PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

ஆர்.காந்தன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின்,'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர எதிர்க்கின்றன.
நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், கள்ள ஓட்டு போடுதல், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், இறந்தவர்கள் பெயரில் கட்சிக்காரர்கள் ஓட்டுப் போடுவதுபோன்ற தில்லுமுல்லும், தில்லாலங்கடி வேலைகளையும் செய்து வெற்றி பெற முடியாது என்பதே, இந்த எதிர்ப்பிற்கு மிக முக்கிய காரணம்.
கடந்த, 1960 வரை நாடு முழுதும், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்கள் ஒரே நேரத்தில் தான் நடைபெற்று வந்துள்ளன. அதையே திரும்பக் கொண்டு வர வேண்டும் எனும் போது, எதற்கு எதிர்க்க வேண்டும்?
ஜன் சுராஜ் கட்சி தலைவரும், முன்னாள் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், 'கடந்த 1960 வரை, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதை, மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றனர்.நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டால் நாட்டுக்கு நல்லது' என்று கூறி வரவேற்றுள்ளார்.
மறைந்த தி.மு.க., தலைவர் மு.கருணாநிதி கூட, ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை உயிருடன் இருந்த போதே வரவேற்றுள்ளார். ஆனால், அவரது தவப்புதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தைகடுமையாக எதிர்க்கிறார். கருணாநிதியை விட அரசியல் சாணக்யத்தனம் நிறைந்தவரா ஸ்டாலின்?
சட்டசபைகளுக்கும், பார்லிமென்டுக்கும்ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்ததை கெடுத்து குட்டிச் சுவராக்கியது, இதே காங்., கட்சி தான்!
உப்புச் சப்பு பெறாத காரணங்களுக்காக, மாநில ஆட்சிகளைக் கவிழ்த்து, சட்டசபைகளை கலைத்ததன் விளைவாக, அங்கு சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி வந்தது. அதன் விளைவு, பார்லிமென்ட்டுக்கு ஒரு முறையும், சட்டசபைக்கு ஒரு முறையும் என, இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் சூழல் வந்தது. இன்று, சட்டப் புத்தகத்தை துாக்கிக் கொண்டு திரிகின்றனர், காங்., தலைவர்கள்!
வெட்கமாக இல்லையா?
நாடு சுதந்திரம் அடைந்தவுடன், 'காங்., கட்சியை கலைத்து விட வேண்டும்' என்றார், காந்திஜி.
அவர், ஒரு தீர்க்கதரிசி...
அன்று, காங்., கட்சியை கலைத்திருந்தால்,அக்கட்சியை தங்கள் குடும்பச் சொத்தாக ஒரு குடும்பம் நினைத்துக் கொண்டிருக்காது.இந்தியா என்றோ வல்லரசு நாடாக ஆகி இருக்கும்!
விஜயின் தப்பு கணக்கு!
என்.வைகை
வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வினர்
போடும் கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில்,மக்கள் ஒன்றுமில்லாமல்
ஆக்கிவிடுவர்' என்கிறார், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்.
தமிழக மக்களின் மனநிலை தெரியாமல் பேசுகிறார். ஓட்டை எப்படிவிலைக்கு வாங்குவதுஎன்ற வித்தை தெரிந்தவர்கள், திராவிட கட்சியினர்.
அத்துடன்,
எதிர்க்கட்சிகளான, அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க.,
போன்றவை,மிகவும் பலவீனமாக இருப்பதால், தி.மு.க., கூட்டணி, 200 இடங்களில்
வெற்றி பெறுவதுஒன்றும் கடினமானகாரியம் அல்ல!
தி.மு.க.,
கூட்டணியைஎதிர்த்து, விஜய் கட்சி வெற்றிபெற முடியாது என்பதுடன், நாம்
தமிழர் கட்சி போல, த.வெ.க.,வும் பல தொகுதிகளில் டிபாசிட் வாங்குமா என்பதே
சந்தேகம் தான். இதில், தி.மு.க., குறித்து விஜய் போடுவது, பெரும் தப்புக்
கணக்கு!
வரும், 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், விஜயின்
எதிர்பார்ப்புக்கு பெரிய ஆப்பு வைக்கும் போது தான் தெரியும், தி.மு.க.,வின்
பலம் என்ன என்பது!
