sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சரியான பாடம் கற்பிப்பர்!

/

சரியான பாடம் கற்பிப்பர்!

சரியான பாடம் கற்பிப்பர்!

சரியான பாடம் கற்பிப்பர்!

5


PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ராமசுப்பு, கோவையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, பேட்டி அளித்துள்ள அமைச்சர் ரகுபதி, 'எதுவும் நடக்க வில்லை என்று சொல்ல முடியாது; குற்றம் செய்வோர் செய்து கொண்டு தான் இருப்பர். தி.மு.க., ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி கற்பது அதிகரித்து வருவதை சிதைத்து, பெண்களை வீட்டில் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குகின்றனர்' என்று திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.

பெண்கள் கல்வி கற்பதை தடுத்து, அவர்களை வீட்டில் முடக்கும் வேலையை எதிர்க்கட்சியினர் செய்கின்றனரா அல்லது குற்றவாளிகளுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரத்தைக் கொடுத்து, திராவிட மாடல் அரசு பெண்களை வீட்டிற்குள் முடக்குகிறதா?

இன்று, வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் பல் போன பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலையில், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பது, சட்ட அமைச்சருக்கு தெரியவில்லையா?

'தான் திருடி பிறரை நம்பாள்' என்பது போல், தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, சிறு விஷயத்தையும் பூதாகரமாக்கி அரசியல் செய்த பழக்க தோஷத்தில்,இன்று, நியாயமான விஷயங்களுக்கு எதிர்க்கட்சியினர் போராடினாலும், அது அரசியல் செய்வதாக தோன்றுகிறது!

'எதிர்க்கட்சி என்றால், அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்' என்று கேட்டவர் தானே இன்றைய முதல்வர் ஸ்டாலின்.

அது சட்ட அமைச்சர் ரகுபதிக்கு மறந்து விட்டதா?

தி.மு.க., பதவியில் இல்லாமல் இருந்தால்அரசியல் செய்யும்; இதர கட்சிகள் பதவியில்இல்லாவிட்டால், 'அவியல்' செய்ய வேண்டுமா?

குற்றம் செய்வோர் செய்தபடி தான் இருப்பர் என்றால், காவல் துறையும், காவல் நிலையங்களும் எதற்கு?

அனைத்தையும் இழுத்து மூடி விட்டு, அனைவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டியது தானே?

ரகுபதி போன்ற அமைச்சர்களின் அலட்சியபதில்களுக்கு, 2026 சட்டசபை தேர்தலில், மக்கள் சரியான பாடம் கற்பிப்பர்!

அப்போது, உங்கள் ஆணவம் அடங்கும்!



தாமதமான நீதி!


வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாடு முழுதும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில், 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன' என்கிறார், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால். கடந்தாண்டு நவம்பர் 24 நிலவரப்படி, நாடு முழுதும் மாவட்ட மற்றும் கீழ் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், 4 கோடியே 53 லட்சம். அனைத்து கோர்ட்டுகளிலும் மொத்தம், 5 கோடியே, 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், சைபர் கிரைம், சிவில், குற்ற வழக்குகள்,பொருளாதார குற்றம், பொதுநல வழக்குகள், அரசுத்துறை சார்ந்த வழக்குகள், போக்சோ எனபல பிரிவுகளில் வழக்குகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

நீதிபதிகளின் பற்றாக்குறையால், வழக்குகள்மலைபோல் தேங்கிக்கிடக்கும் சூழலில், வழக்கறிஞர்கள் அடிக்கடிவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கானோர் சட்டப்படிப்பு முடித்து வெளியேறினாலும், இன்றும், பல்வேறு வழக்குகள், 30 ஆண்டுகளுக்கும்மேலாக ஜவ்வாக இழுத்துக் கொண்டு தான் செல்கின்றன.

இன்னும் சில வழக்குகளில், அடுத்தடுத்த தலைமுறையினரும் அதை தொடர்ந்து நடத்தும் அவலமும் நிகழ்கிறது. தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது ஒரு சட்டக் கோட்பாடு.

