sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பெரிய அபத்தம்!

 பெரிய அபத்தம்!

 பெரிய அபத்தம்!


PUBLISHED ON : மார் 27, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2026 03:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில், பிளஸ் 2 மாணவி ஒருவர், இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூக்குரலிடும் ஆளுங்கட்சியை சேர்ந்த மகளிர், ஒன்றை சவுகரியமாக மறந்து விட்டனர்.

அதுதான் கழிப்பறை வசதியின்மை! மாணவியின் வீட்டில் கழிப்பறை இருந்திருந்தால், அப்பெண் ஏன் அருகிலுள்ள காட்டிற்குள் செல்லப் போகிறாள்? ஏன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப் போகிறாள்? எப்பேர்ப்பட்ட அவலமான நிலைமை இது?

வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தாலேயே ஒரு சிறுமியின் உயிர் பறிபோய் உள்ளது என்பது ஆட்சியாளர்களின் கையாலாகதனத்தை அல்லவா காட்டுகிறது!

மாதந்தோறும் உரிமைத்தொகை என்ற பெயரில், 1,000 ரூபாயை துாக்கி கொடுத்து விட்டால் போதும்; பெண்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டியது இல்லை என்று நினைத்து விட்டது போலும் தி.மு.க., அரசு.

அடிப்படை வசதிகளை அமைத்து தருவது ஓர் அரசின் கடமை இல்லையா?

தற்போது தேர்தல் வாக்குறுதி அளித்து வரும் கட்சிகள் கூட, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகையை அதிகரித்து தருவோம் என்கின்றனரே தவிர, எவரும் 'கழிப்பறை இல்லாத வீடுகள் இல்லையென்ற நிலைமையை உருவாக்குவோம்' என்று சூளுரைப்பதில்லை.

பெண்களின் உரிமை என்பது வெறும் பணத்தில் தான் அடங்கி உள்ளதா, பாதுகாப்பான வாழ்க்கை அவர்களது உரிமை இல்லையா?

இயற்கை உபாதைகளை கூட நிம்மதியாக தணித்துக் கொள்ள முடியாத அவல நிலையில், மகளிர் மேன்மையுடன் வாழும் மாநிலம் தமிழகம் என்று பறைசாற்றிக் கொள்வது எவ்வளவு பெரிய அபத்தம்?

பா.ஜ.,வின் கனவு கலைந்தது!

வா.கிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., தொகுதி பங்கீட்டில், 1.5 சதவீதம் ஓட்டு உள்ள அன்புமணிக்கு, 18 தொகுதிகள், 1 சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் தினகரனுக்கு, 11 தொகுதிகள்; ஆனால், 11 சதவீதம் ஓட்டு வங்கியுள்ள பா.ஜ.,வுக்கு 27 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பா.ஜ., உள்ளே வந்துவிடும் என்று பயம் காட்டியே தி.மு.க., எப்படி கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை குறைக்கிறதோ அதுபோல், அ.தி.மு.க.,வை, 'அட்ஜஸ்ட்' செய்து போகாவிட்டால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில், பா.ஜ., டில்லி தலைமை தன் கட்சி வளர்ச்சியை குழி தோண்டி புதைத்து விட்டது.

இன்று காங்., கட்சி எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில் தான், அண்ணாமலை வருகைக்கு முன், தமிழக பா.ஜ.,வும் இருந்தது.

'நோட்டா' கட்சி என்று ஏளனம் செய்யப்பட்ட நிலையில், தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை தன் புள்ளி விபர பேச்சாலும், அதிரடி அரசியலாலும், 'என் மக்கள் என் உரிமை' பாதயாத்திரையின் வாயிலாகவும் பட்டிதொட்டி எங்கும் பா.ஜ.,வை கொண்டு சேர்த்தார்.

விளைவு, 3 சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருந்த பா.ஜ.,வை, 11 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ப இன்று பலன் கிடைத் துள்ளதா?

