தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: அக். 19

இது உங்கள் இடம்: அக். 19

இது உங்கள் இடம்: அக். 19


PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வின் வியூகம் பலிக்குமா?



அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கரப்பான் ஜனதா கட்சியினருக்கு, தி.மு.க., ஆதரவு அளித்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய, தி.மு.க., தயாராக இருப்பதாக, சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார், அக்கட்சி தலைவர் ஸ்டாலின்.

தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்படாத ஓர் அமைப்பு, கரப்பான் ஜனதா கட்சி!

அமெரிக்கா மற்றும் ஜெர்மன் வாழ் இந்தியர்களால், பிரதமர் மோடிக்கு எதிராக வழி நடத்தப்படும் இந்த அமைப்பு, இங்குள்ள இளைஞர்களை துாண்டி, நாட்டை போராட்ட களமாக்க துடிக்கிறது.

இந்நிலையில், தி.மு.க., வலியச் சென்று, இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது என்றால், காரணம் இல்லாமல் இருக்குமா?

காங்கிரசை கை கழுவியுள்ள நிலையில், அக்கட்சி தலைமை வகிக்கும், ‘இண்டி’ கூட்டணியில், தி.மு.க., இணைய முடியாது. பா.ஜ.,வில் இணைந்தால், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்து விடும்.

இப்படி, இரண்டும்கெட்டான் சூழ்நிலையில், மத்தியில் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்ட, ஏதாவது ஒரு கட்சியின் பின் செல்ல வேண்டும் அல்லது தங்கள் தலைமையில் ஒரு கூட்டணி உருவாக வேண்டும்.

அதற்காக, தி.மு.க., போடும் மாஸ்டர் பிளான் தான், கரப்பான்களுடன் கரம் கோர்க்க நினைப்பது!

ஆனால், ஆம் ஆத்மியின், ‘பி’ டீமான, கரப்பான் கட்சி, தேர்தல் களத்தில் நின்றாலும், ‘இண்டி’ கூட்டணி ஓட்டுகளை தான் அது கபளீகரம் செய்யுமே தவிர, அதற்கென்று பிரத்யேகமான ஓட்டு வங்கி இல்லை.

தற்போது, அதன் போராட்ட களத்தில் கூடுவது எல்லாம், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா கட்சியினர் மற்றும் பிரிவினைவாத, மதவாத அமைப்பினர் தானே தவிர, இந்தியாவின் ஒட்டுமொத்த, ‘ஜென்ஸி’ இளைஞர்கள் அல்ல!

இதை கணக்கில் கொள்ளாமல், கரப்பான்களுடன் கரம் கோர்த்து, மத்தியில் ஓர் அரசியல் மாற்றத்திற்கு அச்சாரம் போட நினைக்கிறது, தி.மு.க.,

இதுபோன்று தான், முன்பு விடுதலை புலிகளுடன் இணைந்து, ஓர் அரசியல் வியூகம் வகுத்து, ஆட்சியை இழந்தது, தி.மு.க.,

ஆனாலும், தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல், அமெரிக்காவின் பின்புலத்தில் இருந்து இயங்கும் கரப்பான்களுடன் கரம் கோர்த்து, தன் கனவுகளை கட்டமைக்க நினைக்கிறது.

பார்ப்போம்... தி.மு.க.,வின் வியூகம் பலிக்கிறதா, பகல் கனவாகிறதா என்று!

lll



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us