/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?
/
இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?
இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?
இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?
PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM

ஏ.எஸ்.ஆதித்யா, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திரைத்துறையினர் நடத்திய, 'கலைஞர் 100' விழா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவில், சினிமா நடிகை பங்கேற்றால் கூட, அது துணை நடிகையாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு பொதுமக்கள் திரண்டு விடுவர்.
ஆனால், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், உலக நாயகன் என்றும் தங்களை அடையாளப்படுத்தி வரும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்ற நிகழ்ச்சியில், காலி சேர்கள் அணிவகுத்து நின்ற காட்சியை பார்க்கையில் மிக பரிதாபமாக இருந்தது.
திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரஜினியும், ஒரே ஒரு எம்.பி., சீட்டுக்காக கமலும் தி.மு.க.,வின் ஜால்ராவாக மாறி இருப்பது, அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள், 'கருணாநிதி இல்லையெனில், தமிழ் சினிமாவே இல்லை; எம்.ஜி.ஆரும், சிவாஜியும் உச்சம் தொட கருணாநிதி தான் காரணமே' என்பது போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை
கட்டமைக்கப் பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள், 130; சிவாஜி நடித்த படங்கள், 288. இதில், கருணாநிதி கதை, வசனத்தில் இவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை, 10க்கும் குறைவு.
மேலும், அவர்கள் தங்களது திறமையாலும், உழைப்பாலும், மக்கள் ஆதரவாலும் தான் பேரும், புகழும் பெற்றனரே தவிர, கருணாநிதியின் பங்களிப்பு இதில் எங்கு இருக்கிறது?
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான, பி.ஆர்.பந்துலு, ஏ.சி.திருலோகசந்தர், ப.நீலகண்டன், கே.சங்கர், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பீம் சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் தான் எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்த சிற்பிகள்!
இந்த இயக்குனர்களின் பெயரை இருட்டடிப்பு செய்து, காலாவதியான பராசக்தி வசனத்தையே பல்லவி பாடி, கருணாநிதியை முன்னிறுத்துகின்றனர்.
கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்திற்கும் தாங்கள் சார்ந்திருக்கும் திரைத்துறை மீது உண்மை
யிலேயே விசுவாசம் இருந்தால், இது போன்ற பழம்பெரும் இயக்குனர்களின் பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் சுயநலத்திற்காக தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிப்பதால், நடந்து முடிந்த கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், உங்களது ரசிகர்கள் கூட உங்கள் தரிசனத்திற்காக வரவில்லை பார்த்தீர்களா?
தங்களது அபிமான நடிகர்களின் கட் -அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தி, படத்தின் வெற்றிக்காக மண் சோறு தின்னும் பைத்தியக்கார ரசிகர்கள் நிறைந்த தமிழகத்தில், இரு மாபெரும் நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, அவர்களது ரசிகர்களாலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.