PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

ரா.ஷண்முகசுந்தரம், அவிநாசி, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சபரிமலைக்கு பெருவழியில் சென்று அய்யப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு, தனி வரிசை ஏற்படுத்த வேண்டும்' என, அய்யப்ப பக்தர்கள் சார்பாக,சில ஆண்டுகளுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் - இது உங்களிடம் பகுதியில் கோரிக்கை வைத்திருந்தேன்.
தற்போது, 'பெருவழியில் செல்லும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும்' என்ற தேவசம் போர்டின் அறிவிப்பு, 'தினமலர்' இதழில் வெளிவந்துள்ளதைக் கண்டு மகிழ்வாக உள்ளது.
என் போன்ற எளிய அய்யப்ப பக்தரின் கோரிக்கையை 'தினமலர்' நாளிதழில் பிரசுரித்து, தேவசம் போர்டு வரை கொண்டு சென்று, பக்தர்களுக்கு நல்வழி காட்டிய 'தினமலர்' பத்திரிகைக்கு நன்றி!
காங்கிரசின் வேடம்!
க.ஜெயராமன்,
பெங்களூரு,கர்நாடக மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'சம்பந்தமே இல்லாமல், அம்பேத்கர் அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது,
'பேஷன்'ஆகிவிட்டது' என்று காங்.,- கம்யூ., கட்சிகளை சாடிஉள்ளார், மத்திய
உள்துறைஅமைச்சர் அமித்ஷா.
அவரின் குற்றச்சாட்டில்என்ன பிழை உள்ளது?
அம்பேத்கரின்
ஜாதியைசொல்லியும், உடல் தோற்றத்தை கேலி செய்தும்இழிவுபடுத்திய காங்., -
கம்யூ., மற்றும் திராவிட பேர்வழிகளுக்கு, அவர் மறைந்து, 68
ஆண்டுகளுக்குபின், இன்று, திடீரென அம்பேத்கர் மீது பாசம் பொங்கி வழிகிறது.
கடந்த, 1952ல், தற்போதைய வடக்கு மும்பை தொகுதியில்
போட்டியிட்டார்,அம்பேத்கர். அவரை தோற்கடித்து, அவமானப்படுத்த வேண்டும்
என்பதற்காகவே, காங்., கட்சி, அவரின் முன்னாள் உதவியாளர் என்.எஸ்.
கஜ்ரோல்கரை வேட்பாளராக நியமித்து, கம்யூ., கட்சி உதவியுடன், அவரை
தோற்கடித்தது. ஆனால், அம்பேத்கரை ராஜ்யசபா எம்.பி., ஆக்கியது,
ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் தான்.
நேருவும், கம்யூ., தலைவர் டாங்கேவும் அவரை அவமானப்படுத்தியதை போல, வேறு யாரும் அம்பேத்கரை அவமதித்தது இல்லை.
வரலாறு
இப்படி இருக்க,அவர் என்னமோ ஒட்டுமொத்த ஹிந்து
மதத்துக்கும்,ஆர்.எஸ்.எஸ்.,க்கும் எதிரானவரை போல, இங்குள்ள மதவெறி கூட்டம்
மடை மாற்றம் செய்கின்றன.
கடந்த 60 ஆண்டுகளாகஆட்சியில் இருந்த
காங்., அரசு, நேரு, இந்திரா, ராஜிவ்என்று தங்கள் குடும்பத்துக்குள் பாரத
ரத்னா விருதைகொடுத்து மகிழ்ந்தனரே தவிர,அம்பேத்கருக்கு விருது வழங்குவது
குறித்து நினைக்ககூட இல்லை. 1990ல் தான், அவருக்கு பாரத ரத்னா விருது
வழங்கப்பட்டது.
லண்டனில் அவர் தங்கிப்படித்த வீட்டை விலைக்கு
வாங்கி, அவர் பெயரில் இந்திய மாணவர்கள் தங்கிப்படிக்கும் விடுதியாக
மாற்றியது,காங்., அரசு அல்ல; மோடிஅரசு!
அம்பேத்கர் பிறந்த
இடம்,படித்த இடம், மதம் மாறியஇடம், மரணித்த இடம் மற்றும் அவரது சமாதி
ஆகியவற்றை மேம்படுத்தி,சுற்றுலாத் தளமாக, கண்காட்சிஅரங்கமாக உருவாக்கி,
அந்த இடங்களை, 'பஞ்ச தீர்த்தம்' என்று அறிவித்தது,காங்., ஆட்சியில் அல்ல;
மோடி ஆட்சியில்!
டில்லியில் அவரது பெயரில் பிரமாண்டமானசர்வதேச அரங்கத்தை கட்டி, அவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது காங்., அல்ல; பா.ஜ., அரசு.
இப்படி
அம்பேத்கரின்புகழுக்கு மேலும் பெருமைசேர்ப்பது பா.ஜ., தான். ஆனால், நம்
நாட்டை, 60ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிசெய்தும், அம்பேத்கருக்கு எதையுமே
செய்யாமல், அவரை இருட்டடிப்பு செய்த காங்., இன்று திடீரென
அம்பேத்கர்பெயரைச் சொல்லி கோஷமிடுகிறது என்றால், அது நாடகம் இன்றி வேறு
என்ன?
