PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

எஸ்.ஸ்டீபன், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஆர்.எஸ்.எஸ்., -மற்றும்பா.ஜ., வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து,தமிழக காங்கிரஸ் சார்பில், 'இண்டியா' கூட்டணி கட்சியினர், சென்னையில்நடத்திய கண்டன கூட்டத்தில்பேசிய, தி.மு.க., துணைப் பொதுச்செயலர்கனிமொழி, 'பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை, வெறுப்பு அரசியல்விதையை விதிக்கின்றன. அந்த விதைகளைவேரறுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை காப்பாற்ற முடியும்.
'பா.ஜ., பொய்யை முன்வைத்து, வெறுப்பு அரசியல் செய்கிறது. ராகுல், அன்பில் அரசியல் செய்கிறார். உ.பி., குஜராத் மாநிலங்களில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு மாட்டுக்கறி அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடத்தும் பள்ளி பாடப்புத்தகங்களில், 'காந்தி விபத்தில் இறந்தார்' என கற்பிக்கப்படுகிறது.
'ராகுல், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட'இண்டியா' கூட்டணி தலைவர்கள், பா.ஜ.,வினரின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்கள்' என, உருட்டு உருட்டி இருக்கிறார்.
கருணாநிதி குறித்து பள்ளிப்பாட புத்தகங்களில், தி.மு.க., வெளியிடும் தகவல்களை வெளியிட்டால் அபத்தமாக இருக்கும். நமக்கு நினைவு தெரிந்த வரையில்,டுபாக்கூர் அரசியல் செய்து, பொய்களை நேரம் தவறாமல் வாய்க்கு வந்தவாறு பரப்பிக் கொண்டிருப்பது, தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே!
ஓராண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா -- உக்ரைன் போரை, சமாதானப் பேச்சு வாயிலாக நிறுத்த, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைத்தான் நம்பி இருக்கின்றனரே தவிர, ராகுலையோ, ஸ்டாலினையோ, 'இண்டியா' கூட்டணி அரசியல் கட்சி தலைவர்களையோ அல்ல.
குடிக்கும் குடிநீர் தொட்டியில்,மனித மலக்கழிவுகள் கலந்த நிகழ்ச்சி நடந்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அதை கலந்த சமூக விரோதியைகண்டுபிடித்து தண்டிக்க துப்புஇல்லாத ஆட்சிதான் தமிழகத்தில்மூன்றாண்டுகளாக நடந்து கொண்டுஇருக்கிறது. இந்த லட்சணத்தில், நீங்கள் நாட்டை காப்பாற்ற போகிறீர்களா?
'ராகுல், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட'இண்டியா' கூட்டணி தலைவர்கள், பா.ஜ.,வின் உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டார்கள்' என்றும் கனிமொழிகலாய்த்து இருக்கிறார்.
பா.ஜ., கட்சி, ராகுல், முதல்வர் ஸ்டாலின்உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் ஒருவரையும் உருட்டியதாகவோ,மிரட்டியதாகவோ நமக்கு தெரியவில்லை; வழக்கமாக இவர்கள் புளுகும் புரட்டுக்களில் இதுவும் ஒன்று என்று கடந்து போகவும் இயலவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும், 'மனசாட்சி'என்று ஒன்று உண்டு. யாருடையை உருட்டல், மிரட்டலுக்கும் பயப்படவில்லை என்றாலும், அந்த மனசாட்சிக்குபயந்து தான் ஆக வேண்டும்.
'நெஞ்சுக்கு தேவை மனசாட்சி; அத்தனைஉண்மைக்கும் அவன் சாட்சி' என, எம்.ஜி.ஆர்., படப் பாடல் ஒன்று தான்நம் நினைவில் ஊசலாடுகிறது!
அமைச்ச ருக்கு அழகல்ல!
செ.சாந்தி,
மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்ட
அமைச்சர், புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், '2016ல்
பூரண மதுவிலக்கு என்று, தி.மு.க., தேர்தல் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அன்றைய தேர்தலில், இந்த கருத்தை
கூறியதாலேயே 20- - 30 இடங்களை இழந்தோம் என்ற கருத்து உள்ளது' என்று
கூறியுள்ளார்.
'மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று கூறியதால்,
திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள தொழிலாளர்கள்,
தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர்' என்று பேட்டி அளித்து உள்ளார்.
