/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
திருடர்களை காப்பாற்றும் அரசியல்வாதிகள்!
/
திருடர்களை காப்பாற்றும் அரசியல்வாதிகள்!
PUBLISHED ON : நவ 27, 2025 12:00 AM

என்.குணாளன், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் கமிஷன் நடத்தும் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, 'இண்டியா' கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி எதிர்க்கின்றன.
எதிர்ப்பதோடு நில்லாமல், 'உங்கள் ஓட்டுரிமை பறிபோகப் போகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர்களை நீக்கப் போகின்றனர். தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., செய்யும் சதி' என்ற ரீதியில், பொதுமக்களிடமும் பீதியை கிளப்புகின்றன.
மே.வங்கத்தில், தற்போது எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், தங்கள் தாய்நாடு செல்ல எல்லையோர சோதனைச்சாவடியில் கூட்டம் கூட்டமாக காத்திருக்கின்றனராம்...
பத்திரிகைகளில் வந்த இந்த செய்தியை யும், அதுகுறித்த படங்களையும் பார்த்த போதுதான், அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆரை ஏன் எதிர்க்கின்றன என்பதன் காரணம் புரிந்தது.
இந்தியர்கள் என்றால், அவர்கள் ஏன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?
நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தினருக்கு, மே.வங்க திரிணமுல் காங்கிரஸ் அரசு, வசிக்க இடமும், ஓட்டுரிமையும், குடியுரிமையும் கொடுத்து போஷித்து வந்துள்ளது.
அவர்களும், தேர்தல்களில் திரிணமுல் காங்கிரசுக்கு விசுவாசமாக ஓட்டளித்து வந்துள்ளனர். அக்கட்சியின் தலைவி மம்தா பானர்ஜியும் ஜாம் ஜாமென்று ஆட்சி நடத்தி வந்துள்ளார், வருகிறார்.
எஸ்.ஐ.ஆரின் வாயிலாக இவர்களது வண்டவாளம் தண்டவாளம் ஏறத் துவங்கவே, மூட்டை முடிச்சுகளோடு, தங்கள் நாட்டிற்கு கிளம்ப தயாராகி விட்டனர்.
இதனால், தோல்வி பயத்திலுள்ள அரசியல் கட்சிகள், எஸ்.ஐ.ஆரை எதிர்த்து, 'குய்யோ, முறையோ' என்று கூக்குரல் எழுப்புகின்றன. மேற்கு வங்க நிலைமை இப்படி என்றால், தமிழகத்தின் நிலைமையோ வேறு வகை.
சென்னை, தாம்பரம் அருகே இரும் புலியூர் என்ற பகுதியில், இரண்டு வீடுகளில் மட்டும், 510 ஓட்டுகள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ளனவாம். அந்த, 510 வாக்காளர்களின் விலாசம் எதுவென்று தேடிய போது அகப்பட்டது ஒரு சர்ச்.
அந்த சர்ச்சில் பிரேயர் நடத்த வருவோர் பெயர்களை எல்லாம், வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
'யோக்கியன் வர்றான் செம்பை எடுத்து ஒளித்து வை' என்பது போல், இவர்கள் கூறுகின்றனர், பா.ஜ., ஓட்டு திருட்டு செய்கிறது என்று!
பொதுவாக, நம் வீட்டில் பொருட்கள் ஏதாவது திருடு போனால், திருடனை கண்டு பிடித்து தண்டனை வாங்கித் தருவது தான் உலக வழக்கம். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகளோ திருடனை காப்பாற்ற துடிக்கின்றனர்.
இவர்களின் கைகளில் நாடு சென்றால், ஆறு, மலை, மணல், கனிமவளங்கள் கொள்ளை போவது போல், தங்கள் சுய லாபத் திற்காக, அந்நிய சக்திகளிடம் நாட்டையே கூறு போட்டு விற்றாலும் ஆச்சரியமில்லை!
ராகுல் புரிந்து கொள்ளும் காலம் வருமா?
கே.என்.ஸ்ரீதரன்,
பெங்களூரு வில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில ஆண்டுகளுக்கு
முன், பீஹாரில் தேர்தல் என்றாலே, மாவோயிஸ்ட்களின் வன்முறை, ஓட்டு சாவடிகளை
கைப்பற்றும் அரசியல்கட்சி குண்டர்கள், மறுவாக்கு பதிவு என, இவைதான் நம்
நினைவுக்கு வரும்!
