/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை!
/
எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை!
PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM

எஸ்.சுந்தாஸா, கும்பகோணத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முஸ்லிம் கைதிகளை விடுவிக்க கோரி, வரும் ஆகஸ்ட்டில் மதுரையில் போராட்டம் நடத்தப் போவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, 'போலீஸ்' பக்ருதீன் என்பவர், 15 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருப்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பக்ருதீன், 2011ல் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பா.ஜ., தலைவர் அத்வானி, ஊழலை எதிர்த்து ரத யாத்திரை சென்றபோது, குண்டு வெடிப்பு நிகழ்த்தி யவர். மேலும், ஹிந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன் மற்றும் பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் நேரடி தொடர்பு கொண்டவர்.
இவரை சிறையில் இருந்து விடுவிக்க போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார், சீமான். இதுமட்டுமா... சில மாதங்களுக்கு முன், கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவுக்கு அஞ்சலி செலுத்தி, 'அவர் என் தந்தை போன்றவர்' என்று பேட்டி அளித்தார்.
கடந்த 2023ல், 'தி.மு.க.,வின் கைப்பாவைகள் தான் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள்' என்று சிறுபான்மையின மக்களை கடுமையாக விமர்சித்து இருந்தார், சீமான். அப்போது எழும்பிய எதிர்ப்பை களையவும், நடி கர் விஜயின் த.வெ.க., கட்சிக்கு சிறுபான்மை ஓட்டுகள் செல்வதை தடுக்கவும், 'முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும்' என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார் சீமான்.
அவர்கள் என்ன நாட்டிற்காக பாடுபட்டு சிறை சென்றனரா? அப்பாவி பொதுமக்களை கொன்றதனால் சிறை தண்டனை அனுபவிப்பவர்கள். 15 ஆண்டுகளும் சிறையில் உயிருடன் தானே இருக்கின்றனர்?
ஆனால், அவர்களால் பல உயிர்கள் பலியாகி உள்ளதே... அந்த உயிரிழப்புக்கு சீமான் பொறுப்பேற்பாரா?
சிறுபான்மையினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்... இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வரை தான் இங்கு அமைதியும், சகோதரத்துவமும் நிலைத்து இருக்கும்.
அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி, தங்கள் அரசியல் வளர்ச்சிக்காக தானே தவிர, சிறுபான்மையினர் நலனுக்கானது அல்ல!
ஓட்டு அரசியலுக்காக, பெரும்பான்மை ஹிந்துக்களிடம் இருந்து சிறுபான்மையினரை தனியாக பிரித்து, லாபம் காணத்துடிக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளிடம் சிறுபான்மையினர் ஜாக் கிரதையாக இருக்க வேண்டும். இவர்களால் உங்களுக்கு எந்த நன்மையும் விளையப் போ வதில்லை !
பொய்யர்களின் வாயை அடையுங்கள்! ஆர்.பாலமுருகன், மதுரை யில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கா மராஜர் இறக்கும்போது கருணாநிதி யின்
கையைப் பிடித்துக் கொண்டு, 'தமிழகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்'
என்று கேட்டுக் கொண்டார் என, புது புரளியை கிளப்பி விட் டுள்ளார்,
தி.மு.க., - எம்.பி., சிவா.
தமிழகத் தில் ஆட்சி மாற்றம்
ஏற்பட்டபோது, 'கூத்தாடிகளின் கையில் தமிழகத்தை ஒப்படைத்து விட்டீர்களே...'
என, மனம் உடைந்து அறிக்கை தந்தவர் காமரா ஜர்.
களங்கம் இல்லாத, கறை
படியாத கரங் களுக்கு சொந்தக்காரரான அவர், கருணாநிதியிடம், தமிழகத்தை
காப்பாற்ற வேண்டிக் கொண்டார் என்று சொல்ல, நாக்கு கூசவில்லையா?
நல்லவேளை... காலில் விழுந்து கேட்டுக் கொண்டார் என்று சொல்லாமல் விட்டுவிட்டார்.