'சீன்' காட்டாதீர்கள்!
ரா.சேது
ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
வயநாடுதொகுதி எம்.பி., பிரியங்கா,பார்லிமென்ட்டின் இரண்டுநாள் வருகையின்
போது, முதல் நாள், பாலஸ்தீன ஆதரவு படம் பொறித்த பையுடன் வந்திருந்தார்.
இரண்டாவது
நாள், வங்கதேச உள்நாட்டு போரில், ஹிந்து மற்றும்கிறிஸ்துவ
மக்களுக்கானஆதரவு நிலைப்பாட்டை தெரிவிக்கும் அடையாளத்துடன் கூடிய, ஒரு
பையுடன்வந்திருந்தார். இதை தொலைக்காட்சியில் பார்க்கும் போது, காமெடியாக
இருந்தது.
இப்படி பையை தொங்கப்போட்டு கொண்டு வந்து விட்டால்,
அப்படியே, இஸ்ரேல் போரை நிறுத்தி விடும்; பாலஸ்தீனம் அமைதிபூங்காவாக
மாறிவிடும். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது நின்று,எல்லாரும்
கைகோர்த்து, ஆடிப் பாடப் போகின்றனர்பாருங்கள்...
இம்மாதிரி வேண்டாத
வேலைகளை செய்வதற்குபதில், தன்னை எம்.பி.,யாகதேர்ந்தெடுத்த வயநாட்டு
தொகுதியின் மறுசீரமைப்புபணி குறித்து பார்லிமென்ட்டில் பேசலாம்;
பேரிடருக்கான நிதியை கேட்டுப்பெறலாம்.
அதை விடுத்து, பாலஸ்தீனம், வங்கதேச சிறுபான்மையினருக்கான ஆதரவு என, வேடிக்கை காட்டும் நாடகம் தேவையா?
பாலஸ்தீனமும், வங்கதேசமும் இந்தியாவிற்குள்ளாஇருக்கிறது... அதைப் பற்றிபார்லிமென்ட்டில் பேசப் போகிறீர்கள்?
குஜராத்தையும்,
வாரணாசியையும் போய் பாருங்கள்... 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'
என்பது போல, எப்படி முன்னேறி இருக்கின்றன என்று!
அதேபோல உங்கள்
தொகுதியையும் முன்னேற்றுவதில் அக்கறை காட்டுங்கள். உங்கள் தொகுதி பழங்குடி
மக்கள், நிலச்சரிவில், தங்கள் உறவினர்களின் உயிரையும், சொத்து
சுகங்களையும் இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்.
அணுகுண்டு
வீச்சுக்கு பின், ஜப்பான் எப்படி வெகுவிரைவில் மீண்டு எழுந்ததோ, அதைப்
போல, வயநாட்டையும் மீட்டு எடுப்பதில் முயற்சி காட்டுங்கள்.
முடிந்தால்
வயநாட்டிலேயே தங்குங்கள் மாறாக,பையை போட்டுக் கொண்டுவந்து, 'சீன்'
காட்டாதீர்கள். ஏற்கனவே, உங்கள் அண்ணன் ராகுல், ஏகப்பட்ட, 'சீன்' காட்டி
விட்டார். அது எடுபடாமல் போய் விட்டது. இப்போது நீங்களும் அதே வேலையை
செய்யாமல், ஆக்கப்பூர்வமாக பணியாற்றுங்கள்!
நடவடிக்கை எடுக்குமா?
ஜீ.ரவிச்சந்திரன்,
திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஒரே நாடு; ஒரே
தேர்தல்' அறிவித்தால் மட்டும் போதாது;அத்துடன், தேர்தலின் போதுபதிவாகும்
ஓட்டுகளின் சதவீதத்தையும், அரசும், தேர்தல் ஆணையமும் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
காரணம், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக நாட்டின்பல
இடங்களில் தங்கி இருப்பவர்களால், தேர்தல்சமயத்தில், சொந்த ஊருக்குவந்து
ஓட்டளிக்க முடிவதில்லை. இதன் காரணமாகவே, 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே
ஓட்டுகள் பதிவாகின்றன.
இதை தவிர்க்க, நவீன தொழில்நுட்பம்
வாயிலாக,எந்த ஊரில் இருந்தாலும்,எந்த வங்கி ஏ.டி.எம்.,மிலும்பணம் எடுக்கும்
வசதி உள்ளது போல், எந்த ஊரில் இருந்தும், ஆதார் எண்ணைப்பயன்படுத்தி
வாக்களிக்கும் வசதியை, தேர்தல் ஆணையம் உருவாக்கிட வேண்டும்.
எப்படி, 'டிஜிட்டல்' இந்தியா சாத்தியமானதோ,அதுபோல், இதுவும் சாத்தியமாகும்.
இதன்வாயிலாக, விடுபட்ட, 20 - 30 சதவீதஓட்டுகள் பதிவாகும் பட்சத்தில், தேர்தல் முடிவுகள் மாறுபடலாம்.
எனவே, தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எங்கிருந்தாலும் ஓட்டு அளிக்கும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும்!