sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ராணுவ வீரர்களுக்கு சல்யூட்!

/

ராணுவ வீரர்களுக்கு சல்யூட்!

ராணுவ வீரர்களுக்கு சல்யூட்!

ராணுவ வீரர்களுக்கு சல்யூட்!


PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஒரு நாடு வலிமையானநாடுகள் பட்டியலில் இடம் பிடிக்கவேண்டும் எனில், அனைத்து துறைகளிலும்சிறந்து விளங்க வேண்டும். அந்த வகையில், நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது இடத்தை நோக்கி, வெற்றிநடை போட்டு வருகிறது.

அதனால் தான், நம் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், இந்திய ராணுவத்தளவாடங்கள் வாங்கவும், உற்பத்தி செய்யவும் மிகப்பெரிய நிதியை ஒதுக்குகிறது.இதனால், நம்மிடம் அவ்வப்போது வாலாட்டும் பாக்., - சீனா போன்ற நாடுகளுக்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம்.

இந்திய ராணுவ வீரர்கள் தான், உண்மையான ஹீரோக்கள். நம் விமானப்படை வீரர்கள், கடைசியாக பாகிஸ்தான் எல்லையில் உட்புகுந்து, அதிரடி தாக்குதல்நடத்தி, வெற்றிகரமாக திரும்பி வந்ததை நாம் மறந்து விட முடியாது. அதனால் தான், உலகின் மூன்றாவது பெரிய வான்படை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

சமீபத்தில், நம் விமானப் படை வீரர்கள்,சென்னை மெரினாவில் லிம்கா சாதனையாக,பல லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில்,செய்து காட்டிய சாகசங்களை நேரில் பார்த்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக பதிய வைத்து விட்டது.

அதிலும், இன்று நம் இளைஞர்கள் இடையே நாட்டுப்பற்று குறைந்து விட்டதுஎன்றும், அவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய ஆர்வம் காட்டுவது இல்லை என்றும் தற்போது கூறப்படும் நிலையில், நம் இந்திய விமானப் படை வீரர்கள் செய்த வீர தீர சாகசங்களை பார்த்த பின், இளைய தலைமுறையினருக்கு, நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

முதல்வர் ஸ்டாலின், தன் சமூக வலைதளபதிவில், 'சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை, சென்னை ரசித்தது; மேலும், விமானப் படை வீரர்கள் நம் ஹீரோக்கள்' என்று கூறியதும் மிகச் சரியே.

இது போன்றதொரு ராணுவ வீரர்களின் சாகசங்களை, அவ்வப்போது நாடு முழுதும்கண்டுகளிக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, மாணவர்களுக்கு என்.சி.சி.,வாயிலாக பயிற்சி அளிக்கவும், ராணுவ உயர் அதிகாரிகளை அவ்வப்போது மாணவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தால், இளைய தலைமுறையினரிடம் தேசப்பற்றுடன், ஒழுக்கத்தையும் கண்டிப்பாக விதைக்க இயலும். இதனால், நம் நாடுமேன்மேலும் பல வளர்ச்சிகளை அடையும் என்பதில் சந்தேகமில்லை!



சத்தமாக கொட்டும் ஜால்ரா எங்கு கிடைக்கும்ணே?


ஜெ.சூரிய நாராயணன், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கூட்டாட்சி தத்துவம்குறித்து நிறைய பேசும் கம்யூனிஸ்ட், தி.மு.க., மற்றும் சில விளிம்பு நிலை கட்சிகள் நம் நாட்டில் நிறைய உள்ளன.

மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது, கூட்டணிகட்சிகளின் நிர்ப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில், அவர்களுக்குப் பதவி கொடுத்தது.

திறனில்லாமை, தொலைநோக்கு பார்வை இல்லாமை, தேச நலன் இல்லாமை, நமக்கு என்ன கிடைக்கும் என்ற கட்சிகளின் வியாபார பார்வை ஆகியவை, நாட்டின்வளர்ச்சியை அதல பாதாளத்திற்கு தள்ளின.

பின், பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி பிடித்தது; ஆனால், கூட்டணி கட்சிகளையும் கவுரவிக்க மறக்கவில்லை. தற்போது மூன்றாவது முறையாக, கூட்டணியின் பலத்தில் தான் ஆட்சியில் உள்ளது.

