/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
செந்தில் பாலாஜியுடன் மகனுக்கும் 'ப்ரமோஷன்?'
/
செந்தில் பாலாஜியுடன் மகனுக்கும் 'ப்ரமோஷன்?'
PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்ரமணியம், ஆசிரியர்(பணிநிறைவு), நைனார் மண்டபம், புதுச்சேரியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆவது நடக்காத காரியம்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன் கூறி, போலி சமூக நீதி போராளிகளை முகம் சுளிக்க வைத்தார்; பின்னர் அவரே, ஆட்சி அதிகாரத்தில், அனைவருக்கும் பங்கு அளிக்கும் கூட்டாட்சி தத்துவமே சிறந்தது என்றும், அதை பா.ஜ., கடைபிடிக்கிறது என்றும் கூறி, ஆளும் தி.மு.க., அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.
இப்போது, அவரது கட்சியில் உள்ள ஆதவ் அர்ஜுனா, 'ஒரு அனுபவமும் இல்லாத சினிமா நடிகனான உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதை விட, அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள மூத்த அரசியல்வாதியான திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதே சரியாக இருக்கும்' என்று கூறி, உதயநிதியை, துணை முதல்வர் ஆக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி என்ற கோரிக்கை வாயிலாக, உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கு முட்டுக்கட்டை போட்டதோடு, தலித் ஒருவருக்கு அதிகாரம்என்று, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா.
கட்சியின் துணைப் பொதுச்செயலர் வன்னியரசும், ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.
வி.சி., கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில்தி.மு.க.,வும் பங்கேற்கும் என்று கூறி, மாநாட்டின் நோக்கத்தையே ராஜதந்திரமாகநீர்த்துப்போகச் செய்த ஸ்டாலின், திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி என்ற கோரிக்கை எழுந்து உள்ளதால், உதயநிதியை தற்போது துணை முதல்வர் ஆக்கினால் அது விமர்சனங்களுக்கு உள்ளாகும்என்று உணர்ந்து, அந்த விஷயத்தை இன்னும் சிறிது காலங்களுக்கு அப்படியே கிடப்பில் போடுவாரா அல்லது சிறையில்இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜிக்குப் பதவி கொடுக்கும் சந்தடி சாக்கில்,தன் மகனையும், 'ப்ரமோட்' செய்வாரா என்பது, ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
இருந்ததை கோட்டை விட்டுட்டோமே?
ஆர்.சந்திரமவுலி, துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து சிலிண்டர் வெடித்ததில், பலருக்கு காயம்; மருத்துவமனையில் அனுமதி.
ரசாயன தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி.
தெளிவான,
பாதுகாப்பானஉலகில் வாழ நாம் ஆசைப்படுகிறோம்; ஆனால், விபத்தில்லாத
தொழிற்சாலையைக் காண முடியாதுஎன்பதே யதார்த்தம். சாலை விபத்துகள்,
பணியிடவிபத்துகள் இந்தியாவின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியாவில், அடிப்படைபாதுகாப்பு வசதியற்ற தொழிற்சாலைகளில், தினமும்சராசரியாக மூன்று பேர்உயிரிழப்பதாக, அரசு ஆய்வு கூறுகிறது.
கடந்த
ஐந்தாண்டுகளில், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், சுரங்கங்கள், கட்டுமான
இடங்களில் சராசரியாக 6,500 பேர் உயிரிழந்ததாக, மத்திய தொழிற்துறை
அமைச்சகம்,பார்லி.,யில் தெரிவித்துள்ளது.
நவீன
தொழில்நுட்பங்கள்,கருவிகளைக் கையாள்வதில் தொழிலாளர்களுக்கு
பயிற்சி,பாதுகாப்பு உபகரணங்களைபயன்படுத்துவதில் பயிற்சி, ஆபத்து காலங்களில்
துரிதமாக இயக்குவதில் பயிற்சி ஆகிய முக்கிய விஷயங்களுக்கு, போதுமான நிதியை
அரசு ஒதுக்கினால்,உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.
துாத்துக்குடியில் தொழிலாளர்கள் நலனை மேம்படுத்துவது தற்போதைய அவசர தேவையாகி உள்ளது.
கடந்த
2ம் தேதி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
மெய்யநாதன் ஒரு உத்தரவை வெளியிட்டார். தொழிற்சாலைகளில், அமோனியா, குளோரின்
மற்றும் ரசாயனங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்ற
உத்தரவு அது.
சில அடிப்படைக் கேள்விகள் இப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும்...
தொழிற்சாலையை நடத்த நிறுவனங்கள் முறையான அனுமதியும், சான்றிதழும் பெற்றுள்ளனவா?
பொருள் உற்பத்திக்கானநவீன தொழில்நுட்பங்கள், சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா?
