sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

குத்தாட்டம் போடும் குடும்ப அரசியல்!

/

குத்தாட்டம் போடும் குடும்ப அரசியல்!

குத்தாட்டம் போடும் குடும்ப அரசியல்!

குத்தாட்டம் போடும் குடும்ப அரசியல்!

7


PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.எஸ்.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி, தன் ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகிறார். பலருக்கும் திராவிட மாடல் என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை புரியவில்லை.

அரசின் செயல்பாடுகள் அனைத்தையும்திராவிட மாடல் எனக் கூறுவது நகைப்பாக உள்ளது. இனி, தமிழகத்தில் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், அது திராவிட மாடல் அரசின் சாதனை என முதல்வர் கூறுவாரோ என்ற எண்ணம் எழுகிறது.

இன்றைய தமிழகத்தில், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், கஞ்சா போன்ற தகாத செயல்கள் பெருமளவில் பெருகி, மக்கள் மனதில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசின் கைப்பாவையாக செயல்படும் காவல் துறை மீதும், லஞ்சத்தில் மூழ்கி கிடக்கும் அரசு துறைகள் மீதும் மக்கள் வருத்தமும், விரக்தியும் அடைந்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டு, குற்றத்தில் இருந்து விடுபடாதவரை, தியாகி என முதல்வர் வர்ணித்துள்ளார். அவரை மீண்டும் அமைச்சராகவும் அமர்த்தியுள்ளார்.இதையும் திராவிட மாடல் அரசின் சாதனை என்று கூறுவாரோ, என்னவோ.

தமிழக அரசில் அனுபவமிக்க பல மூத்த அமைச்சர்கள் உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன், அமைச்சராக நியமிக்கப்பட்ட தன் மகனையே தற்போது துணை முதல்வர் பதவியில் அமர்த்திஉள்ளார். இந்த திராவிட மாடல் அரசில் பதவியில் இருக்கும் பல அமைச்சர்கள், அனுபவமில்லாத முதல்வரின் மகன் துணை முதல்வரானதை பாராட்டி, புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இதையும் கூட திராவிட மாடல் என்பார் முதல்வர்.

'திராவிட மாடல் அரசில், குடும்ப அரசியல் குத்தாட்டம் போடுகிறது' என்று கூறப்படும் விமர்சனங்கள் குறித்து முதல்வர்கவலைப்படுவதாக தெரியவில்லை.

தமிழகத்தில் பண பலமும், படை பலமும்இருந்தால், தேர்தலில் ஜெயித்து விடலாம். ஜாமின் கைதியாக இருந்தாலும், பதவியில் மீண்டும் அமரலாம் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மக்கள் தான் பாவம்!



ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


எஸ்.ராமஜோதி, பெரியநாயக்கன் பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் 'தமிழ்நாடு பிராமணர் சங்கம்' நாராயணன் என்பவர் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த சமயத்தில், பல எழுச்சிமிகு நிலை உருவானது.

ஆனால், 'இவர்கள் எங்கே ஒன்று சேர்ந்து, மற்ற ஜாதி சங்கங்களை போல் தெருவில் இறங்கி விடுவரோ?' என்று பயந்த திராவிடக் கட்சிகள், அந்தசங்கத்தை உடைத்து, பல சங்கங்களாக சிதற விட்டது.

வசதியான பல பிராமணர்கள் விளம்பரம் இல்லாமல் உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்போது, பிராமண சமுதாயம், காதல்கலப்பு திருமணத்தால், தன் அடையாளத்தை இழந்து வருகிறது. பிராமணீயம் அழிந்தால், ஹிந்து தர்மம் அழியும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.

எதிரிகள் திட்டமிட்டு, பிராமண பெண்களை காதலித்து திருமணம் செய்து, அந்த இனமே இல்லாமல் செய்ய நினைத்து செயல்படுகின்றனர்.

வேதங்களையும், சனாதன தர்மத்தையும்,ஹிந்து மதத்தின் வழிபாட்டு முறைகளையும்காக்க பிராமண இனம், தன் வாழ்க்கை முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

காலத்தின் மீது பழியை போடாமல் பிராமணர்கள்,தங்கள் குடும்ப கலாசாரத்தை காப்பாற்றி, குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால், நம்முடைய இனம் மீண்டும் தைரியத்தோடு செழித்து வளர முடியும்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும்தாழ்வு' என்பதை பிராமண சமூகம் இனியாவது நினைவில்நிறுத்தி செயல்பட வேண்டும்.



காங்., கட்சிக்கு நல்லதல்ல!


என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்., கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குதொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன், 'இந்த நாடு எனக்கு முக்கியம்; நாட்டுக்கு கேடு வந்து விடக்கூடாது. அதற்காக பாசிச சக்திகளை எதிர்க்கும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு ஜால்ரா மட்டுமல்ல... பல்லக்கும் கூட துாக்குவேன்' என்றார். காங்கிரசை சேர்ந்த தேசிய தலைவர்களுக்கு, தி.மு.க., செய்த தீமைகளை இளங்கோவன் எப்படி மறந்தார் எனத் தெரியவில்லை.

மறைந்த பிரதமர் இந்திராவை, தமிழக மண்ணில் ரத்தம் சொட்ட சொட்ட தாக்கியது, தி.மு.க., தான். ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ததும்தி.மு.க., தான். இளங்கோவன், தேச தலைவர்களை மதிக்காத தமிழக தி.மு.க., தலைவர்களை உயர்வாக மதிக்க காரணம், ஈ.வெ.ரா., வம்சாவளி பாசமா அல்லது பந்தமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இளங்கோவன் வெற்றி பெற தி.மு.க.,வின் முழு பலமும் தேவைப்பட்டது. தன் பலம் என்னவென்று அறிந்த இளங்கோவன், தி.மு.க.,விற்கு அடிமையானது ஊரறிந்த விஷயம்.எப்படியாவது தமிழகத்தில்காங்., கட்சியை வளர்த்துவிட துடிக்கும் கட்சியின் பல தலைவர்களுக்கு மத்தியில், இளங்கோவனின்இத்தகைய போக்கு கட்சிக்கு நல்லதல்ல.



காஷ்மீர் அரசியலில் ஆண்கள் ஆதிக்கம்?


வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய 'இ -- மெயில்' கடிதம்: காஷ்மீர் வாக்காளர்களில், 48 சதவீதம் பெண்கள். ஆனால், அவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம்,அங்கீகாரம் அங்கு இல்லை. 2024 லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள், 219 பேரில் 9 பேர் தான் பெண்கள். இட ஒதுக்கீடு, 33 சதவீதம் இருந்தும் காஷ்மீரில் அரசியலில் பெண்களை அனுமதிக்கவில்லை.

மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி இரண்டுமே அரசியலில் பெண்களை வரவேற்கவில்லை. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அவரது மகளுக்கு மட்டுமே இடம் கொடுத்தார். பா.ஜ., - காங்., தேசிய கட்சிகளும் இதுகுறித்து மெத்தனமாகவே உள்ளன.

கடந்த 2019ல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், தேசிய பெண்கள் ஆற்றல்படுத்தும் திட்டம்-2001, அரசியலில் பெண்கள் பங்கேற்க வழிவகுத்தது. ஷேக் அப்துல்லா, மெகபூபா முப்தி குடும்ப கட்சிகள் இன்று, காஷ்மீரில் அரசியலுக்கு புதிய இளைய சமூக சேவகர்கள் வருகையை கண்டு, கதி கலங்கி நிற்பது உண்மை.








      Dinamalar
      Follow us