sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?

/

ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?

ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?

ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?

23


PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 22, 2024 12:00 AM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.ஆரூரான், திருவாரூரிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஒரு கோட்டை சிறிதாக்க வேண்டுமானால், அதன் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை போட்டுவிட்டால், முதல் கோடு சிறிதாகி விடும் என்பது பாலச்சந்தரின், இரு கோடுகள் தத்துவம்.

'ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கு வதில் கருணாநிதி வல்லவர்' என்பது, காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனின் கருத்து. தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த இரண்டையும் கலந்து கட்டி அடித்து, 'ஸ்கோர்' எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 4,000 கோடி ரூபாயில், 4 ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என்பது, தற்போது பெய்துள்ளசாதாரண மழையிலேயே வெட்ட வெளிச்சமாகி விட்டது. அந்த 4,000 கோடி ரூபாயும், எந்த பள்ளத்தில் எப்படி விழுந்து தொலைந்தது என்பது கழகத் தலைமை மட்டுமே அறிந்த ரகசியம்.

அந்த கோளாறை திசைதிருப்ப, முதல்வர் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான், தமிழ்த்தாய் வாழ்த்தை கவர்னர் ரவி அவமரியாதை செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும், மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறும் குற்றச்சாட்டும்.

இதில் வேடிக்கையும், வினோதமும் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், இந்த விஷயத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு பக்க வாத்தியமாக, ஒத்து ஊதிக் கொண்டிருப்பதுதான்.

கவர்னர் ரவி தமிழர் அல்ல; ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை கூட, ஒவ்வொரு விழாவிலும் முழுமையாகப் பாடுவேன் என்பதையும், அதை பக்தி சிரத்தையுடன், பெருமையோடும் அட்சரம் பிசகாமல் பாடுவேன் என்றும் கூறுகிறார்.

ஆனால், வெள்ளத்தடுப்பு பணிகளில் தமிழக அரசு செய்துள்ள தில்லாலங்கடியைதிசைதிருப்ப, தமிழ்த்தாய் வாழ்த்தை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

அதோடு, 'தமிழ் எங்கள் இனம். அது எங்கள் உயிர் மூச்சு. தமிழ்மொழியைக்காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள்' என்றும் உருட்டி இருக்கிறார் நம் முதல்வர்.

தமிழ் மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்கு கொடுத்தவர்களில் எத்தனை பேர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்? சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறோம்!

அவசரநிலை காலத்தில் உங்கள் உயிரை காக்கத் தன் உயிரையே களப்பலியாக கொடுத்த சிட்டிபாபுவின் குடும்பத்திற்கு, உங்கள் கட்சி என்ன மரியாதை செய்தது? அந்த சிட்டிபாபுவின் மகனுக்கு சீருடை அணிவித்து, அறிவாலயவாசலில் செக்யூரிட்டியாகத் தானேநிப்பாட்டி வைத்திருக்கிறீர்கள்?

தமிழ் மொழிக்காக நெருப்பில் வெந்தது,உங்கள் பாசாங்கு பேச்சுக்களால் மதிமயங்கிய விவசாயிகளும், அப்பாவி கூலித் தொழிலாளிகளும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!

தமிழக முதல்வருக்கும், அவரது அமைச்சர்களுக்கும், இன்னும் கழகத்திலுள்ளமுக்கிய பிரமுகர்களுக்கும், அ.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., - கம்யூனிஸ்ட்கள் போன்ற, இன்னபிற அரசியல் கட்சிகளுக்கும்,ஒரு சவால்...

கவர்னர் மாளிகையிலேயே ஒரு கூட்டம்நடத்துவோம்; அதில் முதல்வர் உட்பட, மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளட்டும்.

முதலில் தமிழர் அல்லாத கவர்னர் ரவி துவங்கி, முதல்வர், அவரது அமைச்சரவைசகாக்கள், கழக முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி பக்தி சிரத்தையோடு பாட வேண்டும்.

