PUBLISHED ON : ஏப் 25, 2026 01:25 AM

சி.ஸ்ரீதேவி, இடுக்கி, கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விஜய் கட்சியில் கட்டமைப்பு இல்லை; அவருக்கு கூடும் கூட்டம் ஓட்டுகளாக மாற வாய்ப்பில்லை; அக்கட்சியில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இல்லை' என்று, தமிழக வெற்றிக் கழகம் குறித்து பலவாறாக விமர்சித்துள்ளார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழ க முதன்மை செயலர் துரை!
கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, 'செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்; நான் சுயமரியாதைக் காரன்' என்று வீராவேசமாக கூறினார், துரை.
ஆனால், இன்று தன் கட்சிக்கு அங்கீகாரம் பெற முடியாமல், சொந்த சின்னத்தில் போட்டியிடும் உரிமையை இழந்து, தி.மு.க.,விடம் அடிமைப்பட்டு கிடப்பதை மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். துரையின் சுயமரியாதை இப்போது எங்கே போனது என்று தெரியவில்லை.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும், ம.தி.மு.க., வேட்பாளர்கள் ஒருவேளை வெற்றி பெற்றால், அவர்களையும், தி.மு.க., விலைக்கு வாங்கி விடும். அடுத்த தேர்தலின் போது, ம.தி.மு.க., என்ற கட்சி இருக்குமா என்பதே சந்தேகம்.
இதில், த.வெ.க., குறித்து கட்டமைப்பு இல்லை; அனுபவம் இல்லை என்கிறார், துரை. ம.தி.மு.க.,வில் கட்டமைப்பு இருந்தது; அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருந்தனர்; அவர்கள் எல்லாம் எங்கே போயினர், என்ன ஆயினர்? ம.தி.மு.க., இன்று ஏன் அங்கீகாரத்தைக் கூட இழந்துள்ளது?
எனவே, த.வெ.க., குறித்து கவலைப்படாமல், கட்சிக்காக உழைத்தவர்களிடமிருந்து ம.தி.மு.க.,வை கைப்பற்றிய துரை, கட்சியை காப்பாற்றுவதில் தன் கவனத்தை செலுத்தட்டும்!
சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் பா.ஜ.,! பி.என்.கபாலி, சென்
னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: 'லோக்சபாவில், 542
உறுப்பினர்கள் உள்ள போதே ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 7
நிமிடம் தான் பேச வாய்ப்பு கிடைக்கிறது; இதில், எண்ணிக்கை
அதிகரிக்குமானால், ஐந்து மாதத்திற்கு ஒரு முறை, 3 நிமிடம் மட்டுமே பேச
முடியும்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய
நிதியமைச்சர் சிதம்பரம்.
அவர் கூறியிருப்பது சரியே!
தற்போது உள்ள உறுப்பினர்கள் என்ன வெட்டி முறித்துவிட்டனர் என்பதற்காக,
எண்ணிக்கையை அதிகரிக்க, பா.ஜ., அரசு நினைக்கிறது என்று புரியவில்லை.
இப்போதே பாதி பேர் சபைக்கு வருவதில்லை மற்றும் பலர் கேன்டீனிலேயே பொழுதைக் கழிக்கின்றனர்.
சபைக்கு வருவோரும், சபை முடக்குவது அல்லது வெளிநடப்பு செய்கின்றனர்;
இல்லையென்றால், தொடர்ந்து கூச்சலிட்டு யாரையும் பேசவிடாமல் செய்கின்றனர்.
தப்பி தவறி பேசினாலும், அது அர்த்தமற்ற பேச்சாகவும், வெறும் வாய் சவடால்
பேச்சாகவும் தான் உள்ளது.
இந்த லட்சணத்தில் இக்கும்பலின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் மட்டும் இவர்கள் என்ன சாதித்துவிடப் போகின்றனர்?
கூச்சலும் குழப்பமும் அதிகரித்து, உருப்படியான விவாதங்கள் ஏதும் நடக்காமல்
போவதற்கே இது வழிவகுக்கும்; உறுப்பினர்களின் சம்பளம், படிகள் போன்ற பல
செலவுகள் அதிகரிக்கும்.
இதில், பல லட்சம் மக்களுக்கு
பிரதிநிதியாக, ஒரு உறுப்பினர் இருப்பதால், அவர்களால் சரிவர மக்கள்
சேவையாற்ற முடியவில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.
ஏதோ
இவர்கள் எல்லாம் தத்தம் தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து, அவர்கள் குறைகளை
கேட்டறிந்து, லோக்சபாவில் திறமையாக எடுத்துக்கூறி, தங்கள் தொகுதிக்காக
பாடுபடுபவர்கள் போல் அல்லவா உள்ளது, இந்த வாதம்!