கடந்த சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 3 சதவீதம்; 25 சீட்டுகள் கிடைத்தன. ஆனால் இன்று, 11 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது; 27 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதி பங்கீடு, பா.ஜ.,வுக்கு எத்தனை பெரிய அவமானம் என்பது, நேரம் காலம் பாராமல் உழைத்த அண்ணாமலைக்கு தான் அதன் வலி தெரியும்.

மே.வங்கம், கேரளாவில் கூட பா.ஜ.,வை வளர்த்து விடலாம்; தமிழகத்தில் ரொம்பவே கடினம். ஆனாலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஊடகங்கள் என்று எல்லாவற்றையும் தனி ஒரு மனிதனாக சமாளித்து, தன் அதிரடி அரசியலால் இளைஞர்களை, பெண்களை கவர்ந்து, பா.ஜ.,வை தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கொண்டு வந்தார், அண்ணாமலை.

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்து விட வேண்டும் என்று நினைத்து, அவர் எடுத்த முயற்சியும், உழைப்பும் இன்று விழலுக்கு இறைத்த நீராக போய் விட்டது.

மீண்டும் பா.ஜ., துவக்க நிலைக்கு சென்று விட்டது. அதற்கு சாட்சியே இந்த தொகுதி பங்கீடு!

இதன்வாயிலாக, அண்ணாமலையின் கனவு மட்டுமல்ல; பா.ஜ., தொண்டர்களின் கனவும் கலைந்து போனது!

தி.மு.க.,விற்கு தகுதி இருக்கிறதா?

பொ.ஜெயராஜ், பாம்பனார், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக அரசின், 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், ஒரு நடிகையை குறிப்பிட்டு ஆபாசமாக பேசி, அதற்காக மன்னிப்பு ம் கேட்டு விட்டார்.

ஆனாலும், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின் அதை கண்டித்து, 'அரசின் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் ஆபாசங்களையும், அவதுாறுகளையும் சிலர் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றன ர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வளர்ச்சியை தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பர்' என்று கூறியுள்ளார்.

அதாவது, ஆபாசமாக பேசுவோரை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அப்படியானால், தி.மு.க., எப்படி ஆறு முறை ஆட்சிக்கு வந்தது?

ஏனென்றால், மேடை நாகரிகம் என்பது சிறிதளவும் இல்லாத ஒரு கட்சி உலகிலேயே எதுவென்று கேட்டால் அது, தி.மு.க.,தான்!

கூட்டம் சேர்ப்பதற்காகவும், சேர்ந்த கூட்டம் முக்கிய தலைவர்கள் வரும் வரை கலைந்து விடாமல் இருக்கவும் ஆபாச பேச்சாளர்களை மேடையில் பேச வைத்து அழகு பார்த்த கட்சி தி.மு.க.,

இப்போதும் கூட சிலர் தி.மு.க.,வின் ஆஸ்தான ஆபாச பேச்சாளர்களாக உள்ளனர். கவர்னர் மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த பெண் தலைவர் ஒருவரை ஆபாசமாக பேசிய வழக்கில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சைதை சாதிக்கோ ஆபாச பேச்சுக்கு நீதி மன்றத்தில் குட்டுப்பட்டார்.

அது மட்டுமல்ல... தி.மு.க.,வின் மூத்த தலைவர்களின் ஒருவரான பொன்முடி சைவ - வைணவ சமய குறியீடுகளுக்கு ஆபாசமாக விளக.ைகம் அளித்து, தன் அமைச்சர் பதவியை இழந்தார்.

நாகரிக சமூகத்தில் எவர் ஆபாசமாக பேசினாலும், அது அருவருக்கத்தக்க செயல்; கண்டிக்கத்தக்கது. ஆனால், அந்த தகுதி தி.மு.க.,வுக்கு இருக்க வேண்டுமே!

தமிழக அரசியலில் லஞ்சம் ஊழலுக்கு மட்டுமல்ல; அநாகரிகமான, ஆபாச பேச்சிற்கும் பிள்ளையார் சுழி போட்ட கட்சியே தி.மு.க., எனும் போது, பிறரை கண்டிக்கும் தகுதி அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us