சவாலுக்குத் தயாரா?



ஜாதி பேசினால் சாதிக்க முடியாது!


அ.ரவீந்திரன், குஞ்சன்விளை,குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், ஒரு காலத்தில் மொத்த அரசியல்வாதிகளையும் திரும்பிப் பார்க்க வைத்த கட்சி, பா.ம.க., தான். ஆனால், முயல் வேகத்தில்வளர்ந்து, ஜாதி போர்வை போர்த்தியதால், ஆமை வேகத்தில் தேங்கி தவித்து வருகிறது.

வன்னியர் சமூகத்தினர்ஓட்டுகள் மட்டுமே, ஆட்சியை பிடிக்க உதவாதுஎன்று கணிப்பு இல்லாததால், பா.ம.க., இன்னும் இலக்கை அடையாமல் தனி மரமாக நிற்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், எவ்வளவோபோராடியும் பா.ம.க.,வால்வெற்றி பெற முடியவில்லை.'அதற்கு காரணம் பா.ஜ.,வுடனான கூட்டணி'என, பலரும் பா.ம.க., மீது விமர்சனம் வைத்தனர்; ஆனால், அதில் உண்மைஇல்லை.

தமிழகத்தை தன் மகன் அன்புமணி ஆளவேண்டும் என ஆசைப்படும் ராமதாசிடம், அதற்கானவியூகங்களோ, செயல் திட்டங்களோ இல்லை.

வெறும் ஜாதி பிரிவினைபேசியே கட்சியை வளர்க்கிறார். அடுத்த தேர்தலில், எப்படியாவது,ஜெயிக்கும் கூட்டணியில்சேர்ந்து வெற்றி பெற்றால்,கூட்டணி ஆட்சி என்று கேட்டு பதவி பெறலாம்என்றும் நினைக்கிறார்.

ஆனால், குறிப்பிட்ட ஜாதிக்கான கட்சியாகஇருக்கும் வரை, பா.ம.க.,வால்பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியாது.



என்ன தீர் வோ தெரியவில்லை!


அ.குணசேகரன், வழக்கறிஞர்,புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: மற்ற அரசு அலுவலகங்களை விட, பத்திரப் பதிவு அலுவலகத்தினர்ஊழலில் கொடி கட்டிப்பறக்கின்றனர் என்பதுஇப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

'என்ன செய்யிறது... வேலை ஆகணுமே...' என்ற மனநிலையில் தள்ளப்பட்டுள்ள நாம் அனைவரும், பத்திரப்பதிவு அலுவலகத்தினருக்கு லஞ்சம் கொடுத்தே, காசை இழந்து விடுகிறோம் என்பது உண்மை.

பத்திரப் பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைதானதைத் தொடர்ந்து, கோவை பத்திரப்பதிவு சார் -- பதிவாளர் நான்சி நித்யா கரோலின் கார் டிக்கியில் இருந்து, 13 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு வாரவசூலே இவ்வளவு எனில், பதவி ஏற்ற நாள் முதல் எவ்வளவு சம்பாதித்திருப்பார் பாருங்கள்!

ஒரு சார்- - பதிவாளரேஇவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்றால், இவரின் உயர் அதிகாரிகளான மாவட்ட சார் - பதிவாளர்கள் மற்றும் பத்திரப் பதிவு டி.ஐ.ஜி.,க் கள் எவ்வளவு சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பர் என்பதைநினைத்தால், தலைசுற்றுகிறது.

இவர்கள் யாருமே,தங்கள் மீது தொடுக்கப்படும் லஞ்ச வழக்குகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. வழக்கறிஞர்கள் வாயிலாக சட்டத்தில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

அப்படியே சிறை சென்றாலும், ஜாமின் வாங்கி வெளியே வருகின்றனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க அரசும் காத்திருக்கிறது.

இதையெல்லாம் தடுக்க என்னதான் தீர்வு கொண்டு வரப் போகிறோமோ, தெரியவில்லை!








      Dinamalar
      Follow us