sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?

/

காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?

காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?

காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?


PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.காளியப்பன், பெரியகுளத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் மக்கள் அதை உண்மை என்று நம்பத் துவங்கி விடுவர் என்பது, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை.

'ஓட்டு திருட்டிற்கு சாத்தியமே இல்லை' என்று தேர்தல் கமிஷன் மறுத்துவிட்ட பின்பும், புளித்து போன மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு துணையாக, இப்போது, திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்திலும் களத்தில் இறங்கியுள்ளார்.

'ஓட்டு திருட்டு பா.ஜ.,வினரால் நேர்த்தியாக நடத்தப்படுகிறது. இது அரசியல் கட்சியினரின் பிரச்னை மட்டும் அல்ல; ஒவ்வொரு வாக்காளரின் பிரச்னையும் கூட. அதை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவும், தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்சமான செயல்பாட்டை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது' என்று கூறியுள்ளார், சசிகாந்த் செந்தில்.

இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தற்போது காங்., தான் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

பா.ஜ., ஓட்டு திருட்டை நடத்தி இருந்தால், இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ., அல்லவா ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும்?

காங்கிரஸ் எப்படி வெற்றி வாகை சூடியது... ஓட்டு திருட்டு மூலமாகவா?

சாமர்த்தியமாக, திறமையாக, தேர்தல் கமிஷனின் கண்களில் மண்ணை துாவிவிட்டு, ஓட்டு திருட்டு வாயிலாக காங்கிரஸ் கட்சி இம்மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறதோ?

அதுதான், 'தான் திருடி பிறரை நம்பாள்' என்பது போல், பா.ஜ.,வை சந்தேகப் படுகிறதோ!

எனவே, தேர்தல் கமிஷன் இந்த மூன்று மாநில ஆட்சிகளையும் உடனடியாக கலைத்து விட்டு, மறு தேர்தல் நடத்தி, ஓட்டு திருட்டு நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்!

சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைக்க முடியுமா?


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்தார்.

அ.தி.மு.க.,விலிருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட போது, அவருக்கு ஆதரவாக, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமியை கடுமையாக வி மர்சித்து வந்தவர், தற்போது, தி.மு.க.,வில் தஞ்சம் அ டைந்து, 'தி.மு.க., என்பது அ.தி.மு-.க.,வின் எதிர்முகாம் அல்ல' என்கிறார்.

அப்படியென்றால், ஜெயலலிதா முதல் பழனிசாமி காலம் வரை அ.தி.மு-.க., நாளேடுகளுக்கு ஆசிரியராக இருந்து, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட தலையங்கம் எல்லாம் எந்த முகாமிற்காக எழுதப்பட்டது?

'தி.மு.க.,வில் இருந்து அ.தி.மு-.க., உருவான போது, இரு கட்சிகளையும் ஒருங்கிணைக்க அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரக்காயர் முதல், ஒடிசா முதல்வர் பட்நாயக் வரை பலர் முயற்சித்தனர். ஆனால், முடியாமல் போனது' என்றும் கூறியுள்ளார்.

அ.தி.மு-.க., உருவானது 1972ல்; ஆனால், எம். ஜி.ஆர்., முதல்வராக இருந் த போது, 1980ல் பட்நா யக் இரு கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயன்றார். அதற்கு, எம்.ஜி.ஆர்., முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

இதில், புதுச்சேரி முதல்வர் பரூக் எங்கே வந்தார்?

காங்கிரசிலிருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்தவர்தான் பரூக். 1974 ஜனவரியில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், 30 இடங்களில் அ.தி.மு.க., போட்டியிட்டு, 15 இடங்களைக் கைப்பற்றியது. ஏனாம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமிசெட்டி என்பவர், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தார்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராமசாமி முதல்வராக பதவியேற்று, அரசின் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய இருந்த நிலையில், தனக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் வாயிலாக அந்த பட்ஜெட்டை ரகசியமாக பெற்று, அதை வெளியில் கசிய விட்டவர் பரூக் மரக்காயர். அதனால், முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாமலேயே, புதுச்சேரியில் அ.தி.-மு.க., ஆட்சி கவிழ்ந்தது.

அதேநேரம், அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட மீனவர் வரதனை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளராக நின்ற பரூக் மரக்காயர் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மறுஓட்டு எண்ணிக்கை கோரிக்கை வைக்கச் சென்ற அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் ஆர்.எம்.வீரப்பனை அழைத்து, 'பரூக்கே எம்.எல்.ஏ., ஆகட்டும்; அவருக்கு பிரச்னை செய்ய வேண்டாம்' என பெருந்தன்மையுடன் கூறினார், எம்.ஜி.ஆர்., ஆனால், பரூக் மரக்காயரோ உள்ளடி வேலைகளை செய்து, அ.தி.மு.க., ஆட்சி கவிழ காரணமாக இருந்தார்.

உண்மை இதுவாக இருக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,வை இணைக்க பரூக் மரக்காயர் முயற்சி எடுத்தார் என்று, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் மருது அழகுராஜ்!

சென்றுள்ள இடத்திற்கு விசுவாசம் காட்டவோ?

உபரி பட்ஜெட் போடுமா?


அ.யாழினி பர்வதம், சென்னை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநில அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து, மத்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் சமீபத் தில் வெளியிட்டுள்ள ஆய் வறிக்கை, ஓர் ஆச்சரியமான தகவலை சொல்கிறது.

பற்றாக்குறை மாநிலமாக இருந்த உ.பி., இன்று உபரி வருவாய் கொண்ட மாநிலங்களில் முதலிடம் பிடித்துள்ளது. இதை அடுத்து குஜராத், ஒடிசா, ஜார்க்கண்ட் என, 16 மாநிலங்கள் உபரி வருவாய் கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பற்றாக்குறை வருவாய் மாநிலங்களாக இருந்து, இன்று உபரி வருவாய் மாநிலமாக மாறிய இந்த, 16ல், 10 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

அதேநேரம், 2022 - 23 கணக்குப்படி, இன்னும் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களாக ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மே.வங்கம், பஞ்சாப், ஹரியானா, அசாம், பீஹார், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, மஹாராஷ்டிரா என, 11 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவைகளில் மாநிலக் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அரசு கஜானாவில் சேர வேண்டிய வருவாயை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொண்டால், பட்ஜெட்டில் பற்றாக்குறை தானே வரும்?

இதை சமாளிக்க, மேலும் கடன்களை வாங்குகிறது தமிழகம். இப்படி இருந்தால் நம் மாநிலம் திவாலாகுமே தவிர, உபரி பட்ஜெட் எங்கே போடுவது?

வரும், 2026 தேர்தலில் வெற்றி பெறும் கட்சியா வது, முன்னேறிய மாநிலங் களை முன்மாதிரி யாக கொண்டு, உபரி வருவாய் கொண்ட மாநிலமாக தமிழ கத்தை மாற்ற வேண்டும்!






      Dinamalar
      Follow us