sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

1


PUBLISHED ON : பிப் 12, 2026 01:06 AM

Google News

PUBLISHED ON : பிப் 12, 2026 01:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக மானத்தை சந்தி சிரிக்க வைத்த ஜோதிமணி!

ஆர்.முத்தையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் வளாகத்திற்குள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் கிடையாது என்பதை, தங்கள் திட்டத்திற்கு சாதகமாக்கி, பிரதமரை அவமதித்து, அவமானப்படுத்தி, அதன்வாயிலாக பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ., அரசையும் கடுமையாக விமர்சிப்பதன் மூலம், அடுத்து வரும் தேர்தலில் சுலபமாக ஆட்சி பீடத்தில் அமர்ந்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டியுள்ளார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், ராகுல்.

அச்சம்பவத்தை அரங்கேற்ற காங்கிரஸ் பெண் எம்.பி.,க்கள், 10 பேரை தயார் செய்திருந்தாராம்.

உருப்படாத இத்திட்டத்தில் பங்கேற்க, எட்டு பெண் எம்.பி.,க்கள் மறுத்து விடவே, தமிழகத்தை சேர்ந்த காங்., - எம்.பி.,க்கள் ஜோதிமணியும், சுதாவும், 'சம்பவத்தை நடத்த நாங்க ரெடி' என்றுள்ளனர்.

அதாவது, பிரதமர் மோடி அவைக்குள் வரும் போது, அவரை சுற்றி நின்று கோஷமிட்டு கலாட்டா செய்து, பிரதமரை பெண் பித்தனாக நிரூபிக்க, தங்கள் புடவைகளை அவிழ்த்து மோடியின் மீது வீசவும் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.

அரசியல்வாதிகள் பதவிக்காக எதையும் செய்யத் துணிவர் என்பது வெளிப்படை. அதற்காக, இப்படிக் கூடவா கேவலமாக திட்டம் தீட்டுவர்?

ராகுலின் போதாத காலம், இத்திட்டம் எப்படியோ சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு தெரியவர, 'பிரதமர் அவைக்குள் வரவேண்டாம்' என்று அவர் தடுத்து விட்டார்.

ஆப்பு அசைத்த குரங்கின் நிலையானது ராகுலின் திட்டம்.

இதுபோன்று தான், பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடுத்திருந்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அதன் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் வளர்மதியும், அவருடன் வந்த அ.தி.மு.க., மகளிர் அணியினரும், விசாரணை முடிந்து வெளியே வந்த சுப்பிரமணியன் சுவாமி முன், தங்கள் புடவைகளை துாக்கி காட்டி கேலி செய்து குதுாகலித்தனர்.

அன்று, வளர்மதி மகளிர் அணியினருடன் புடவையை துாக்கி காட்டினார்; இன்று, ஜோதிமணியும், சுதாவும் பார்லிமென்டுக்கு பிரதமர் வரும் போது, தங்கள் புடவையை அவிழ்த்து கடாச திட்டம் தீட்டி இருந்துள்ளனர். நல்லவேளை... அது நடக்கவில்லை!

வாழ்க பெண்ணியம்!

எது மன்னராட்சி? த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'புதிய வேலை உறுதி சட்டத்தின் வாயிலாக, தொழிலாளர்களின் உரிமையை பறிக்கவும், கிராம பஞ்சாயத்துகளை முடக்கவும், மோடி அரசு திட்டமிட்டு உள்ளது.

'இதன் வாயிலாக, நாட்டை மீண்டும் பழைய மன்னர் காலத்திற்கு தள்ளி, அதிகாரம் மற்றும்செல்வத்தை சிலரின் கைகளில் மட்டும் சேர்க்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது' என்று கூறியுள்ளார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்.

மன்னராட்சி என்றாலே, அது குடும்ப ஆட்சி தான்; அதாவது, மன்னரின் குடும்பத்திடம் மட்டும் தான் அதிகாரமும், செல்வமும் குவிந்து கிடக்கும்.

