/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சாதா திருடர்களுக்கும் சலுகை உண்டா?
/
சாதா திருடர்களுக்கும் சலுகை உண்டா?
PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

எஸ்.கபாலி, கோடியக்கரை, ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபகாலமாக, அரசியல்வாதிகள் ஒரு புது டெக்னிக்கை கையாளத் துவங்கி உள்ளனர்.
அதாவது, அரசியல் செல்வாக்கு மற்றும் அராஜகமாக, தனியார் சொத்துக்களையோ அல்லது அரசு நிலங்களையோ சொந்தமாக்கி கொள்ள வேண்டியது; எதுவும் பிரச்னை எழவில்லை என்றால், அந்த சொத்துக்களை அப்படியே கபளீகரம் செய்து கொள்வது.
பிரச்னை எழுந்தால், 'பிரச்னைக்குரிய சொத்துக்களை திருப்பி தந்து விடுகிறேன்; மன்னித்து விடுங்கள்; தண்டனை எதுவும் தந்து விடாதீர்கள்' என்று சரண்டர் ஆவது.
'லேட்டஸ்ட்'டாக அந்த திட்டத்தில் மனு போட்டு இருப்பவர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி.
கர்நாடக வீட்டுவசதி வாரியத்தில் இருந்து, 14 வீட்டு மனைகளை, தன் அரசியல் செல்வாக்கை வைத்து, பார்வதியின் பெயருக்கு முறைகேடாக கிரயம் செய்து கொடுத்துள்ளார் சித்தராமையா.
இந்த முறைகேடான மனை ஒதுக்கீட்டு விஷயம், எப்படியோ வெளியில் கசிந்து, சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டனர்; அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
வழக்கு, விசாரணைக்கு வந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு சிறை பிளஸ் பொலிட்டிக்கல் வாழ்க்கை மொத்தமாக அவுட்!
இதிலிருந்து தப்பிக்க, 'நீங்கள் வழங்கிய, 14 வீட்டு மனைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று, வீட்டுவசதி வாரியத்துக்கு, பார்வதி கடிதம் எழுதியுள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறி நுாற்றுக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி, வேலை வாங்கித் தராமல் டிமிக்கி கொடுத்து சிக்கிக் கொண்ட, செந்தில் பாலாஜியும், இப்படித்தான் கூறினார். 'பணம் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுத்து விட்டேன். அதனால், வழக்கிலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்' என்று கோரிக்கை விடுத்தார்.
நமக்கு எழும் சந்தேகம் என்ன என்றால், அரசியல்வாதிகளுக்கு வழங்கிவுள்ள இந்த சலுகையானது, நாட்டில் உலவும் அனைத்து திருடர்களுக்கும் விஸ்தரிக்கப்படுமா என்பது தான்!
சட்டம் அனைவருக்கும் பொதுவானதுஎன்ற கூற்று உண்மையானால், அரசியல் திருடர்களுக்கு கொடுக்கும் சலுகையை, அனைத்து திருடர்களுக்கும் வழங்க வேண்டுமல்லவா!
எல்லாமே சாத்தியம் தான்!
சி.கார்த்திகேயன்,
சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பிரதமர் மோடியின் லட்சியங்களில் ஒன்றான, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதன்
க்ளைமாக்ஸ் கிட்டத்தட்ட நெருங்கும் வேளையில், மாநில கட்சிகள் பயம் கொள்வது
தவறு. ஏனெனில், வாக்காளர்களாகிய மக்கள், எவரை தேர்ந்தெடுக்க வேண்டும்
என்பதை தெளிவாக செய்வர் என்பதை, உலக நாடுகள் அனைத்தும் அறியும்.
ஒரே
நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு வந்தால், எந்தெந்த மாநில முதல்வர்கள்,
தங்கள் பதவியை இழக்கத் தயாராவர் என்பது தெரியாது. இனி, ஆதார் அட்டை
அடிப்படையில் எவ்வித சிரமமும் இன்றி வாக்காளர் பட்டியல் வெளியிடலாம்.
பிறப்பு
சான்றிதழ் வாயிலாக, 18 வயது நிரம்பியோரின் பெயர், இயற்கையாகவே வாக்காளர்
பட்டியலில் இடம் பெறும் வகையிலான மென்பொருளைத் தயாரித்து, அதன் வழியே ஒரே
நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
அதே போல், இறப்பு
சான்றிதழ் தயாரானதுமே, அதை வாக்காளர் பட்டியலுடன் இணைத்தால், அதையும் அந்த
மென்பொருளே, 'அப்டேட்' செய்து, பட்டியலிலிருந்து பெயரை நீக்கி விடும்
வகையில் வசதி ஏற்படுத்தலாம்.
