள்!
இந்த கம்பெனி ஓனர்கள், தேர்தல் நெருங்கும் சமயம், இதுபோன்று எதிர்ப்பு நாடகம் நடத்துவதை, பல காலமாக தமிழகமக்கள் பார்த்துக் கொண்டு தான் வருகின்றனர்.
அதனால், வி.சி., - மா.கம்யூ., கட்சிகள் நடத்தும் எதிர்ப்பு எனும் நடிப்பை, படிக்காதபாமரர்கள் கூட நம்ப மாட்டார்கள். போதும் உங்கள் நடிப்பு!
அடக்கி வாசிப்பது நல்லது!
கே.சுப்பு,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., ஆட்சியை
அகற்றும்வரை செருப்பு அணிய மாட்டேன்என்கிறார், அண்ணாமலை;இனி, அவர்
எக்காலத்திலும்,செருப்பு அணியப் போவதில்லை' என்று, தி.மு.க., அமைப்புச்
செயலர் ஆர்.எஸ்.பாரதியும், சட்ட அமைச்சர் ரகுபதியும் கேலிசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட
ஒருபெண்ணிற்காக,அண்ணாமலை, தன்னைத்தானே சாட்டையால்
அடித்துக்கொண்டதையும்,தி.மு.க., ஆட்சியை அகற்றசபதமும் எடுத்ததையும் கேலி
செய்யும் தி.மு.க.,வினர், கொஞ்சம் அரசியல்வரலாற்றை திரும்பிப் பார்க்க
வேண்டும்...
இதேபோன்று தான், 1993ல் மே.வங்கத்தின் நாடியா எனும்
மாவட்டத்தில், காது கேளாத, வாய்பேச முடியாத ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டாள்.
'அரசியல் தொடர்பு காரணமாகவே குற்றவாளிகைது
செய்யப்படவில்லை'என்று குற்றம்சாட்டி, அன்றைய முதல்வர் ஜோதிபாசுவின்
அறைமுன், சிறுமியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார், அன்று, மத்தியஇணை
அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி.
அவர்களை வெளியேற்றமுயன்ற
காவலர்கள், படிக்கட்டுகளில் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றபோது,
இருவரின்ஆடைகளும் கிழிந்தன.அப்போது, மம்தா ஒரு சபதம் செய்தார்...
'முதல்வரான பின்தான்,மறுபடியும் இங்கு காலடி எடுத்து வைப்பேன்' என்று!
அதே
வைராக்கியத்தில், தேர்தல்களை சந்தித்தவர், பல தோல்விகளுக்குப்
பின்,2011ல், சட்டசபை தேர்தலில் வென்று, கம்யூ.,ஆட்சிக்கு முடிவுகட்டி,
18ஆண்டுகளுக்குப் பின், சட்டசபை கட்டடத்திற்குள் முதல்வராக நுழைந்தார்.
தி.மு.க.,வினர்மற்றொன்றையும் நினைவில்கொள்ள வேண்டும்...
கடந்த
1989, மார்ச் 25ல்,அப்போதைய முதல்வர்கருணாநிதி, நிதிநிலை அறிக்கை தாக்கல்
செய்யும்போது, அதுகுறித்து ஏற்பட்டஅமளியில், ஜெயலலிதாமுடியைப் பிடித்து,
துச்சாதன வேலைகளில்ஈடுபட்டதும், சட்டசபையைவிட்டு வெளியே வந்தஜெயலலிதா,
தலைவிரி கோலத்துடன், 'முதல்வராகத்தான் இந்த சட்டசபைக்குள் மீண்டும்
திரும்புவேன்'என்று சபதம் போட்டதை,தி.மு.க.,வினர் மறந்திருந்தாலும், தமிழக
மக்கள்மறந்திருக்க மாட்டார்கள்.
சொன்னது போன்று, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 1991ல் தமிழக முதல்வர் ஆனார், ஜெயலலிதா.
அதனால்,
அண்ணாமலையின் சபதத்தை அவ்வளவு எளிதாக எடைபோட வேண்டாம்; ஜெயலலிதா மற்றும்
மம்தாவை போல, ஒருநாள், அண்ணாமலையின் சபதமும் நிச்சயம் நிறைவேறும்!