கடந்த,
2016ல் நடந்த தேர்தலில் என்ன... 2021ல் நடந்த தேர்தலில்கூட, அமைச்சர்
குறிப்பிடும்பகுதிகளில், அ.தி.மு.க., தான்அதிக இடங்களை வென்று,தி.மு.க.,வை
மண்ணை கவ்வ வைத்தது.
தமிழகத்தில், 23 ஆண்டுகாலம் அமலில் இருந்த
மதுவிலக்கு, கருணாநிதி ஆட்சிக்காலத்தில், 1971, ஆக., 30ல் ரத்து
செய்யப்பட்டது. அதன்பின், பல தேர்தல்களில் தி.மு.க.,தோல்வி
அடைந்திருக்கிறது;அதற்கெல்லாம் மது விலக்காகாரணமாக அமைந்தது?
அ.தி.மு.க.,
துவங்கியபின், கொங்கு மக்கள்எப்போதுமே எம்.ஜி.ஆரையேஆதரித்தனர்; அவருக்கு
பின்,ஜெயலலிதா, பழனிசாமி என்று தொடர்ந்து அ.தி.மு.க.,வை தான்
ஆதரித்துவாக்களித்து வருகின்றனர்.
'தி.மு.க., வின் இரும்புக்கோட்டை'
என்று வர்ணிக்கப்பட்டசென்னையையும், அதைச்சுற்றியுள்ள தொகுதிகளையும்வென்று
காட்டி, அந்த இரும்புக் கோட்டையை தகர்த்தவர் எம்.ஜி.ஆர்.,
'மதுவிலக்கை
அமல்படுத்துவோம்' எனக் கூறியதால், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட
இடங்களில் உள்ள தொழிலாளர்கள், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தனர் என்று
கூறிஇருப்பது, அப்பகுதியில்உள்ள தொழிலாளர்களை, குடிகாரர்களாகசித்தரிப்பது
போன்றது; இது அமைச்சருக்கு அழகல்ல.
கழகக் கண்மணிகளுக்கு யார் ஓட்டு போடுவர்?
ராமானுஜதாசன்,சென்னையிலிருந்து
அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: இனிமேல் தமிழகத்தில்மஹாத்மா காந்தியே
வந்து, கள்ளுக்கடைக்கு எதிராகமறியல், சத்தியாக்கிரகம்செய்தாலும், யாரும்
அதையெல்லாம் மூடி விட மாட்டார்கள்.
மதுபான ஆலை முதலாளிகளான,
தி.மு.க., - அ.தி.மு.க., பெரும்புள்ளிகள், 'உடன்பிறவாசகோதரி' என்ற
அடைமொழியுடன் உலாத்தும் சின்னம்மா ஆகியோருக்குசொந்தமான வெளிநாட்டு
சரக்குகளின் பெயரில்,உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் மூல
உற்பத்திதலங்களில், மூன்று ஷிப்டுவேலையில் பரம சவுக்கியமாக சரக்கு
உற்பத்திநடக்கும் வேளையில், மதுவிலக்கு சாத்தியமா?
சத்தியாக்கிரகத்துக்கு காந்தி அமர்ந்தால், குண்டர்சட்டம் போட்டு, 'உள்ளே'தள்ளி விடுவர்.
டாஸ்மாக் சரக்கு கிடைக்காத இடங்களில், மறைவு ரூம் போட்டு கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறதே!
இனி
தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலும், அப்பா, அண்ணன்,
தம்பி என்ற ஆண் மக்களே இல்லாத நிலை ஏற்பட்டு,மக்கள்தொகை கணிசமாககுறையும்.
அதை, 2030ம் ஆண்டிலேயே குறிப்பிடத்தக்கஎண்ணிக்கையில் காணலாம்.
ஆள்
பற்றாக்குறையைத்தவிர்க்க, பீஹார், ஜார்க்கண்ட், மேகாலயா, மணிப்பூர், மேற்கு
வங்கம்,அசாம், மிசோரம் பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், நேபாளம்,
வங்கதேசம் உள்ளிட்ட நாட்டு மக்களும் தாராளமாக இங்கே வேலை செய்ய அழைப்பு
கிடைக்கும்.
ஆக, தமிழ் பேசும் சிறுபான்மையினர் குறைந்து விடுவர். அப்படியெனில், கழகக் கண்மணிகளுக்கு யார் ஓட்டுபோடுவர்? சிந்திக்கணும் சார்!