இது நடந்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் செலவு, மிக அதிக அளவில் மிச்சமாகும். நடக்குமா?
நெல்லுக்கு இரைத்தால் புல்லுக்கு தான் போகும்!
ஏ.கிருஷ்ணன்,
சென்னை யில் இருந்து எழுது கிறார்: ஆண்டாண்டு காலமாக தவமிருந்து,
மூன்றாண்டுக்கு முன் மாநில முதல்வராக, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார்; வந்தது
முதல், தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்.
'இந்த திட்டத்தால் இத்தனை
பேர் லட்சம் பயன் அடைந்தனர், அந்த திட்டத்தால் அத்தனை லட்சம் பேர் பயன்
பெறுவர்' என்ற புள்ளி விபரமும் கொடுக்கிறார்.
இத்தனை ஆண்டுகளாக
மக்கள் அனைவரும் ஏதோ ஒரு பாலைவனத்தில் இருந்தது போலவும், இப்போது தான் சோலை
வனத்திற்கு வந்தது போலவும் அமைந்துள்ளது இவரது பேச்சு.
ஆனால்,
மக்கள் என்னவோ பல ஆண்டுகளாக இருப்பது போல் தான் இன்றும் இருக்கின்றனர்;
அவர்கள் வாழ்வில் ஒன்றும் பெரிய மாற்றம் வந்தது போல் தெரியவில்லை.
அரசின்
திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைகின்றனவா என்று அறிய, அந்த
மக்களிடமே விசாரணை நடக்கிறது. அப்படி என்றால் தன் திட்டங்கள் கடைசி வரை
போகின்றனவா என்று, அரசுக்கே நம்பிக்கை இல்லை.
கட்டிய கட்டடங்கள்
சில மாதங்களிலேயே விரிசல் விடுவதும், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விடுவதும்,
போட்ட சாலைகள் சில நாட்களிலேயே குண்டும் குழியுமாக மாறுவதும், ஒரு சில
உதாரணங்கள்.
ஓடும் பேருந்துகளும், 'ஏசி' பேருந்து நிறுத்தங்களும், நகரும் படிகளும், தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதடைகின்றன.
எனக்கு
தெரிந்த ஒரு கம்பெனி முதலாளி என்னிடம், 'காலையில் வேலைக்கு வரும்போதே
குடிச்சுட்டு வர்றான் சார். எப்படி சார் அவனை வேலைக்கு வைக்குறது?' என
புலம்பினார். இத்தகைய அனுபவம் பல தொழிலதிபர்களுக்கு உண்டு.
வீடு
சரியாக இருந்தால் தான் நாடு சரியாக இருக்கும். முதல்வர் பல இடங்களில்
சுற்றி சுற்றி முதலீடுகளை ஈர்க்கும் முன், உட்கட்டமைப்புகளை சரிசெய்ய
வேண்டும்.
செந்தில் பாலாஜி மீது ஏன் இவ்வளவு அக்கறை?
வா.தியாகராஜன்,
கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்'
கடிதம்: நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்
பாலாஜியை, மேளதாளத்துடன் வரவேற்று நிற்கும் மக்களை நினைத்தால் நெஞ்சு
பொறுக்குதில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில், இதே செந்தில் பாலாஜியை,
அவரின் கரூரில், ஊழல்வாதியாக, 'கழுவி ஊற்றிய' நம் முதல்வருக்கு, இன்று அவர்
தியாகியாக தெரிவதன் மர்மம் தான் என்ன?
டாஸ்மாக் விற்பனையில், ஒரு பாட்டிலின் விலையை, 10 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்ததை, தடுத்து நிறுத்தியதாலா?
மின் தடை ஏற்பட்டபோதெல்லாம், 'மின் ஒயர்களை அணில் கடித்தது' என
சமாளித்ததாலா? மின் தடை இன்றுவரை தொடர்வதற்கு, அவர் மனதில் புதிதாக
நொண்டிச் சாக்கு உதிக்கும் என்ற சந்தோஷத்தாலா?
சொல்லுங்கள் முதல் வரே... ஏன் உங்களுக்கு செந்தில் பாலாஜி மீது இவ்வளவு அக்கறை?