sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தமிழகம் பின்தங்கி விடும்!

/

தமிழகம் பின்தங்கி விடும்!

தமிழகம் பின்தங்கி விடும்!

தமிழகம் பின்தங்கி விடும்!

4


PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.பாடலீஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, 'டாஸ்மாக்'கடைகளில், 430 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

தமிழகத்தில் வயது வித்தியாசம் இன்றி பள்ளிமாணவ -- மாணவியர் முதல், பல் போன முதியோர் வரை டாஸ்மாக் போதைக்கு அடிமையாகி, பல குடும்பங்களை நாசமாக்கிக் கொண்டிருக்கும் மது விற்பனையை, ஏதோ சாதனை இலக்கை எட்டி விட்டது போல் செய்தி வெளியிடுவது வேதனையை தருகிறது.

தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, கனிமொழி எம்.பி., 'டாஸ்மாக் மதுவால், தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டனர்' என குற்றஞ்சாட்டினார்.தற்போது தி.மு.க., ஆளுங்கட்சி ஆன பிறகு, அந்த நிலை மாறிவிட்டதா என்பதைமக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோல், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், '2016 சட்டசபை தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொல்லியதால் தான், தோல்வியடையநேரிட்டது' என்றும் சால்ஜாப்பு சொல்கிறார்.

பீஹார் மற்றும் குஜராத்தில், 'ஓட்டுகளைஇழந்தாலும் பரவாயில்லை; மக்கள் நலனேமுக்கியம்' என்பதற்கேற்ப, பூரண மதுவிலக்கைஅங்கே உள்ள ஆட்சியாளர்கள் அமல்படுத்தினர். அதன்பின், பின்தங்கிய நிலையில்இருந்த பீஹார் மாநிலம் தற்போது முன்னேற்றப் பாதையில் செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், சில தமிழக அரசியல்வாதிகள் தான், 'மதுவிலக்கு வந்துவிட்டால் கள்ளச்சாராயம் பெருகும்' என்ற சப்பையான காரணங்களை சொல்கின்றனர். கள்ளச்சாராயத்தை தடுப்பது என்பது அரசு மற்றும் காவல் துறையின் பொறுப்பு.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்தபடியே சென்றால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் இருந்து விலகி, மிகவும் பின்தங்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



சீக்கிரம் முடிங்க பன்னீர்செல்வம்!


டி.ஈஸ்வரன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: கடந்த 1972-ல், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கி சில நாட்கள் ஆகி இருந்தன. அப்போது,திருப்பூரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், 'தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் வருமானத்திற்கு அதிகமாகசொத்து சேர்த்து இருக்கின்றனர்' என்று பேசினார்.

இதற்கு, திருப்பூர் கோர்ட்டில், அந்த தொகுதியின், தி.மு.க., - எம்.எல்.ஏ.,துரைசாமி, எம்.ஜி.ஆர்.,மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். எம்.ஜி.ஆர்., தனக்கு சம்மன் கிடைக்கப்பெற்ற உடனே சென்னையில் இருந்து ரயில் வாயிலாக திருப்பூர் சென்று,கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

'அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.,என்னை பற்றித்தான்அவதுாறு பேசினார். நான்தான் திருப்பூர் தொகுதியின்தி.மு.க., - எம்.எல்.ஏ.,' என்று துரைசாமி வாதிட்டார்.அதற்கு எம்.ஜி.ஆர்., 'பொதுக்கூட்டத்தில் துரைசாமிஎன்று நான் குறிப்பிட்டு பேசவில்லை; பொதுவாக பேசினேன். இன்னாரென்றுபேசவில்லை' என்று கூறி,அதற்கான ஆதாரங்களையும்நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

விவாதம் முடிந்தவுடன் நீதிபதியும், 'துரைசாமி என்றுகுறிப்பிட்டு பேசாமல், பொதுவாகத் தான் பேசிஉள்ளார்' என்று கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு, மேல்முறையீட்டுக்கு வந்தது.அங்கேயும் நேரில் ஆஜராகி,தன்பக்க நியாயத்தை முன்வைத்து, வழக்கில் இருந்து விடுதலை ஆனார் எம்.ஜி.ஆர்.,

வழக்கை இழுத்தடிக்க எந்த தந்திரமும் செய்யாமல்,கோர்ட்டுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, வழக்கை விரைந்து முடிக்கஉதவினார்.

