PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

பி.மணியட்டிமூர்த்தி, கோவையில் இருந்து எழுதுகிறார்: 'தி.மு.க., குடும்ப ஆட்சி; ஊழல் கட்சி' என்கிறார் விஜய்; அ.தி.மு.க.,வும்ஊழல்தானே!
'திராவிட கட்சிகளில் ஊழல் செய்யும் கட்சி எது' என்று பட்டிமன்றம் வைத்தால், தி.மு.க., -- அ.தி.மு.க., இடையேதான் கடுமையான போட்டி இருக்கும். இறுதியில்இரு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல என்றுதான் தீர்ப்பு வரும்.
கூட்டணி குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்துமான விஜயின் பேச்சு, தேர்தலில் தனித்து நின்றால், ஜெயித்து முதல்வர் நாற்காலியில் அவரால் அமர முடியாது என்பதை, தெளிவாகக் காட்டி விட்டது.
முதல்வர் பதவி என்பது, அண்ணாச்சி கடையில் விற்கும் பொருள் அல்ல, பணம் கொடுத்து வாங்கி வருவதற்கு. கட்சி ஆரம்பித்த நடிகர்களான சிவாஜி கணேசன், கார்த்திக், மன்சூர் அலிகான் மற்றும் இன்னும் பல நடிகர்களின் நிலையை எண்ணிப் பார்த்தால், வரலாறு புரியும்.
மறைந்த நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தமுதல் மாநாட்டில், 25 லட்சம் ரசிகர்களை ஒன்று திரட்டினார். தேர்தலில் தனித்து நின்று விருத்தாசலம் தொகுதியில் மட்டும்வென்றார். ஆனால், அடுத்த தேர்தலில்புத்திசாலித்தனமாக சிந்தித்து, அ.தி.மு.க.,வுடன்கூட்டணி அமைத்து, 42 தொகுதிகளை கேட்டுப் பெற்று, அதில் 29 இடங்களில் வென்று, ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து நின்றார்.
தற்போதைய தி.மு.க., ஆட்சியில், முதல்வர்ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்குதுணை முதல்வர் பதவியை வழங்கிஇருப்பது, அழகு பார்ப்பதற்காக மட்டுமல்ல;அரசியலில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வதற்கும்தான்.
திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில்யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், மழையில் முளைத்த காளான் போல நம்பிக்கையை மட்டுமே வைத்து அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் போன்றவர்கள், முதல்வர் நாற்காலி குறித்து இப்போதே பகல் கனவு காண்பது முட்டாள்தனம்.
இதுவரை கடந்து வந்த பாதையைவிட, இனி கடக்க போகும் பாதை மிகவும் கடினமானது விஜய்!
ஆடிய வேடம் கலைந்ததம்மா!
எஸ்.ராம், கும்பகோணத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்த வரும்
கட்சிகள், எடுத்ததுமே, 20 இடங்கள் கேட்கின்றனர். கூடவே, 50லிருந்து 100 கோடி ரூபாய்கேட்டு, பேரம் பேசுகின்றனர்' என, திருச்சியில்நடந்த, அ.தி.மு.க., மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் கள ஆய்வுக் கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் எடுத்துரைத்துள்ளார்.
'கொள்கையாவது, வெங்காயமாவது... வெற்றி ஒன்றே லட்சியம்' என்ற புதிய அணுகுமுறையில், 'லெட்டர்பேடு' கட்சிகள் துவங்கி, நாட்டிலுள்ள ஜாதி சங்கங்கள், துண்டு - துக்கடா
கட்சிகள் அனைத்தையும்,கூட்டணி என்ற ஒரு குடைக்குள் கொண்டு வந்து, சட்டசபை, பார்லி.,தேர்தல்களை எதிர்கொள்வது, திராவிடக் கட்சிகளின் வாடிக்கையாகஇருந்து வந்தது.ஓட்டளிக்கும் வாக்காளர்களாகிய நாமும், ஏதோ இந்த கட்சிகள் அனைத்தும்,
மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை செய்யத்தான் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன என்று, இதுகாறும்நம் மூளைகளை அடகு வைத்து, முட்டாள்தனமாக
நம்பிக் கொண்டிருந்தோம்.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், 'நன்மை' செய்ய வேண்டும் என்ற எண்ணம், இரு கழகங்களுக்கும் கிடையவே கிடையாது என்று,
சமீபத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், கழகங்களின் முகமூடியைக்கிழித்து தொங்க விட்டார்.நீதிபதி வேல்முருகனின் விமர்சனத்தை மெய்யாக்குவது போலவே, திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க.,வின் கள ஆய்வுக் கூட்டம், கட்டியம் கூறி இருக்கிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், வாணிஸ்ரீயும்இணைந்து நடித்த,கண்ணன் என் காதலன் என்ற திரைப்படத்தில்,கவிஞர் ஆலங்குடி சோமு எழுதிய ஒரு பாடல் வரும்...'கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்குமுக்கு திக்குத்தாளம்; எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்குமுக்கு திக்குத்தாளம்' என்பதே அது!
கடந்த 2021 லோக்சபா தேர்தலில், கம்யூனிஸ்டுகளுக்கு, தி.மு.க., 25 கோடிகள் கொடுத்த விவகாரம் வெளிச்சத்துக்குவந்தது. 2026 சட்டசபை தேர்தலுக்கு, பந்தக்கால் நடுவதற்கு முன்னரே, பேரம் ஆரம்பித்து விட்டது.
மீண்டும், ஊட்டி வரை உறவு படப் பாடல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது... 'புது நாடகத்தில்ஒரு நாயகி சிலநாள் மட்டும் நடிக்க வந்தாள்... ஆடிய வேடம் கலைந்ததம்மா... அந்தோ பரிதாபம்...' என்கிறது அது!
தமிழக வாக்காளர்களே...என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்தித்து செயல்படுங்கள்!
காவல் துறை பதில் தருமா?
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நடிகை கஸ்துாரி, தெலுங்கர்களை ஏதோ தரக்குறைவாக பேசி விட்டார். அதற்கு கண்டனங்கள் சரமாரியாக குவியவும், அவர் மீது வழக்கும் தொடர்ந்தனர். ஆனால், கடிதம் வாயி
லாகவும், வார்த்தையாகவும்மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.அதன்பின்பும், தமிழக காவல் துறையினர் ஏதோ ஒரு பெரிய கொலை
குற்றவாளியை தேடுவதுபோல், தனிப்படை அமைத்து கஸ்துாரியைதேடி, கைதும் செய்து விட்டனர். தற்போது, அவர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விஷயத்தில், தமிழக காவல் துறையை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்படி சுறுசுறுப்பாக செயல்படும் நம் காவல் துறை சில விஷயங்களில் மெத்தனமாக
இருக்கிறதே...
* கஸ்துாரியை பிடிக்க காட்டிய காவல் துறையின் வேகம், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை கைது செய்வதில் இல்லாமல் போனது ஏன்?
* பெண்களை மேடையில் இழிவாக பேசிய தி.மு.க., பேச்சாளர்களான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் ஆகியோரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியது ஏன்?
* சென்னை கே.கே.நகர் பகுதியில், தி.மு.க., பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சியினரை கைது செய்வதில் இவ்வளவு வேகம் காட்டாதது ஏன்?
* பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகனால், பணிப்பெண் கொடுமைக்கு ஆளான போது, அவரை கைது செய்ய இவ்வளவு வேகம் காட்ட வில்லையே... ஏன்?
இதுபோன்ற பல ஏன்கள் இருக்கின்றன... இவற்றுக்கெல்லாம் நம் காவல் துறை விளக்கம் தருமா?