காமராஜர் உயிரோடு இருந்தபோது, அவரை பனையேறி என்றும், மாட்டுத்தோல்
உடம்புக்காரர், அண்டங்காக்கா கறுப்பு என்றும் இழிவாக பேசிய கூட்டம் இது!
இத்தகையோரிடம், 'நாட்டை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக எம்.பி., சிவா கூறியிருப்பது நகைப்புக்குரியது!
தற்போது, தி.மு.க., வினர் புதிய பாணி அரசியலை கையில் எடுத்துள்ளனர்.
அதன்படி, மறைந்த தியா கிகள் பலரை, தங்கள் ஊழல் ஆட்சிக்கு சாட்சியாக கொண்டு
வர துடிக் கின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு, தி.மு.க.,வின்
கடந்த கால அரசியல் வரலாறு தெரியாததால், இவர் கள் உருட்டு வேலைகள் எல்லை
மீறி போய் கொண்டு இருக்கின்றன.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக
கண்டிப்பதுடன், பொய் கதை புனைவோர் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும்;
அப்போதுதான் பொய்யர்களின் திறந்த வாய்கள் இறுக மூடும்.
இல்லையெனில், மகாத்மா காந்தி, கருணாநியிடம், உயிர் பிச்சை கேட்டார் என்று கூட சொல்வர்!
உயரத் துடிக்கும் போது சலனப் படலாமா? ரா .சேது ராமானு ஜம், விருதுநகரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காதலா, பாசமா, குடும்பச் சண்டையா
அல்லது இருவருக்கும் இடை யிலான, 'ஈகோ'வா... இதில் எது தன் மகளை, ஒரு சிறந்த
டென்னிஸ் வீராங் கனையை துப்பாக்கியால் சுட்டு கொல்ல துாண்டியது என்று
தெரிய வில்லை.
ஹரியானா மாநிலம், குருகிராமில் தீபக் யாதவ்
என்பவரின் மகள் ராதிகா யாதவ். இவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை. தேசிய அளவில்
பல பதக்கங்களை வென்றவர். டென்னிஸ் அகாடமியும் நடத்தி வருபவர்.
சம்பவத்தன்று, வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தவரை, தீபக் யாதவ் தன் கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
மகளின் சம்பாத்தியத்தில் சாப்பிடுவதாக ஊரார் கேலி பேசியதால், அவமானம்
தாங்காமல் சுட்டேன் என்று சப்பைக்கட்டு கட்டி யுள்ளார், தீபக் யாதவ்.
ஆனால், ஊர் மக்களோ, தீபக் யாதவ் சொல்வது பொய் என்றும், குருகிராமில்
அவருக்கு சொகுசு பண்ணை வீடும், கட்டடங்களை கட்டி வாடகைக்கு
விட்டிருப்பதால், அதிலிருந்து மாதம், 17 லட்சம் ரூபாய் வரை வருமானம்
வருகிறது என்றும், தன் மகள் மீதுள்ள அதீத பாசத்தின் காரணமாக, இரண்டு லட்சம்
ரூபாயில் டென்னிஸ் ராக்கெட் ஒன்றும் வாங்கி தந்துள்ளார் என்றும்
கூறியுள்ளனர்.
அத்துடன், வாலிபர் ஒருவருடன் இணைந்து சமூகவ
லைத்தளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டதால் தான், குடும்பத்தில்
பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ, தேசிய
அளவில் சாம்பியன், ஆசிய, ஒலிம்பிக், உலக சாம்பியன் என்று தன் இலக்குகளை
வகுத்துக் கொண்டு அடுத்தடுத்த உயரங்களை நோக்கி பறக்க வேண்டிய இளம் பெண்,
மனதை அலைபாய விட்டதால், தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனச் சலனங்கள் வாழ்வில் உயர மட்டும் தடையாக இருப்பதில்லை; இதுபோன்று வாழ்வை இழக்கவும் வைத்து விடுகிறதே!