PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

ஆர்.எஸ்.ஜெயா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., --- அ.தி.மு.க., இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று, 1972ல் அ.தி.மு.க.,ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே,பெருந்தலைவர் காமராஜர் அறிவித்து விட்டார்.
கடந்த 1974ல் எம்.ஜி.ஆர்., நடித்து வெளியான, நேற்று இன்று நாளை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய, 'ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே... தாங்கள் வெளிச்சம்போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே!ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்... தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்! நான் படித்தேன்காஞ்சியிலே நேற்று... -அதை நான் உனக்குசொல்லட்டுமா இன்று' பாடல் இன்றைக்கும்பொருந்தும்.
ஆக, இரண்டு கழகங்களுக்கும், மக்கள்மீது அக்கறையும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், எப்போதுமே இருந்ததில்லை எனும் போது, இப்போது மட்டும் அந்த கல்யாண குணங்கள் எப்படி வந்து விடும்? வரவே வராது!
மக்களின் சிந்தனையில் ஒரு மாற்றம் வந்து மறுமலர்ச்சி ஏற்படும் வரை, இரு கழகங்களின் 'டுபாக்கூர்' வாக்குறுதிகளும்,ஆட்சி அதிகாரங்களும் நீடித்தபடி தான் இருக்கும்.
'மாறி மாறி குற்றச்சாட்டு சொல்வதைத் தவிர, மக்கள் மீது அக்கறை இல்லை; நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமும் இல்லை' என தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கருத்து சொல்லி இருக்கிறார்;'ரிப்பீட்' ஆனது காமராஜர் பொன்மொழி!
என்ன நடக் குது நம் வகுப்பறைக ளில்?
வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில், பிளஸ்
1படித்து வரும் மாணவிக்குதிடீரென வயிற்று வலி ஏற்படவே, ஆசிரியர்கள்
விரைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறிது நேரத்திலேயே, அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது; இது பலரையும் அதிர்ச்சிஅடைய செய்துவிட்டது.
இதை வெறும் செய்தியாக அப்படியே கடந்து செல்ல முடியாது.
மாணவி,
தன் சித்தி வீட்டில் தங்கி இருந்தபோது, சித்தியின் மகனால் கர்ப்பமாகி
உள்ளார். இது அண்ணன் - தங்கை உறவுமுறை. தற்போது அவன், 'போக்சோ' சட்டத்தில்
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான்; மாணவியோ தாய் ஆகிவிட்டார்.
எவ்வளவு
ஒரு நெருக்கடியான நிலை... கர்ப்பத்துக்கு காரணமானவனுக்கே, மனைவியாக
முடியாத நிலை. புத்தகப் பைதுாக்க வேண்டிய வயதில்,குழந்தையை துாக்க வேண்டிய
தலைகுனிவு.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... குழந்தை பெற்றெடுக்கும்
வரை, மாணவியின் உடல் நிலையில்மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமே? இதை பெற்றோர்,
ஆசிரியர்கள், சக தோழிகள்,உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் யாருமே
கண்டுபிடிக்கவில்லையா?
பாதிக்கப்பட்ட மாணவிஏன், வாய்மூடி மவுனி ஆனார்? மாதவிலக்கு ஆகாமல் இருந்திருக்குமே...அதைக் கூடவா கவனிக்கவில்லை?
சுற்றுலா
செல்லும் காலங்கள், விடுமுறை காலங்களில் உறவினர் வீடுகளில் சென்று
தங்குவது, பெற்றோர் - பாதுகாவலர்கள் கண்காணிப்பு இல்லாமல் வளர்வது,
பெற்றோர் அதிக நேரம் வீட்டில் இல்லாமல் வேலைக்கு சென்று விடுவது, சகோதர
உறவு முறையை நம்பி விட்டுச் செல்வது.
உறவுமுறை தாத்தா -பாட்டி
வீட்டில் வளர்வது, பொருளாதார நெருக்கடி காரணமாக உறவினர் வீடுகளில் தங்கி
படிக்க வைப்பது, திருமண ஆசை, அலைபாயும் மனம், ஸ்மார்ட்போன் மோகம் என,
ஏகப்பட்ட காரணங்களால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
வயது
காரணமாக சிற்றின்பத்தை நாடிச் செல்லும்போது, அதன் விளைவுகளைப் பற்றி
சிந்திக்க விடாமல், மோகம் கண்ணை மறைக்கிறது; பின் அதுவே, வாழ்க்கை
முழுமைக்கும் தலைகுனிவைஏற்படுத்தி வருகிறது.