எனவே, தி.மு.க.,வினர்,வரலாற்றை நினைவில் வைத்து, அடக்கி வாசிப்பது நல்லது!
செயல் இழந்த காம்ரேடுகள்!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்'
கடிதம்:---------------இந்திய கம்யூ., கட்சி மற்றும் ஆர்.எஸ் எஸ்.,அமைப்பு
கடந்த, 2024லிருந்து நுாற்றாண்டுதுவக்கவிழாவை கொண்டாடி வருகின்றன.
இவை
இரண்டும் கடந்து வந்த பாதையையும்,இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப்
பார்த்தால் மடுவுக்கும், மலைக்குமானவித்தியாசத்தைக் கண்டு மலைப்பு
ஏற்படுகிறது.
கடந்த 1951 - -52 காங்., ஆளும் கட்சியாக இருந்தபோது, கம்யூ., தான், பிரதான எதிர்க்கட்சி!
இன்று பார்லிமென்டில்,பா.ஜ.,வுக்கு மட்டும், 240 எம்.பி.,க்கள் இருக்க, இடதுசாரிகளுக்கு வெறும், 8 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலைக்கு என்ன காரணம்...
கடந்த 1950களில் தொழில் புரட்சி காரணமாக,தொழிற்சாலைகள் பெருகின;இடதுசாரி மனோபாவம் மிக்க தொழிலாளர்கள் இயல்பாக அதிகரித்தனர்.
இதனால்,
தொழில் நகரங்களான மும்பை, அஹமதாபாத், கோல்கட்டா, புதுடில்லியில் கம்யூ.,
கட்சி வேரூன்றியது.1980 க்குப் பின், பல்வேறுஇடங்களில் இருந்து
வரவைக்கப்பட்ட உபரி பொருட்களை, 'அசெம்பிள்'செய்யும் கேந்திரமானது, பல
தொழிற்சாலைகள்.
இதன்காரணமாக, அமைப்புசாரா தொழிலாளர்களின் வருகை,
இடதுசாரிகளை அரசியலை விட்டு ஓரம் கட்டியது. அதேநேரம்,கம்யூ., கட்சியினர்
கவனிக்கமறந்த கலாசாரம், பாரம்பரியம் மீது ஆர் எஸ்.எஸ்.,கவனம் செலுத்தி,
மக்களைஈர்த்தது.
அத்துடன், ஆட்சியாளர்களின் அடக்கு
முறைகளைஎதிர்த்து, வெகுஜன இயக்கம் கண்ட காம்ரேடுகள்இன்று, பதவிக்கும்,
பணத்துக்கும் விலை போய் விட்டனர். பாட்டாளிகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட
மக்களுடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பு, இப்போது இல்லை என்பதே உண்மை!
அன்று, உண்மையான சமூக சீர்திருத்தவாதிகளாகவும், பாட்டாளி வர்க்கத்தின் காவலனாகவும்திகழ்ந்தனர், கம்யூ., கட்சியினர்.
இன்று அப்படியா இருக்கின்றனர்?
ஆளும் கட்சிக்கு காவடிதுாக்கவே காம்ரேட்டுகளுக்குநேரம் இல்லை.
அதே
நேரம், வலதுசாரிஅமைப்புகளோ தொண்டர்களுடன் முழு நேரம் செலவிடுகின்றன;
ஆளுமைபயிற்சி அளிக்கின்றன;அதன் காரணமாக, கட்சியின்உள்கட்டமைப்பு
வலுவாகஉள்ளது!
பொதுவாகவே, இன்று உலக அளவில் அரசியல் மற்றும் சமூக பார்வை வலதுசாரி சிந்தனையாக மாறி வருவது ஆச்சரியம்!
இந்தியாவும்
அதற்கு விதிவிலக்கல்ல; அதனால் தான், இன்று பா.ஜ., மூன்றாம் முறை ஆட்சி
அமைத்துள்ளது. கம்யூ., கட்சியோ, அரசியல் எனும்சுழலுக்குக்குள் சிக்கி, மீள
வழிதெரியாமல் தவிக்கிறது.
இனி, கம்யூ., எழ வாய்ப்பே இல்லை!