வாயு பயன்பாடு கொண்ட தொழிற்சாலைகளில்,வாயு கசிவைத் தடுக்க, கண்டறிய,
முன்கூட்டியே எச்சரிக்க, போதுமான வசதிகள் உள்ளனவா? வாயு கசிந்தால், கருவி
தானாக இயக்க நிறுத்தத்தை மேற்கொள்ளும் வசதி உள்ளதா?
தொழிற்சாலை,'அதி கவன கண்காணிப் பின் கீழான ஆலை' என்பதாக இருந்தால், அதன்
இயக்கம் குறித்து, 24 மணி நேரமும், உள்ளூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய
அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கும் ஆன்லைன் வசதி உள்ளதா?
தொழிற்சாலையில் இருந்து திரவக் கழிவுகள், பாதுகாப்பான முறையில் வெளி
யேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க, மாவட்ட அளவிலான அமைப்பு உள்ளதா?
அதிகாரிகள் உள்ளனரா?
இங்குதான் நமக்கு சில பிரச்னைகள் உருவாகின்றன.
ஒரு
நிறுவனத்தில் குறைபாடுகள் தென்பட்டால்,அந்த நிறுவனத்தை இழுத்து மூடுவது
மட்டும் தான் தீர்வா? தொழிலாளர்களின் பாதுகாப்பு குறைபாடும், விபத்து
ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதால் மட்டும் ஒரு நிறுவனத்தை
மூடி விட முடியுமா? துாத்துக்குடியில் இதுவரை மூன்று தொழிற்சாலைகளில்
விபத்துகள் நடந்துள்ளன; இழுத்து மூடுவதா தீர்வு? இல்லை!
ஒரு தேசிய
நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடந்தால், அந்த சாலையையே இழுத்து மூடி
விடுகிறோமா... இல்லையே! அதுபோல, ஒரு தொழிற்சாலையில் உயிரிழப்போ, விபத்தோ
நடந்தால், அந்த தொழிற்சாலையையே இழுத்து மூடக்கூடாது. பிரச்னைகளை,
குறைபாடுகளைச் சரிசெய்ய ராணுவ அடிப்படையில் செயல்பட்டு தீர்வு காண
வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, முத்துநகருக்கு மிகப்பெரிய
இழப்பு. ஆதாரம் ஏதுமே இல்லாமல்,அதாவது பேனே இல்லாதபோது, பேன்
இருக்கிறதுஎன்றும், அதை ஊதிப் பெருமாளாக்கியும் தவறிழைத்து விட்டனர்.
அந்த
ஆலையை இழுத்து மூடியதால், நம் நாட்டு பொருளாதாரத்துக்கு 15,000 கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது;ஒரு லட்சத்திற்கும்மேற்பட்ட திறன்வாய்ந்த
தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். அங்கு தயாரிக்கப்பட்ட,
சுத்திகரிக்கப்பட்ட தாமிரமே தற்போது கிடைப்பதில்லை; எனவே, அதன் விலை
இந்தியாவில் இரண்டு மடங்காகி விட்டது.
நாட்டில் கொரோனா
தாக்கம்ஏற்பட்டதால், ஸ்டெர்லைட்ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய மனு மீதான
விசாரணை தள்ளிப்போனது. இந்தாண்டுபிப்ரவரியில் தான், சுப்ரீம்கோர்ட்
அவ்வழக்கை விசாரித்தது; ஆனால், ஆலையை மூட வேண்டும்என்ற சென்னை உயர்
நீதிமன்ற தீர்ப்பை, உறுதி செய்துவிட்டது.
ஆலையை
மூடுவதற்காகபோராடியவர்களுக்கான வெற்றியா இது? இல்லை... நாட்டிற்கு இழப்பு.
காற்றாலை, சூரிய சக்தி அமைப்பு, மின்சார வாகனங்களை இயக்கத் தேவையான மூலப்
பொருளாக உள்ள தாமிரத்தை மிக அதிக விலை கொடுத்து, இறக்குமதி தான் செய்தாக
வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை, 2018 ல் மூடப்படுவதற்கு முன், பாதுகாப்பு
தொடர்பான அனைத்து நிபந்தனை களையும் பின்பற்றி வந்தது. வாயுக்கசிவோ,
ரசாயனக் கசிவோ ஏற்பட்டதே இல்லை; திரவக்கழிவுகளை பைப் லைன் வழியே
கடற்கரைக்கோ, கடலுக்கோ கொண்டு செல்லவே இல்லை.
இன்னும் சொல்லப்
போனால், திரவக் கழிவுகள் ஒரு துளிகூட வெளியே வந்ததில்லை; காற்றில் கலக்கும்
நச்சும் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருந்தது. இதையும் தாண்டிநிபந்தனைகள்
விதிக்கப்பட்டிருந்தால், அவற்றையும்நிறைவேற்ற அதன் நிர்வாகம் தயாராகவே
இருந்தது.
இவ்வளவையும் மீறி, ஆலை மூடப்பட்டது நம் துரதிர்ஷ்டமே.