sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எது வெறுப்பு பிரசாரம்?

/

எது வெறுப்பு பிரசாரம்?

எது வெறுப்பு பிரசாரம்?

எது வெறுப்பு பிரசாரம்?


PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேவையற்ற கருத்துகளை பேசி அடிக்கடி சர்ச்சை களில் சிக்குவது, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு வாடிக்கை. திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை புகுத்தியது எம்.ஜி.ஆர்., என்றும், கருணாநிதி எதிர்ப்பு என்பதே வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு தான் என்றும் பேசியுள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாகவும், பட்டியல் இனத்தவர்களின் ஒரே தலைவன் தான் என்றும் மார்தட்டி கொள்ளும் திருமா, வரலாற்றை மறந்துவிட்டு பேசுவது சரியல்ல.

தி.மு.க., பொதுக்குழுவில், கட்சியின் வரவு - செலவு கணக்கு கேட்டார் என்பதற்காக, கருணாநிதியால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் எம்.ஜி.ஆர்., என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இதில், பார்ப்பன சக்திகளின் துாண்டுதல் தான், தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேற காரணம் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் திருமா கூறுகிறார்?

தன்னை மிகப் பெரிய அரசியல் ஆளுமையாக கருதிக் கொண்டு, இப்படி எதையாவது பேசி, சர்ச்சைக்குள்ளாவதே திருமாவளவனின் பொழுதுபோக்கு!

ஜெயலலிதா பிராமண பெண். அதனால், சட்டசபையில், 'நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்' என்று அறிவித்தார். அதில் என்ன தவறு? ஓர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டால், அவர் பிறந்த சமூகம் மாறுபட்டு விடுமா இல்லை அது குறித்து பேசக் கூடாதா?

ஜாதி, மத பேதம் பாராமல் நடுநிலையுடன் ஆட்சி செய்த காரணத்தால் தான், அவர் நான்கு முறை தமிழக முதல்வராக இருந்தார். அதிலும், 10 ஆண்டுகள் தி.மு.க.,வால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.

அவர் ஆட்சிக் காலத்தில், கோவில்களில் ஆடு, கோழிகள் பலியிடக்கூடாது என்று ஆணை பிறப்பித்தபோது, அதை மக்கள் ஏற்கவில்லை என்று தெரிந்ததும், அச்சட்டத்தை உடனே திரும்ப பெற்றார் ஜெயலலிதா.

அதனால் தான், பிராமணர்களை எதிர்ப்பதை வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ள தி.க., தலைவர் வீரமணி, ஜெயலலிதாவிற்கு விழா எடுத்து, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தையும் வழங்கினார்.

பிராமண சமூகத்தில் பிறந்த காரணத்தால், ஒருவர் முதல்வர் பதவி வகிக்கக் கூடாதா? கட்சி தலைமை பொறுப்பேற்று, மக்களை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார். இதில், பார்ப்பனியம் எங்கே வந்தது?

கருணாநிதியை எதிர்த்து கருத்து சொன்னால், அது வெறுப்பு பிரசாரம் என்றால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர்களையும், ஹிந்துக் களையும் கேவலமாக பேசி வருகின்றனரே... அது என்ன வகையான பிரசாரம்?



வெறுப்பு அரசியலின் விளைவு! வெ.சீனிவாசன், திருச்சி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர், வேண்டுமென்றே கவர்னரை தவிர்த்து, துணை வேந்தரி டமிருந்து பட்டம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதால் தான், அவரிடமிருந்து பட்டத்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாக கூறிஉள்ளார், இம்மாணவி.

தமிழகத்திற்கு எதிராக அப்படி என்ன கவர்னர் செய்து விட்டார்?

துணைவேந்தர் நியமனங்களில் அரசியல் கலக்க கூடாது என்பதற்காகவும், இன, மொழி, மத, பிரிவினைவாத அரசியலுக்கும் இடைஞ்சலாக இருந்தார். ஒரு கவர்னரிடம் தேசம் நியாயமாக எதையெல்லாம் எதிர்பார்க்குமோ அதையே அவர் செய்து வருகிறார்.

ஆளும் தி.மு.க., அரசு, தேசம், ஒற்றுமை போன்ற வற்றை நீர்த்துப்போகச் செய்து, தன்னுடைய சுய லாபத்துக்காக செய்து வரும் இன, மொழி, மத, பிரிவினைவாத அரசியலே இச்சம்பவத்திற்கு காரணம்.

கல்வியில் கட்சி கொள்கைகள் திணிப்பு, தவறான பிரசாரங்களே மாணவர்கள் மனதில் இதுபோன்ற தவறான புரிதல்களுக்கு காரணம்!

அரசியல்வாதிகளின் தரம் தாழ்ந்த அரசியலால் மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுமே தவிர , அரசியல்வாதிகள் பாதிப் படைய போவதில்லை. இதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும்!



எதற்கு இந்த பெருமை? வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம ் , செங்கல்பட்டு மாவட் டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -------------------------------------------------------------------தமிழகம் இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டதாகவும், பிரதமர் மோடியால் கூட செய்ய முடியாத சாதனையை தான் செய்து விட்டதாகவும் பெருமையுடன் மார்தட்டிக் கொள்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில், ஐந்து லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்துள்ளனர். அவர் களுக்கு வேலை கொடுக்க அரசிடம் நிதி இல்லை.

ஊதிய உயர்வு கேட்டு துாய்மைப் பணியாளர்களும், அங்கன்வாடி ஊழியர்களும் போராடுகின்றனர். தமிழக அரசிடம் நிதி இருந்தால் தானே கொடுப்பதற்கு?

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போரா டுகின்றனர். அவ்வாறு செய்தால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். அதற்கு நிதிக்கு எங்கே போவது?

பள்ளி - கல்லுாரிகளில் ஆசிரிய பணி நியமனமும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களும் நிதி பற்றாக்குறையால் நிரப்பப்படாமல் உள்ளன.

ஏற்கனவே, ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சேர வேண்டிய பணிப்படி வழங்கப்படாமல் நிலுவையில் வைத்துள்ளது. காரணம், நிதி பற்றாக்குறை!

மற்றொருபுறம், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் மின் வாரியமும், இலவச பேருந்து சேவையால் போக்குவரத்து துறையும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலை யங்களில் மருத்துவர்கள் கிடையாது; நோயாளிகளை பரிசோதனை செய்ய எக்ஸ்ரே போன்ற உபகர ணங்கள், தேவையான மருந்துகள் இல்லை. இவற்றுக்கெல்லாம் நிதி இல்லை.

இப்படி நிதி ஆதாரம் இல்லாமல், எல்லாமே முடங்கிக் கிடக்கும்போது, தமிழகம் நான்கே ஆண்டுகளில் இரட்டை இலக்கில் பொருளாதார வளர்ச்சி பெற்றுவிட்டது என்று கூறு வதைக் கேட்கும் போது, சிரிப்பு தான் வருகிறது.

அ.தி.மு.க., ஆட்சியில், 5 லட்சம் கோடியாக இருந்த கடன், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில், 9 லட்சம் கோடியாக உயர்ந்து, இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநில மாக தமிழகத்தை மாற்றி யுள்ளதற்கு பெயர் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியோ!

எதற்கு இந்த பெருமை?








      Dinamalar
      Follow us