ஆனால், தற்போது அதுபோன்ற எந்த வன்முறையும்
இல்லாமல், தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. எந்த ஓட்டுச் சாவடியிலும்
மறுஓட்டுப்பதிவு என்பதே இல்லை.
'தேர்தலில் முறைகேடுகள் இருந்தால்,
நேபாளம், வங்கதேசத்தைப் போல் தெருக்களில் வன்முறை வெடிக்கும்' என்று
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்,
தேர்தல் கமிஷனையே மிரட்டி பார்த்தார்.
அக்கட்சியின் கடந்த கால
வரலாறு எப்படிப்பட்டது, எவர் வன்முறையில் ஈடுபடுவர் என்பது தேர்தல்
கமிஷனுக்கு தெரியாதா... இந்த பயமுறுத்தலை தேர்தல் கமிஷன்
கண்டுகொள்ளவில்லை. மக்களும், 1990லிருந்து 1997 வரை ராஷ்ட்ரீய ஜனதா தள
கட்சி முதல்வர் லாலு பிரசாத்தின் காட்டாட்சியை மறக்கவில்லை.
விளைவு... தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து, வெற்றி பெற வைத்து விட்டனர்.
தேர்தலுக்கு ஒரு மாதம் முன்வரை ஓட்டுத்திருட்டு என்று உருட்டிக் கொண்டு,
நடைபயணம் மேற் கொண்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேர்தலில் தாங்கள்
டிபாசிட் கூட வாங்க மாட்டோம் என்ற களநிலவரம் தெரிந்த பின், தேர்தலில்
ஆர்வம் காட்டவில்லை.
அதேநேரம், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
என்பது போல், நிதிஷ்குமார் போன்ற நிமிடத்திற்குள் மனம் மாறக்கூடியவரை
வைத்துக் கொண்டு, ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற
சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை மீண்டும் கூட்டணியில் இணைத்தது,
அவர்கள் கேட்ட தொகுதி களை கொடுத்தது என்று, பா.ஜ.,வின் தேர்தல் வியூகம்
என்பது மிகப் பெரிய ராஜ தந்திரம் தான்.
இதுபோன்ற எந்த வியூகமும் இல்லாமல், மோடி எதிர்ப்பு என்பதை தவிர காங்., கட்சிக்கு வேறு எந்த கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை.
தேர்தல் காலத்தில் நடைபயணம் செல்வதும், சில பொது கூட்டங்களில் பேசுவதும்,
மற்ற சமயங்களில் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகள் விடுவதும்,
கட்சியை வளர்க்காது என்பதை ராகுல் புரிந்து கொள்ளும் காலம் வரும் போது,
காங்., என்ற கட்சி இந்தியாவில் இருக்குமா என்பது சந்தேகமே!
மத்திய அரசு துணை நிற்குமா? கே.வைத்தியநாதன், சென்னையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர
திருத்தப் பணி பல மாநிலங்களில் நடந்து வரும் நிலையில், தமிழகத்தில்
ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசும், மே.வங்கத்தில் மம்தா பானர்ஜியின்
திரிணமுல் காங்கிரஸ் அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காரணம், சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை
ஓட்டு உள்ளவர்களின் ஓட்டுகளை வைத்து, வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும்
ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற தங்கள் கனவுக்கு தேர்தல் கமிஷன்
கடிவாளமிடுவது, அவர்களுக்கு பிடிக்கவில்லை.
அதனால், எஸ்.ஐ.ஆர்., பணியை தள்ளிப் போட வைத்து, எப்படியேனும் ஆட்சி அதிகாரத்தை பிடித்து விட வேண்டும் என துடிக்கின்றனர்.
இதற்கு தேர்தல் ஆணையம் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது.
இம் மாநிலங்கள் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு இடை யூறோ, தடை போடவோ முயற்சி
செய்தால், இந்திய அரசியல் சட்ட விதிகளின்படி, இம்மாநில அரசுகளை கலைத்து
விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியா வது, எஸ்.ஐ.ஆர்., பணியை முடித்து
முறையான, நேர்மையான தேர்தல் நடந்திட தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு
துணையாக இருக்க வேண் டும்!