லோக்சபாவில் கேள்வி கேட்பதற்கே, லஞ்சம் வாங்கும் உறுப்பினர் களை கொண்ட தேசம் இது!
லோக்சபாவின் திறனும் செயல்பாடும் இரு மடங்கு உயரும் என்பதெல்லாம் வெறும்
கற்பனை; மாறாக, எம்.பி.,க்களுக்கான செலவும், அழிச்சாட்டியமும், கூச்சலும்,
ஊழல்களும் தான் இரு மடங்காகும்!
மத்திய பா.ஜ., அரசு சொந்த காசில்
ஏன் சூனியம் வைத்துக் கொள்ள துடிக்கிறது என்று தெரியவில்லை. எனவே,
லோக்சபாவின் எண்ணிக்கையை கூட்டும் முயற்சியைகை விட்டாலே போதும்; அதுவே,
மக்களுக்கு சிறந்த நன்மையாகும்!
மக்கள் நிம்மதி
அடைவர்! ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மதுக்கடைகள் திறந்து இருந்தால் தன்னி லை தடுமாறி, தெளிவான
ஜனநாயகத்தைதேர்ந்தெடுப்பதில், 'குடி'மகன்கள் குழப்பமடைவர் என்ற
காரணத்திற்காகவே, தேர்தல் பிரசாரத்தோடு மதுக் கடைகளையும் மூடி,
ஓட்டுப்பதிவுக்கு பின் மீண்டும் திறக்க ஆணையிடுகிறது, தேர்தல் ஆணையம்.
ஆனால், இதற்கு மாறாக, தமிழகத்தில் வழக்கத்தை விடவும் தேர்தல்
காலங்களில்தான் அதிகமாக மது புழங்குகிறது. இந்த கள்ள மது பாட்டில்கள்
சப்ளையில், டாஸ்மாக் கடை ஊழியர்களின் லாபம் அதிகம்.
தமிழக
டாஸ்மாக் கடைகளில் விற்பனை பணியாளர்களில் பெரும்பாலானோர், வெளியூர்
ஆட்களாகவே இருப்பர். இவர்கள் பணிமுறை, கால ஊதியம், வயோதிகம், பாதுகாப்பு,
அரசியல் தலையீடு ஆகியவற்றை காரணம் காட்டி, கடையில் அமர்ந்து பணி செய்வது
இல்லை.
ஏனெனில், இவர்களில் பெரும்பாலானோர், ஆளுங்கட்சியின் ஆசிர்வாதத்தால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்.
பொதுவாக, மதுபான கொள்முதல் ஊழல் வழக்கில்தான், மத்திய அரசு தலையிட
முடியுமே தவிர, இதுபோன்ற பணியாளர் நியமன முறைகேடுகளில் தலையிட முடியாது.
அப்படியே விசாரணை செய்தாலும், அதை சமாளிக்கும் தந்திரங்கள் தெரிந்தவர்கள்
தமிழக அரசியல்வாதிகள்.
அந்த துணிவில்தான், டாஸ்மாக் கடைகளில் விதிமுறை மீறல்கள், கடந்த பத்தாண்டுகளாகவே சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.
எந்த டாஸ்மாக் கடையிலும் மது பிரியர்கள் கேட்கும் சரக்கு கிடைப்பதில்லை;
ஏனெனில், கடைக்கு வரும் நல்ல சரக்குகளை கிளப்புகளுக்கும், தனியார், 'ஏசி'
மதுக்கூடங்களுக்கும், டாஸ்மாக் மதுக் கூடங்களுக்கும், இரவு நேர கள்ளச்சந்தை
விற்பனைக்கும் என, மொத்தமாக கொடுத்து, உடனடியாக பணத்தை எண்ணி பிரித்துக்
கொள்கின்றனர், கடை ஊழியர்கள்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
நிறுவனத்தின் கீழ் டாஸ்மாக் செயல்படுகிறது என்பதெல்லாம் சுத்த பொய்; அது
தனியார்மயமாகி பல ஆண்டுகளாகி விட்டன.
கூடுதல் விலை, பணியாளர்கள்
அராஜகம், தனியார் மதுக்கூட நிறுவனங்களின் ஆதிக்கம், கள்ளச் சந்தை மது
விற்பனை உட்பட பல அராஜகங்கள் நடைபெறுகின்றன.
இது எதையும்
கண்டுகொள்ளாமல் தான், டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுகிறது. இப்படி ஒரு
அலங்கோலமான நிர்வாகத்தை தமிழக அரசு நடத்துவதற்கு பதில், அதை நேரடியாக
தனியார் வசமே தந்துவிட்டால், குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளில்
கட்டுப்பாடுகள் அதிகரித்து, மக்களாவது நிம்மதி பெருமூச்சு விடுவர்!
