sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

 இது உங்கள் இடம்

/

 இது உங்கள் இடம்

 இது உங்கள் இடம்

 இது உங்கள் இடம்


PUBLISHED ON : பிப் 03, 2026 02:20 AM

Google News

PUBLISHED ON : பிப் 03, 2026 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்தியமா இது ஸ்டாலின்?

ஆர்.கந்தையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்த ஆண்டாவது மத்திய பா.ஜ., அரசின் கண்களுக்கு தமிழகம் தெரியும்; அவர்களின் காதுகளில் நம் உரிமைக்குரல் விழும் என எதிர்பார்த்து இருந்தோம்.

'நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழகத்தின் நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மொத்த வரி வருவாயில், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு, 41 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கை, இம்முறையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்தி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது' என்று அங்கலாய்த்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 2023, டிசம்பரில், 16வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டு, 'நிடி ஆயோக்' அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பரிந்துரை அறிக்கையில் உள்ளபடி தான், மத்திய வரிகளில், மாநிலங்களுக்கான பங்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, 41 சதவீதமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே அன்றி, நிதி அமைச்சர் தன் விருப்பப்படி அறிவிக்கவில்லை.

மேலும், மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசை நடத்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார், ஸ்டாலின்.

வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுத்து, தமிழக மக்களை நம்ப வைத்து, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் மக்களை ஏமாற்றியவர் ஸ்டாலின். இவர் அளிக்கும், 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு பணம் தர வேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

சாத்தியமா இது?

மத்திய அரசு கவனத்தில் கொள்ளுமா ? சோமையா ரவீந்திரன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து தான், ஓ.சி.ஐ., என்ற 'ஓவர்சீஸ் சிட்டிசன்ஷிப் ஆப் இந்தியா!'

இந்தியாவிலிருந்து பொருள் தேடவோ, பன்னாட்டு நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டதன் காரணமாகவோ வெளிநாடு செல்வோர், அங்கேயே, 'செட்டில்' ஆகின்றனர்.

பின், ஒரு காலகட்டத்தில் குடும்பத்துடன் இந்தியா திரும்பி, அரசுக்கு வரி செலுத்துகின்றனர். தேர்தல்களில் ஓட்டளிக்கின்றனர். தங்கள் பிள்ளைகளையும் இங்கேயே படிக்க வைக்கின்றனர்.

ஆனாலும், அக்குழந்தைகள் வெளிநாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்காக, மாநில, தேசிய சதுரங்க போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்திய பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்தது அவர்களது குற்றமா? தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளுக்கு, அவர்கள் தண்டிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

இந்தியாவுடனான அவர்களின் வலுவான மரபணு உறவை கருத்தில் வைத்து, ஓ.சி.ஐ.,-களுக்கு மத்திய அரசு விதிவிலக்குகள் அளிக்க வேண்டும்!

இப்பிரச்னையை அரசு கருணையுடன் கவனத்தில் கொண்டு, ஓ.சி.ஐ.,கள் தடைகள் இன்றி, சதுரங்க போட்டிகளில் பங்கேற்க, மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்!



மன்னிப்பது மனித குணம்!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அருமை அண்ணன் பழனிசாமி வெற்றி பெற வேண்டும்; அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் தினகரன். நானும் அதே கருத்தைதான் சொல்கிறேன்.

'அ.தி.மு.க.,வில் இணைய தயாராக இருக்கிறேன்; என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள பழனிசாமி தயாரா?' என கேள்வி எழுப்பியுள்ளார், அ.தி.மு.க., முன்னாள் மு-தல்வர் பன்னீர்செல்வம்.

இதற்கு பதில் அளித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அ.தி.மு.க., பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர், பன்னீர்செல்வம். அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க எந்த வாய்ப்புமில்லை' என்று கூறியுள்ளா ர்.

பழனிசாமியின் கருத்து தவறானது. 'பொதுக்குழுவில் தவறு செய்பவர்களை நீக்கினாலும், அவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க பொதுச்செயலருக்கு அதிகாரம் உள்ளது' என, அ.தி.மு.க.,வின் சட்ட விதி எண் 20ல் கூறுகிறது.

எம்.ஜி.ஆர்., அவையில் அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைமையை விமர்சனம் செய்ததால், அவரையும், அவருக்கு துணையாக இருந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான திருச்சி சவுந்தரராஜன், அரவக்குறிச்சி கந்தசாமி ஆகியோரை, 1984, செப்டம் பரில் நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டார், எம்.ஜி.ஆர்.,

பின், விதி எண் 20ல் உள்ள சட்டவிதிப்படி மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். கட்சிக்காக உழைத்த எவரையும் இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார், எம்.ஜி.ஆர்.

இதன்படிதான், 1983, டிசம்பரில் சத்யா ஸ்டூடி யோவில் பொதுக்குழு நடைபெற்றது. அதில் பேசிய ஜெயலலிதா, 'கட்சியின் பொதுச்செயலர், கோஷ்டியை வளர்க்கிறார்' என, ப.உ.சண்முகம் மீது குற்றம் சாட்டினார்.

உடனே, ஜெயலலிதாவின் மைக்கை துண்டித்த எம்.ஜி.ஆர்., 'பொறுப்புக்கு ஏற்ற பக்குவம் வேண்டும்' என்று அவரை கண்டித்தார்.

அதேநேரம், கட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், ஜெயலலிதா தன்னை விமர்சிக்கிறார் என்றால், எம்.ஜி.ஆர்., அனுமதியின்றி நடக்குமா என நினைத்தார், சண்முகம்.

அவரின் மன வாட்டத்தை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., இரவு, 10:00 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், சண்முகத்தை தன் காரில் ஏற்றி, சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டு வாசலில் காரை நிறுத்தி, காரில் அமர்ந்தபடியே ஒரு மணி நேரம் சண்முகத்துடன் பேசி, அவரை சமநிலைக்கு கொண்டு வந்தபின் விடைபெற்று சென்றார்.

ஒரு கட்சியின் நிறுவனர்; ஆனாலும், சண்முகம் வீட்டு வாசலில் காரில் அமர்ந்து அவரை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

காரணம், தன் கவுரவத்தை விட, கட்சியின் நலன் தான் முக்கியம் என நினைத்தார், எம்.ஜி.ஆர்.,

அதுபோன்று, கட் சியின் நலன் கருதி, நடந்து முடிந்த விஷயங்களை கடந்து போனவையாக கருதி, பன்னீர்செல்வத்தை ஏற்றுக் கொள்வதே, பழனிசாமியின் தலைமை பண்புக்கு அழகு!






      Dinamalar
      Follow us