sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மாநில சுயாட்சி இல்லை; குடும்ப சுயாட்சி!

/

மாநில சுயாட்சி இல்லை; குடும்ப சுயாட்சி!

மாநில சுயாட்சி இல்லை; குடும்ப சுயாட்சி!

மாநில சுயாட்சி இல்லை; குடும்ப சுயாட்சி!

5


PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.சிவக்கொழுந்து, நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியிருப்பது, தமிழகத்தில் மன்னராட்சி நடப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலான விஷயம்' என, தமிழக பா.ஜ.,வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, தன் வருத்தம் தோய்ந்த கருத்தை கவலையுடன் தெரிவித்து இருக்கிறார்.

'ஜனநாயகம் எங்கே உள்ளது?' என, முன்னாள் கவர்னர் தமிழிசை வேறு பேட்டி அளித்து இருக்கிறார்.

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, கழகத்தின் தலைமை பதவி பற்றி குறிப்பிடும்போது, 'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல' என்று தெள்ளத் தெளிவாக, பாமரர்களுக்கும் புரியும்படி கூறுவது வழக்கம்.

மன்னராட்சி காலங்களில் தான்,மன்னருக்கு பிறகு மன்னரது மகன், மன்னரதுமகனுக்கு பின் மன்னரது பேரன் என்று ஆட்சி பீடத்தை அலங்கரிப்பது வழக்கம். ஆனால், சங்கர மடத்தில், ஒரு சங்கராச்சாரியாருக்கும், அவருக்கு பின் வரும்சங்கராச்சாரியாருக்கும் ரத்த சம்பந்தமோ,உறவு முறையோ இருக்காது.

பரமபதம் அடைந்த சந்திரசேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, அவருக்கு அடுத்த நிலையில் இருந்தஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், உறவினரோ,வாரிசோ, தாயாதியோ, பங்காளியோ அல்ல.அதுபோல, அவருக்கு பின்னால் தற்போது சங்கராச்சாரியாராக இருக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், சந்திரசேகரருக்கோ, ஜெயேந்திரருக்கோ ரத்த சம்பந்தமோ, உறவு முறையோ அல்லர்.

மறைந்த கருணாநிதியின் விளக்கம், இப்போது தெளிவாகி விட்டதல்லவா?

தி.மு.க.,வில் வாரிசு முறை மட்டும் தான் கோலோச்சும்; அந்த வாரிசு முறையை மனப்பூர்வமாக ஏற்று தான், தமிழக வாக்காளப் பெருமக்கள், கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருக்கின்றனர்.

அகில உலகமே போற்றிப் புகழ்ந்து பரணி பாடிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசை, வாய் புளித்ததோ, மாங்காய்புளித்ததோ என்கிற ரீதியில் விமர்சித்து வசைமாரி பொழிய வேண்டாம்.

மாநில சுயாட்சியைத் தாண்டி இது குடும்ப சுயாட்சி; எதிர்த்துப் பேசினால் உங்கள் முதுகு பழுக்காச்சி!



தொழுகை கேட்டு மனம் குளிர்ந்த மகா பெரியவர்!


ந.தேவதாஸ், சென்னையில்இருந்து எழுதுகிறார்: மற்ற மதங்களை இழிவாக பேசும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிற்கு மறைந்த காஞ்சி மகா பெரியவர் குறித்து சிறு உதாரணம் கூற விரும்புகிறேன்...

ஒரு சமயம் காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் மடத்தை ஒட்டி உள்ள சிறு மக்கள் ஒன்றாக சென்று மனு ஒன்றை வழங்கினர். அதில், 'நம் புகழ் வாய்ந்த காஞ்சி மடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மசூதி சற்று இடையூறாகவும், அங்கிருந்துவரக்கூடிய சத்தங்கள் சற்று சங்கடமாகவும் இருப்பதாக தெரிவித்து, விரைவில் அங்கிருந்து மசூதியை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்' என்று இருந்தது.

இது எப்படியோ மகா பெரியவரின் செவிக்கு எட்டிவிட்டது.

ஒரு சில நாட்களில் அவரை சந்திக்க மாவட்ட ஆட்சியர் வந்த போது, சிரித்தபடியே 'எனக்குநீங்கள் உதவி ஒன்று செய்ய வேண்டும்' என்றார்.மாவட்ட ஆட்சியரும், 'ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன்' என்றார்.

'சில ஊர் பெரியவர்கள்ஒன்று திரண்டு தங்களிடம்மடத்தின் அருகில் உள்ள மசூதியை வேறு இடத்திற்குமாற்றுமாறு விண்ணப்பம் வைத்ததாக அறிந்தேன்.

