sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

 இது உங்கள் இடம்

/

 இது உங்கள் இடம்

 இது உங்கள் இடம்

 இது உங்கள் இடம்


PUBLISHED ON : ஜன 02, 2026 02:04 AM

Google News

PUBLISHED ON : ஜன 02, 2026 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திறனற்ற நிர்வாகத்தின் சிறுமை!

எஸ்.சுந்தரேசன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதான், பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2021ல் நான் முதல்வராக இருந்த போது, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா, 2,500 ரூபாய் வழங்கினேன்.

'அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார். இப் போது, அவரே முதல்வராக இருப்பதால், அவர் கூறிய, 5,000 ரூபாயை பொங்கல் பரிசாக வழங்க வேண்டும்...' என்று கூறியுள்ளார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

எந்தவொரு குடும்பமும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியத்தில் தான் பண்டிகை கொண்டாட விரும்புமே தவிர, பிச்சைக்காசில் கொண்டாட விழையாது.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பொங்கல் தொகுப்பு எனும் பெயரில், அரசு தரும் சொற்ப பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலையில், நாட்டு மக்களை வைத்திருப்பதற்காக ஆட்சியாளர்கள் கூனிக்குறுக வேண்டுமே தவிர, பெருமைப்படக் கூடாது.

'கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சைப்புகினும் கற்கை நன்றே!' என்று சொன்ன அவ்வை பாட்டி கூட, கல்வி கற்க மட்டும் தான் பிச்சை எடுக்கலாம் என்று கூறினாரே தவிர, இதுபோன்று, ஆள்வோர் மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்து தரும் பணத்தை வாங்கி, அதில் பண்டிகையை கொண்டாட சொல்லவில்லை. மாறாக, 'ஏற்பது இகழ்ச்சி' என்று தான் ஏசுகிறார்.

எனவே, 'பொங்கல் தொகுப்பாக பணம் கொடுத்தோம்; வேட்டி - சேலை, அரிசி கொடுத்தோம்; வெல்லம், சர்க்கரை, கரும்பு கொடுத்தோம்; பொங்கலில் போட முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொடுத்தோம்.

'அவற்றையெல்லாம் எங்கள் முகம் பதித்த பைகளில் போட்டு கொடுத்தோம்' என்பதெல்லாம் பெருமையல்ல; திறனற்ற நிர்வாகத்தின் சிறுமை!

கடிவாளத்தை இறுக்குமா தேர்தல் ஆணையம்? வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருந்தவர்களின் பெயர்கள் என, தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து, 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பின், வாக்காளர்கள் பட்டியலை புதுப்பித்த தேர்தல் ஆணையத்தை, நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

இது சரியான நபர்கள் ஓட்டளிப்பதையும், ஓட்டு சதவீதம் அதிகமாவதையும் உறுதி செய்யும்.

அத்துடன், இனி வரும் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், வாக்காளர்கள் பட்டியலை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.

காரணம், மாநில அரசு ஊழியர்களே, தேர்தல் பணிகளை செய்வதால், ஆளும் அரசின் அழுத்தங்களுக்கு பணிந்து செயல்படக் கூடிய வாய்ப்புள்ளது.

உதாரணமாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சொல்லலாம்.

இத்தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் புகார் அளித்தும், தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

தற்போது நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் கூட, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிகட்சி ஆதரவாளர்கள்,போலி வாக்காளர்களைக் காப்பாற்ற முயன்றிருக்கலாம்.

ஏனெனில், ஆரம்பத்தில், எஸ்.ஐ.ஆரை கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., பணி துவங்கிய வுடன் பிற கட்சிகளை விட, அதிக அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.

மேலும், ஆளுங்கட்சி ஆதரவு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட பிற முக்கிய அதிகாரிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களை முக்கியமான தொகுதிகளுக்கு, தேர்தல் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் துவங்கும் முன்பே, அரசு இடமாற்றம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவை தவிர, பெரும்பாலான கட்சிகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் போன்ற யுக்திகளை கையாண்டு வருவதையும்காண முடிகிறது.

அனைத்து கட்சிகளும் எந்தவித பாரபட்சமுமின்றி, சம வாய்ப்புகளோடு போட்டியிட்டு வென்றால்தான், அது உண்மையான ஜனநாயகமாக, மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கக்கூடிய ஆட்சியாக இருக்கும்.

எனவே, அனைத்துவித குறுக்குவழிகளையும்,தகிடு தத்தங்களையும் கடைப்பிடித்து வெற்றியை பறிக்கும் அடாவடித்தனத்தை, தேர்தல் ஆணையம், தன் அதிரடி நடவடிக்கைகளின் வாயிலாக களை எடுக்க வேண்டியது அவசியம்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மீறுவதை தடுக்கவில்லையெனில், அக்கட்சிகள், விரைவிலேயே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற் பட்டவைகளாக மாறும் அபாயம் ஏற்படும்.

தற்போது நடந்த எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணியை, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து, முட்டுக்கட்டை போட்டு போராட்டம் நடத்தியதே அதற்கு உதாரணம்.

எனவே, ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில், தேர்தல் ஆணையம், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

'தீயசக்தி' மந்திரம் வேலை செய்யுமா? எஸ்.ஆர்.திராவிட், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., போன்று, தி.மு.க.,வை, 'தீயசக்தி' என்றும், தன் கட்சியை, 'துாயசக்தி' என்றும் கூறி வருகிறார்.

ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை தான், 'தீயசக்தி' என்று எம்.ஜி.ஆர்., வசைபாடினாரே தவிர, தி.மு.க.,வை அவர் தீயசக்தி என்று கூறியதில்லை.

காரணம், அண்ணாதுரை வியர்வை சிந்தியும்,எம்.ஜி.ஆர்., ரத்தம் சிந்தியும் உருவானது அக்கட்சி.

எம்.ஜி.ஆர்., கூறிய இவ்வார்த்தையை, பின்னாளில் ஜெயலலிதா இன்னும் அழுத்தமாக, ஆக்ரோஷமாக, 'திருக்குவளை தீயசக்தி' என்று முழங்கினார்.

இந்த முழக்கம், எம்.ஜி.ஆர்., ரசிகர்களை ஈர்த்து, அ.தி.மு.க.,வை அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்தது.

அவ்வகையில், இவ்வார்த்தையை தி.மு.க.,வை தோற்கடிக்கச் செய்யும் மந்திரச் சொல் என்றே கூறலாம்!

இச்சொல்லை பயன்படுத்துவோர், எந்த சூழ்நிலையிலும் தி.மு.க., குடும்பத்திடம் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை, தமிழக வாக்காளர்களுக்கு உண்டு.

அவ்வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை விட, த.வெ.க., தலைவர் விஜய் தான், தி.மு.க.,வை இன்னும் அழுத்தமாக தீயசக்தி என்று கூறுகிறார்.

தி.மு.க., எதிர்ப்பாளருக்கு வெற்றியைத் தரும் இந்த மந்திரச்சொல், விஜய்க்கு தேர்தலில்வெற்றியை தேடித் தருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!






      Dinamalar
      Follow us