அப்போது, 'ஏண்டா அரசியலுக்கு வந்தோம்' என நினைத்து, நொந்து போகப் போகிறார்.
எம்.ஜி.ஆர்.,
அரசியலில் அடைந்த வெற்றியை, எந்த சினிமா நடிகரும்பெற முடியாது
என்பதற்குமற்றும் ஓர் உதாரணமாக விளங்கப் போகிறார், விஜய்!
பச்சோந்தி குணம் வேண்டாம்!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., பாணியில் அரசியல் செய்யும் திருமாவளவன், ஹிந்து கோவில்களை
நக்கல் செய்வது, வழிபாட்டு முறையை இகழ்ந்து உரைப்பது, சனாதனத்தை அழிக்க
வேண்டும் என்றெல் லாம்சூளுரைப்பார்.
தேர்தல் நெருங்கி விட் டாலோ, பய பக்தியுடன், கோவில்கோவிலாக ஏறுவார்.
இத்தகைய
விசித்திரகொள்கை பிடிப்பு கொண்ட திருமாவளவன்,'எட்டாத பழத்திற்கு கொட்டாவி
விடக் கூடாது' என்ற நிதர்சனம் புரிந்து, முதல்வர் கனவை துார வைத்து
விட்டு, இரு திராவிடக் கட்சியின் தயவில் காலம் கடத்தி வந்தவரின் வாழ்வில்,
வசந்தமாக வந்தவர் தான், ஆதவ் அர்ஜூனா.
கடந்த 2021 சட்டசபை தேர்தல்
வரை, தி.மு.க.., தேர்தல் வியூக குழுவில் இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சி
தலைமை ஒதுக்கியதால், வி.சி., கட்சியுடன் கைகோர்த்து, அக்கட்சியின் துணை
பொதுச்செயலர் ஆனார்.
வி.சி.,கட்சி இன்னும் உயிரோட்டமாகத் தான்
இருக்கிறது என்று காட்டிக்கொள்ள, கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மகளிர்
மாநாடு நடத்தினார்; அதுவும்,விடியல் கூட்டணியில் இருந்தபடியே!
அம்மாநாடு
கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட போது, 'எங்களுக்கும், தி.மு.க.,வுக்கும்
மதுக் கடைகள் நடத்துவதில் விருப்பமில்லை; காலப்போக்கில் மது விலக்கு வரும்'
என, பூசி மெழுகுவது திருமாவளவனின் வேலை ஆனது.
அத்துடன் விட்டாரா
ஆதவ்... 'ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும். ஏன் திருமாவளவன்
முதல்வர் ஆக கூடாதா?' என தி.மு.க.,வை சீண்டியும், திருமாவை உசுப்பேற்றியும்
விட்டார்.
துாங்கிக் கொண்டிருந்த திருமாவின் முதல்வர் கனவு
பட்டென்று விழித்துக் கொண்டது. 'ஆட்சியில் பங்கு என்பது, கட்சி துவங்கிய
நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்' என, தி.மு.க.,வை சமாளித்தாலும்,
'எத்தனை காலம் தான் அடங்கியே கிடப்பது...' என, தன் கட்சியினர் மத்தியில்
பொங்கினார்.
'மீசைக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை' என்பது போல், ஆதவ்
அருகில் நிற்கும்போது, முதல்வர் கனவிலும், தி.மு.க., பக்கம் நின்றால்,
'அப்படியே மன்னா' என்பது போலவும் மாறி மாறி பேசி வந்த நிலையில் தான்,
அம்பேத்கர்நுால் வெளியீட்டு விழாவில், 'தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு
முடிவு கட்ட வேண்டும்' என, ஆதவ், தி.மு.க.,வை நேரடியாக தாக்க, கடுப்பான
தி.மு.க., 'ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும்' என, அழுத்தம்
கொடுக்க, வேறு வழியில்லாமல், அவரை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்வதாக
அறிவித்தார், திருமா.
ஆனால், தற்போது வி.சி., கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
வி.சி.,
கட்சியை மக்களிடம் உயிரோட்டமாககாட்டிக் கொண்டிருந்த ஆதவின் விலகல்,
அக்கட்சிக்கு இழப்பு தான். அதே நேரம், கொள்கை பிடிப்பு இல்லாத ஒரு
தலைவரின் பின் சென்றால்,ஆதவின் நிலை தான் ஏற்படும் என்பதற்கு இதுவே சிறந்த
உதாரணம்!