இது போன்ற விஷயங்களால்
இளம் பருவத்தினரின் கண்ணியம் பாழாவதைத் தடுக்க, பெற்றோர் - ஆசிரியர் -
உளவியலாளர்கள் - அரசு கைகோர்த்து தீர்வு காண வேண்டும்.
யதார்த்தம் புரிந்து கொள்ளுங்கள் அன்புமணி!
என்.வைகைவளவன்,
மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'வரும், 2026ல் நடைபெறப்
போகும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில்கூட்டணி ஆட்சி தான் அமையும். அதில்,
பா.ம.க.,பங்கு எடுக்கும்' என்கிறார்அதன் தலைவர் அன்புமணி.
இதுவரை
தமிழகத்தில்கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை; அதற்கானஅவசியம்
அ.தி.மு.க.,வுக்குஏற்பட்டதில்லை. தி.மு.க.,வோ, மாபெரும் கூட்டணியுடன்
போட்டியிட்டாலும், ஆட்சியில் இடம் கொடுக்காது; 'மனதில்இடமுண்டு' என, கடைசி
நிமிடத்தில் சொல்லி சிரிக்கும்.
வரும், 2026ல் நடைபெறப் போகும்
சட்டசபைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில்வெற்றி பெற்றாலும்,
கூட்டணி ஆட்சி என்ற பேச்சு பக்கமே போகாது.
அ.தி.மு.க., இப்போது தான் விஜய் கட்சியுடன் கூட்டணி பேச, அஸ்திவாரம் போட்டுள்ளது; கூடவே,தே.மு.தி.க., சேரலாம்.
பா.ம.க.,வை யார் சேர்த்துக் கொள்ளப் போகின்றனர் என்று தெரியவில்லை. அதற்குள்,'ஆட்சியில் பங்கு' என்கிறார் அன்புமணி.
அன்புமணி, யதார்த்தம்புரிந்து நடந்து கொள்வது நல்லது.
ந டிக்கவில்லை எனில் திருமாவளவனுக்கு 'பாடம்' தான்!
எஸ்.பிரசன்னா,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: கடந்த, 2016-ல்,'முதல்
கையெழுத்தாய் மதுவிலக்கு' என்று சொல்லி,மக்கள் நலக் கூட்டணி அமைத்து,
விஜயகாந்தை ஒழித்துக் கட்டினார் திருமாவளவன்; மதுவை அல்ல!
இப்போது,
மதுவிலக்குகொண்டு வர, பிரதமர் மோடிக்கு அழுத்தம் தர கூட்டமாம். மது ஆலை
பெருச்சாளி முதலாளிகள் உள்ள தி.மு.க.,வுக்கும் அழைப்பு, ஒரே கையெழுத்தில்
மதுவிலக்குகொண்டு வர அதிகாரமுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கும் அழைப்பு; ஆனால்,
பிரதமர் அமல்படுத்தணுமாம். என்ன நாடகம் பாருங்கள்!
'மதுக்கடையை
மூடினால்தான் கூட்டணி' என சொல்லிப் பார்க்கட்டுமே...'இரண்டு சீட் என்ன...
தமிழகத்திலிருந்தே, 'சீட்' கிழித்து விடுவோம்' என, தி.மு.க., துவம்சம்
செய்து விடும் திருமாவளவனை!
'அடங்க மறு; அத்து மீறு' என்பதெல்லாம்,
மேடைக்கு மட்டுமே என்பது திருமாவளவனுக்கும்தெரியும்;
தி.மு.க.,வுக்கும்தெரியும்; ஆனால் தொண்டர்களுக்குத் தெரியாது. இந்த
நாடகத்தில்,ஆதவ் அர்ஜுனா என்ன...பகவான் கண்ணன் காலத்துஅர்ஜுனன் வந்தால்
கூட, அவருக்கும் வேஷம் போட்டு அனுப்பி விடுவர்.
இவரை நம்பியும் ஒரு கூட்டம்; இவருடன் ஒட்டவும் ஒரு கூட்டம்... என்ன செய்ய!