தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கருவாட்டு சட்டியை தேடி ஓடும் கள்ள பூனைகள்!

 கருவாட்டு சட்டியை தேடி ஓடும் கள்ள பூனைகள்!

 கருவாட்டு சட்டியை தேடி ஓடும் கள்ள பூனைகள்!


PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.கந்தையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

கட்சி தாவல் தடை சட்டம் வரும் முன், இதுபோன்று தான் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சர்வ சாதாரணமாக தாவி, ஓட்டளித்த மக்களை முட்டாள் ஆக்கிக் கொண்டிருந்தனர். மற்ற மாநிலங்களை காட்டிலும், பஞ்சாபில் இந்த கூத்து அதிகமாக நடந்தது.

இந்த கட்சி தாவலுக்கு, வந்தாராம், போனாராம் எனும் அர்த்தத்தில், 'ஆயா ராம்; காயா ராம்' என்று, ஹிந்தியில் செல்லப்பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 1985ல் அப்போதைய பிரதமர் ராஜிவ், கட்சி தாவல் தடை சட்டத்தை அமல்படுத்தினார்.

ஒருவர் அல்லது இருவர், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவினால், அவர்களது பதவி பறிபோகும் என்று அறிவித்ததோடு, ஒரு கட்சியில் இருக்கும் மொத்த மக்கள் பிரதிநிதிகளில், மூன்றில் ஒரு பங்கினர் மொத்தமாக மற்றொரு கட்சிக்கு தாவினால், அதை அங்கீகரிக்கலாம் என்ற புதிய விதியும் அமல்படுத்தப்பட்டது.

அதன்பின், கட்சித் தாவுவோர் ஒருவர், இருவராக இல்லாமல், மூன்றிலொரு பங்கு அங்கத்தினர்களை சேர்த்து கொண்டு தாவத் துவங்கினர்.

தற்போது, அ.தி.மு,க.,விலிருந்து விலகிய நான்கு எம்.எல்.ஏ.,க்களால், மேலும் சிலரை கூட்டு சேர்த்து கொள்ள இயலாததால், தங்கள் பதவிகளை துாக்கி எறிந்து, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட, இவர்கள் நால்வரும் பல கோடி ரூபாய் செலவழித் திருப்பர். தற்போது கட்சி தாவியதன் வாயிலாக அப்பணத்தை, தாவிய கட்சியிலிருந்து பெற்றுக் கொண்டிருப்பர்.

ஆனால், இவர்களது தொகுதியில் தேர்தல் நடத்த, அரசு செலவழித்த தொகையை எவர் கொடுப்பர்? இவர்களின் சுயநலத்துக்கு மக்களின் வரிப்பணம் வீணாக வேண்டுமா?

சில நிறுவனங்களில், உதவித் தொகை கொடுத்து, பயிற்சி அளித்து, வேலையில் சேர்த்துக் கொள்ளும் போது, குறிப்பிட்ட காலங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஒப்பந்தம் போடுவர்.அந்த ஒப்பந்த காலத்தை மீறி, இடையில் விலகினால், சில லட்சங்களை நஷ்ட ஈடாக நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும்.

அதுபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, நோயாலோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடைந்தால் மட்டுமே, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த, அரசு செலவு செய்ய வேண்டும்.

மாறாக, சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலை நடத்த ஆகும் செலவு முழுதையும், பதவி விலகியவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்று, தேர்தல் கமிஷன் சட்டம் இயற்ற வேண்டும்.

அப்போது தான், கருவாட்டு சட்டியை தேடி ஓடும் இந்த கள்ளப் பூனைகள் அடங்கும்!

*******

சிரிப்பு மூட்டும் காங்கிரசார்! அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தோல்வி அடைந்து, வெற்றி பெற்ற, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க போதிய பலம் இல்லாமல் தவித்த நிலையில், முதல் ஆளாக ஓடி வந்து ஆதரவு தந்தது, காங்கிரஸ் கட்சி.