அவ்வகையில், நேரு முதல் ராஜிவ் வரை ஒரு குடும்ப உறுப்பினர்கள் தானே இந்தியாவை அரை நுாற்றாண்டு காலம் ஆட்சி செய்துள்ளனர்... இதில், ஜனநாயகம் எங்குள்ளது?

நேரு முதல் அவரின்கொள்ளுப் பேரன் வரை ஆட்சியில் அமர முடியுமென்றால், இது மன்னராட்சி அல்லாமல் வேறென்ன?

காங்கிரஸ் மட்டுமல்ல, அக்கட்சியுடன் கூட்டணிவைத்திருந்த அனைத்துக் கட்சிகளும், மன்னராட்சி மனநிலையில் தானே ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கின்றன... இதை ராகுலால் மறுக்க முடியுமா?

தி.மு.க.,வில் கருணாநிதிக்கு பின், ஸ்டாலின்,கனிமொழி, உதயநிதி என்று தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

உ.பி.,யின் சமாஜ்வாதி, பீஹாரின் ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் உத்தவ் சிவசேனா அனைத்துமே குடும்ப கட்சிகள் தானே...

அப்படியென்றால், அவர்கள் தருவது மன்னராட்சி தானே!

அதேநேரம், பா.ஜ., தலைவர்களான வாஜ்பாய் முதல், நிதின் நபின் வரை வாரிசுகள் கோலோச்சவில்லையே!

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.,வினரால் குடும்ப ஆட்சி அரங்கேற்றப்படவில்லை; எவர் வேண்டுமானாலும் கட்சியிலும், ஆட்சியிலும் மிக உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

அந்த ஜனநாயகம் 'இண்டியா' கூட்டணி கட்சிகளில் கடைப்பிடிக்கப்படுகிறதா? அனைத்து கட்சிகளும் மன்னர்கள்போன்று, வாரிசு அரசியலை தானே செய்கின்றன.

எனவே, பிறரை குறை சொல்லும் முன், நம்மிடம் அந்த குறை இருக்கிறதா என்று ராகுல் போன்றவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்!

பொய்கள் போணியாகுமா? ப.ராஜேந்திரன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆளுங்கட்சி குண்டர்களின் அராஜகங்களும் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் கனிமவள கொள்ளையை படம் பிடித்த தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி தன் குண்டர்களுடன் சென்று தாக்கியுள்ளார்.

இது தொலைக்காட்சிகளிலும், சமூகவலைதளங்களிலும் வெளியாகியும் தி.மு.க., முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'நம் ஆட்சியில் தைரியமாக ஆற்றில் மணல் அள்ளுங்கள்; எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; அப்படி தடுத்தால், அவன் அந்த பதவியில் இருக்க மாட்டான்' என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பகிரங்கமாக கூறிய போதும், 'நான் ஒருத்தன் தான் நம்ம கட்சிக்காரங்கள மண்ணு அள்ளச் சொன்னேன்' என்று பெருமைப்பட்ட தி.மு.க., - எம்.பி., ராஜேஷ்குமாரையும் கண்டிக்காத முதல்வர், பழனியாண்டியை கண்டித்து விடுவாரா அல்லது கட்சியிலிருந்து நீக்கத்தான் செய்வாரா?

ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் கனிமவள கொள்ளை நடந்து கொண்டிருக்கையில், அதை தட்டிக் கேட்பவர்கள் மீதுதானே வழக்கு பாயும்?

'வேலியில் போகும் ஓணானை துாக்கி மடியில் விட்டுக் கொண்டது' போல், பொய் வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட்டதன் பலனை, மக்கள் நன்றாகவே அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

எனவே, வரும் தேர்தலி லாவது தி.மு.க.,வின் பொய்களுக்கு மக்கள் இரையாகக்கூடாது!






      Dinamalar
      Follow us