ஆனால், கூட்டாட்சி குறித்து பேசிய பெருந்தலைவர் ஒருவர் எப்போதுமே, கூட்டணி கட்சிகளுக்கு பதவியே தர மாட்டார். 'அவங்களுக்கு என் மனசுல இடம்' எனச் சொல்லி, 'கழற்றி' விடுவார்.அதனால், 'மைனாரிட்டி அரசு' என்ற பெரும்பேறு பெற்றார்.

இவ்வளவு காலம் பொறுத்துப் பார்த்த கூட்டணியினர், தற்போதுதி.மு.க.,விடம் ஆட்சியில்பங்கு கேட்கும் மனநிலைக்கு வந்துள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது, சிரிப்பு தான் வருகிறது. 'கூட்டாட்சி தத்துவத்தின் எதிரி' என்று சித்தரிக்கப்படும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடத்துகிறது. 'நாங்கள் தான் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம், சோஷலிசம் ஆகியவையின் ஆதார சக்தி' என்று, பம்மாத்து காட்டி மக்களை ஏமாற்றும் கட்சிகள், அப்பட்டமாக அக்கொள்கைகளைக் கடாசி, ஆட்சியில் பங்கு தர மறுக்கின்றன.

இதைவிட கேவலம், வாயில் பசை ஒட்டியபடி,கூட்டணியில் மட்டும் ஒட்டி இருக்கும் இடது சாரிகள், 'நாங்கள் தான் கூட்டாட்சியின் அத்தாட்சி'என்று மேடைதோறும்முழங்குகின்றன; ஆனால், முதுகெலும்பைதேட வேண்டி இருக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளுக்குமே தெரியும், இவர்கள் கருவேப்பிலை என்று!

ஆட்சியில் பங்காவது மண்ணாவது... இன்னும்சத்தம் அதிகமாகக் கொடுக்கும் ஜால்ரா எங்கு கிடைக்கும் என்று தேடுங்களப்பா!



எதற்காக ஒரு நிர்வாகமும் அமைச்சரும்?


ராஜேஷ் கண்ணன், சிவகாசியிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், விருதுநகர் ஆட்சியருக்கு, ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

'மாணவர்களிடம் கடின மாக நடந்து கொள்ளக்கூடாது, பணி சுமை கொடுக்கக் கூடாது' என்றெல்லாம் உத்தரவு போடப்பட்டுள்ளது. இது போன்ற பல கடுமையான நிபந்தனைகளை தாண்டி,மாணவர்களால் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக் கொண்டு தான், ஆசிரியர்கள்தங்கள் பணியை செய்கின்றனர்.

ஆனால், பள்ளிக்கு வராதமாணவர்களை, 'வீட்டிற்குபோய் கூட்டி வாருங்கள்' என்று சொல்வது, பள்ளிக்கு வராத மாணவனை இறுதி தேர்வு எழுத வைப்பதுபோன்ற நிர்ப்பந்தங்களை,ஆசிரியர் எப்படிநிறைவேற்ற முடியும்? மேலும், மாணவர்கள் சரியாக மார்க் வாங்கவில்லை எனில், ஆசிரியரைதண்டிக்கலாமா?

பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை நடந்தாலோ, டாஸ்மாக் கடை இருந்தாலோ அதை அப்புறப்படுத்த முடியாத கலெக்டர்,ஆசிரியர்களை இப்படி நிர்ப்பந்திக்கலாமா?

பள்ளிக்கு வேண்டிய நிதியை ஒதுக்காமல், தன்னார்வ நிறுவனங்களிடம்பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள் அல்லதுஆசிரியர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு எதற்கு கல்வி நிர்வாகம்? எதற்கு ஒரு அமைச்சர்?



பத்தோடு பதினொண்ணா?


எஸ்.சுந்தாஸா, கும்பகோணத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: விஜயின்அறிக்கைகளைப் பார்த்தால்,யாரையும் எதிர்க்காமல், எல்லா கட்சியின் முக்கிய விஷயங்களையும் உள்ளடக்கிய பொதுவானகருத்துக்களைத் தாங்கியதாகவே உள்ளது.

விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது; ஒரு சமயம்பொட்டு வைத்து பேச்சு, இன்னொரு முறை பொட்டில்லாமல்; ஒரு பக்கம்நல்ல மதிப்பெண் பெறும்மாணவர்களுக்கு பாராட்டு,இன்னொரு புறம், 'நீட்' எதிர்ப்பு என்று ஆரம்பத்திலேயே மிகுந்தகுழப்பம் தென்படுகிறது. 'பத்தோடு பதினொண்ணு' என்ற கணக்காகி விடுமோ விஜய் கட்சியும்?








      Dinamalar
      Follow us