தேர்தல் தோல்வியை விட, காங்கிரஸ் தந்த இந்த அதிர்ச்சி, தி.மு.க., வினருக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

மேலும், தங்கள் கூட்டணியில் உள்ள விடுலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சியினர், த.வெ.க.,வுக்கு ஆதரவு தந்தபோது, தங்களை பெருந்தன்மையாளர் போல் காட்டிக் கொண்டனர்.

ஆனால், த.வெ.க., அமைச்சரவையில், காங்., - வி.சி.க., - ஐ.யூ.எம்.எல்., இடம் பிடித்ததும், தி.மு.க., தலைவர்களால் தாங்க முடியவில்லை. தி.மு.க., - எம்.பி., ராஜா முதல், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வரை, கூட்டணி கட்சியினரை அநாகரிகமாக விமர்சித்து, வசைமாரி பொழிய ஆரம்பித்து விட்டனர்.

எதற்கு இந்த கொந்தளிப்பு?

பதவி சுகத்தை அனுபவித்து விட்டால், அடுத்த தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வரமாட்டார்கள் அல்லவா... அதனால் வந்த கொதிப்பு இது!

இப்படி, தி.மு.க., ஒருபுறம் சாபம் விட்டுக் கொண்டிருக்க, மறுபுறம், 'த.வெ.க., ஆட்சியில் தப்பு நடந்தால் தட்டி கேட்போம்' என்று சொல்லி, கிச்சுக்கிச்சு மூட்டுகின்றனர், காங்கிரசார்.

நடக்கவே நாலு பேர் துணைக்கு வேண்டுமாம் ஒருத்தனுக்கு; இதில் மாரத்தான் போட்டிக்கு பெயர் கொடுத்தானாம்!

தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, காம ராஜரை இழிவுபடுத்திய போதும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்து, அவர்களை ஸ்டாலின் கட்டியணைத்த போதும், பெட்டிப் பாம்பாக இருந்த காங்., இப்போது, த.வெ.க., ஆட்சியில் தவறுகள் நடந்தால் தட்டிக் கேட்கப் போவதாக கூறுவதை கேட்கும் போது, சிரிப்பு தான் வருகிறது!

*******

சின்னத்தை மாற்றுங்கள்! டி.சுந்தரராமன், சிவகங்கையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழர்கள் பண்பட்ட நாகரிகத்தையும், ஆன்மிக வாழ்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பும், இன்றும் சாட்சியாக இருப்பது, ஹிந்து கோவில்கள் தான்!

அக்கோவில்களின் கோபுரமே தமிழகத்தின் இலச்சினையாகவும், ஹிந்து சமய அறநிலையத் துறை சின்னமுமாக, 2021 வரை விளங்கி வந்தது.

ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை என்பதை, 'தமிழர் சமய அறநிலையத் துறை' என மாற்ற வேண்டும் என்று, தி.மு.க., கூட்டணி கட்சியினர் சிலர் கோரிக்கை வைத்தனர்.

ஹிந்து விரோத தி.மு.க., வும் இதற்கு உடன்படத் துணிய, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கவே, அதை நிறைவேற்ற முடியவில்லை.

அதேநேரம், தனக்கு ஓட்டு பிச்சை போட்ட இஸ்லாமியர்களின் மனம் குளிர, ஹிந்து அறநிலையத் துறையின் சின்னமான கோபுரத்தை நீக்கி விட்டு, மசூதி போன்ற, 'லோகோ'வை வைத்தது.

பெற்றவன் எவனோ இருக்க, கண்டவன் பெயர் சூட்டுவது போல், ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கும் மமதையில், இதுபோன்ற அடாத செயலை செய்தது, தி.மு.க., அரசு.

'அடாது செய்வோர், படாது படுவர்' என்பதற்கிணங்க, இப்போது தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, வீதிக்கு வீதி, ஒப்பாரி வைக்கின்றனர்!

ஒவ்வொரு சின்னத்துக்கும் வரலாறும், அதற்கென்று தனிப் பெருமை யும் உண்டு. எனவே, புதிய அரசாவது ஹிந்துக்களின் உணர்வு புரிந்து, அறநிலையத்துறையின் சின்னமான ராஜகோ புரத் தையே மீண்டும் சின்ன மாக வைக்க வேண்டும்!

*******

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us