'அது மிகவும் தவறானது.காரணம், அதிகாலை, 5:00 மணிக்கு மசூதியில் இருந்து எழக்கூடிய துவா தொழுகை சத்தம் என் காதுகளுக்கு மிக இனிமையாக உள்ளது. குறிப்பாக காமாட்சி தாயே என்னை துயில் எழுப்புவதாக உள்ளது.

'அருள் கூர்ந்து அந்தமசூதிக்கு எந்த இடையூறும்செய்து விடாதீர்கள்' என்று வேண்டியுள்ளார். இதை சில நாட்களில் அறிந்த இஸ்லாமிய சகோதரர்கள்ஒன்று திரண்டு, மகாபெரிய வரை சந்தித்து, கண்ணீர்மல்க தம் நன்றியை பதிவுசெய்துள்ளனர்.

அதற்கு மகா பெரியவர் வந்த அத்தனை நபர்களுக்கும் சந்தனத்தை பிரசாதமாக கொடுத்து, 'மகிழ்வோடு வாழ்வதற்கு வழி சொல்வது தான் எல்லா மதமும், மார்க்கமும்' என்றாராம்.

இவற்றை பார்க்கும்போது, மகாபெரியவர் மதங்களை கடந்து மனிதர்களை நேசித்துள்ளதைநம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.



பணி நீக் கமே நிரந்தர தீர்வு!


கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பிரமணியன், ஆசிரியர் (பணி நிறைவு), நைனார் மண்டபம், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள் கவலை அளிப்பதாக உள்ளன. அதிலும் குறிப்பாக, பள்ளி, கல்லுாரிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மாணவர்களுக்கு நற்சிந்தனைகளையும், ஒழுக்க நெறிகளையும் போதித்து, அவர்களை நல்வழிப்படுத்தவேண்டிய ஆசிரிய பெருமக்களே இத்தகைய பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு, 'போக்சோ' வழக்கில் கைதாகும் செய்திகள் தினமும் வருகின்றன.

பெற்றவர்களுக்கு அடுத்த ஸ்தானத்தை குருவிற்கு அளித்து, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைதெய்வத்திற்கும் மேலானவர்களாக கருதி மாதா, பிதா, குரு, தெய்வம்என்று கூறிய நம் முன்னோரின் வாக்கை பொய்ப்பிக்கும் வகையில், நம்பிக்கையற்று திகழ்கின்றனர் ஆசிரியர்கள் சிலர்.

ஆசிரியர்கள் தான் இப்படிஎன்றால், கல்வி நிலையங்களில் வேலை செய்யும் சிலர், சொற்ப காசிற்கு ஆசைப்பட்டு, அரசு, மாணவர்களுக்கு வழங்கும் இலவச முட்டைகளையும் திருடி வெளிச்சந்தையில் விற்று காசாக்குவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்தாலும், சில மாதங்களில் மீண்டும் பணிக்கு வந்து, மீண்டும் அதே செயலில் தான் ஈடுபடுகின்றனர்.

எனவே, இதுபோன்ற போக்சோ மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கும் ஆசிரியர்களை, உடனுக்குடன் பணிநீக்கம் செய்வதே, இதுபோன்ற குற்றங்களை குறைக்க உதவும். பள்ளிக்கல்வி துறையும், தமிழக அரசும் இது குறித்து யோசிக்க வேண்டும்.



வீர மாக திருமா கிளம்ப வேண்டிய நேரமிது!


எஸ்.சுந்தாஸா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில் பங்கேற்பதாக திருமாவளவன் அறிவித்து, பின் ஜகா வாங்கினார். கள்ளச்சாராய இறப்பு, வேங்கைவயல் சம்பவம் என அனைத்திற்குமே இப்படி தான். சம்பந்தப்பட்ட தலைவர்கள், மெதுவாக ஜகா வாங்கி விடுகின்றனர். காரணம் தி.மு.க., மீதான பயம்.

'நண்பர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்; விரோதிகளை மிக அருகில் வைத்துக் கொள்ளுங்கள்' என்ற சொலவடை தான் நினைவுக்கு வருகிறது. அருகில் வைத்தபடியே, திருமாவளவனை தி.மு.க., ஒரு சிறு வட்டத்தில் அடக்கி வைத்து விட்டது. வி.சி., தொண்டர்கள் மீது குண்டர்சட்டம், தனி தொகுதியைத்தாண்டி, 'சீட்' ஒதுக்காமை என, 'குளிப்பாட்டி' வருகிறது.

தன் இன மக்களுக்குகுரல் கொடுக்கும் வகையில் வி.சி., வீரமாககிளம்ப வேண்டிய நேரமிது!








      Dinamalar
      Follow us