இதை மனதில் வைத்து, காலச் சூழ்நிலை, தேவையை கருத்தில் கொண்டு, சிறப்பு நீதிமன்றங்கள், விரைவு மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அத்துடன், நீதிமன்றங்களின் வேலை நாட்களை உயர்த்த வேண்டும். அப்போது தான், விரைந்து நீதி கிடைக்க வழி உண்டாகும்.

மத்திய - மாநில சட்டத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, நீதிபதிகள் பணியிடங்கள்காலியில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்!



பரம்பரை கோளாறுங்க!


ந.கோதை ஜெயராமன், நசரத்பேட்டை, சென்னையில்இருந்து எழுதுகிறார்: கருணாநிதியின் சிலேடை வார்த்தைகளில் பிரபலமானது... 'தவறு செய்தால்,தட்டிக் கேளுங்கள்; நல்லது செய்தால், தட்டிக் கொடுங்கள்' என்பது!

அதேநேரம், 1972ல், 'தி.மு.க., அமைச்சர்கள் பலர் ஊழல் பேர்வழிகளாக உள்ளனர். அவர்கள்தங்களது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்' என, தவறை தட்டிக் கேட்டதால், அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், எம்.ஜி.ஆர்., இப்படி, 'சொல் ஒன்று; செயல் வேறாக' இருப்பது தான், கருணாநிதியின் குணம்!

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., எனும் கட்சியை துவங்கி, உடனே, ஆட்சியை பிடித்தது அனைவரும் அறிந்த விஷயம் தான்!

ஆனால், 1984ல் எம்.ஜி.ஆர்., உடல் நலமின்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சட்டசபை, லோக்சபா என இரு தேர்தல்களிலும் கருணாநிதி பிரசாரம் செய்த யுக்தி இருக்கிறதே...

'நண்பரின் நலிவு நீங்கி, நல்லாட்சி மலர்ந்திட, ஆதரிப்பீர் உதயசூரியன்' என்றும், 'நண்பர் உடல்நலம் தேறி வந்தால், ஆட்சியை அவருக்கு விட்டுத் தருகிறோம்' என்றும் தந்திரமாக பேசிப் பார்த்தார்.

மக்கள் அவரையும் நம்பவில்லை; அவர் வார்த்தை ஜாலத்திலும் ஏமாறவில்லை.

இப்போது, கருணாநிதி வழியில், அவர் மகன் ஸ்டாலின்...

'நீட் தேர்வை நீக்குவேன்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன், மாதந்தோறும் மின் கணக்கீட்டை கொண்டு வருவேன்' என்றெல்லாம்வாக்கு கொடுத்தார். செய்தாரா?

'என் வீட்டிலிருந்து மகனோ, மருமகளோ, மகளோ, மருமகனோ, அரசியலுக்கு வருவதை அறவே தவிர்ப்பேன்' என்றார்.

ஆனால், நடந்தது என்ன...

தன் மகனை அரசியலுக்குகொண்டுவந்து, ஆட்சியிலும் அமர வைத்து விட்டார்.

ஸ்டாலின் மகன் உதயநிதியோ, இவர்களுக்குஎல்லாம் மேலாக வாயிலேயே பந்தல்போடுவதில் வித்தகர்...

'தாங்கள் துணை முதல்வராக வருவதற்கு சாத்தியக்கூறு உண்டா' என்று பத்திரிகையாளர்கள்அவரிடம் கேள்வி கேட்டபோது, 'என்னை விட கட்சியில் உழைத்த முன்னோடிகள் பலர் உள்ளனர்' என்று கூறினார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயேதுணை முதல்வர் ஆனார்.

ஆக மொத்தம்,'வாயிலேயே வடை சுடுவது' என்பது, தி.மு.க.,தலைமையின் பரம்பரை கோளாறு என்பதை புரிந்து, மக்கள் தான் ஏமாறாமல் இருக்க வேண்டும்!








      Dinamalar
      Follow us