அதுமட்டுமல்ல; தன்மீதுஅவதுாறு வழக்கு தொடர்ந்ததி.மு.க., - எம்.எல்.ஏ., திருப்பூர் துரைசாமியை,அதே உயர் நீதிமன்றத்தில்சந்தித்து, நலம் விசாரித்தார்.

கடந்த, 2006-ல் தி.மு.க., ஆட்சியில் தொடுக்கப்பட்டசொத்துக்குவிப்பு வழக்கில்இருந்து பன்னீர்செல்வம்மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை கோர்ட்பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, அந்த வழக்கை, சிறப்பு கோர்ட் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்உத்தரவிட்டுள்ளார்.

'பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்ப வேண்டும். அவர்கள் ஆஜரான பின், ஜாமின் வழங்கலாம். இந்த வழக்கைஇழுத்தடிக்க ஏதாவது தந்திரம் செய்தால், வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்து, சிறையில் அடைக்கசிறப்பு கோர்ட் நடவடிக்கைஎடுக்க வேண்டும்' என்று நீதிபதி கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரை தன் தலைவராக ஏற்றுக்கொண்டுஉள்ள பன்னீர்செல்வம்,வழக்கை இழுத்தடிக்காமல்,தன் மீதுள்ள அத்தனைவழக்குகளையும் விரைந்துமுடிக்க வேண்டும். செய்வாரா?



வாங்க... நீங்களா, நாங்களா... பார்த்து விடுவோம்!


ஆர்.பாலமுருகன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'ஓட்டு போட்ட மக்களை நேரில் சந்திக்க முடியாது; அதற்கானவாய்ப்புகள் இல்லை' என்று ஆணவத்தோடு அறிக்கை விட்டிருக்கும்,வைகோவின் புதல்வர்துரைக்கு ஒரு சில கேள்விகள்...

திருச்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, ஆன்லைனிலா பிரசாரம் செய்தீர்கள்? ஆன்லைனிலா மக்கள் ஓட்டு போட்டனர்?

'எனக்கு ஓட்டு போட்டுஜெயிக்க வைத்தாலும்,நான் நேரடியாக வந்து, உங்கள் குறைகளை களைய முடியாது; அதற்கு வாய்ப்பு இல்லை' என்று ஓட்டு வாங்கும் முன்பே தெரிவித்து விட்டீர்களா?

'இந்த ஆட்டு மந்தை கூட்டத்திடம் ஓட்டுகளைவாங்கிவிட்டு, நாம் என்னவேண்டுமானாலும்பேசலாம்' என்று நினைத்து விட்டீரோ?

மக்கள் நினைத்தால், எதை வேண்டுமானாலும்செய்வர்; அதற்கு உங்கள் தந்தையே மிகச் சிறந்த சாட்சி.

ஆறு பேர் உயிர்களைபலி வாங்கி, யாரை எதிர்த்து அரசியல் செய்யஆரம்பித்தாரோ, அவரையே ஒதுக்கி வைத்தவர்கள் நம் தமிழக மக்கள் தான்; அவருக்கு அங்கீகாரம் கொடுக்க மறுப்பதும், இதே மக்கள் தான்.

உங்கள் தந்தை, நல்ல இலக்கியவாதி தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், கொள்கையை விட்டுக் கொடுத்து, மாறி மாறி இரு கழகங்களிடமும்கையேந்தி நிற்பது, எந்த வகையில் நியாயம்?

நல்ல அரசியல் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் அனைவரும் அரசியலை விட்டு சென்று விடுங்கள்; அடுத்தவர்களுக்கு வழி விடுங்கள்.

அதை விட்டு, இப்படிஓட்டு போட்ட மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்!

இவ்வளவு துாரம் நீங்கள் பேசிய பின், உங்களுக்கு தைரியம் இருந்தால், அதே திருச்சி லோக்சபா தொகுதியில் அடுத்த முறை நீங்கள் போட்டியிட்டு பாருங்களேன்... அப்போது தெரியும், தமிழக மக்கள் யார் என்று!

வாங்க... நீங்களா,நாங்களா என பார்த்து விடுவோம்!








      Dinamalar
      Follow us