PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

ரெ.ஆத்மநாதன், சூரிச், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேளாண் துறைக்கு என்று ஓர் அமைச்சர், விவசாயத்திற்கென்று தனி பட்ஜெட் என்பதெல்லாம், விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு என நினைத்தது தவறோ என்று எண்ண வைக்கிறது, தமிழக அரசின் செயல்பாடுகள்!
விவசாயிகள் மாடாய் உழைத்து விளைச்சலை பெருக்கி, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால், அவற்றை வாங்க இழுத்தடிப்பதும், அப்படியே வாங்கினாலும் அதை முறையாக பாதுகாக்காமல் வீணடிப்பதையும், வழக்கமாக வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் இத்தகைய அலட்சிய போக்கிற்கு முடிவு கட்டுவது யார்?
நெல் கொள்முதலுக்கு சேமிப்பு கிடங்குகள் என்பது அடிப்படை தேவை. ஆனால், தமிழகத்தில் போதுமான சேமிப்பு கிடங்குகள் இல்லை. ஏன்... போதுமான தார்ப்பாய்கள் கூட வழங்குவதில்லை.
அத்துடன், சில கொள்முதல் நிலையங்கள் பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், சிறிய அளவில் மழை பெய்தால் கூட நெல் மூட்டைகள் நீரில் மிதக்கின்றன.
'தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது' என்று, ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், போதுமான சேமிப்பு கிடங்குகள் இல்லை; உற்பத்தி செய்த விளைபொருட்களை, உரிய நேரத்தில் வாங்க கொள்முதல் நிலையங்கள் இல்லை.
இத்தனைக்கும் ஒரு மூட்டை நெல்லுக்கு, 40 ரூபாய் கமிஷன் பெறுகின்றனர். பகிரங்கமாக நடக்கும் இந்த கையூட்டை தடுத்த நிறுத்த, அரசுக்கோ மனம் இல்லை.
தேர்தல்தோறும், பச்சை துண்டு போட்டுக் கொண்டு, 'நானும் ரவுடி தான்' என்பது போல், 'நானும் விவசாயி தான்' என்று கிளம்பி விடுகின்றனர், அரசியல்வாதிகள்.
ஆனால், 'உழைத்தவனுக்கு உழக்கு தான் மிஞ்சியது' என்பது போல், நாள் முழுக்க பாடுபட்டும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
இதற்கு எதற்கு வேளாண் துறை?
எது மதச்சார்பின்மை?
எஸ்.மணிகண்டன்,
கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எந்தவொரு மதத்திற்கும்
ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நடந்து கொள்ளாமல், எல்லா மதங்களையும் ஒரே
கண்ணோட்டத்தில், விருப்பு வெறுப்பின்றி காண்பதற்கு பெயர் தான்
மதச்சார்பின்மை.
ஆனால், மதச்சார்பின்மைக்கு புதிய விளக்கம் கூறுகின்றனர், தமிழக அரசியல்வாதிகள்.
அதாவது,
ஹிந்து மதத்தை சகட்டு மேனிக்கு சாடி, கேலி செய்யலாம்; அதேநேரம், இஸ்லாம்,
கிறிஸ்துவ மதத்தை துாக்கிப் பிடித்து வெண்சாமரம் வீசலாம்!
இதற்கு பெயர் தான் மதச்சார்பின்மையாம்!
'வக்ப்
சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துவதோடு, மதச்சார்பின்மையை காப்போம் என,
அறைகூவல் விடுக்கும் வகையில், திருச்சியில் மே 31ம் தேதி பேரணி நடத்த
ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது' என அறிவித் துள்ளார், வி.சி., கட்சி தலைவர்
திருமாவளவன்.
அத்துடன், 'பா.ஜ., அரசு மதச்சார்பின்மையை சிதைத்து,
அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் திட்டமிட்டு
செயல்பட்டு வருகிறது' என்று வேறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
மோடி
பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை எப்போதாவது முஸ்லிம் என்றோ,
கிறிஸ்துவர் என்றோ, பிரிவினை வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறாரா?
அவர்
மதச்சார்பின்மையை சிதைக்கிறாராம்... வாயைத் திறந்தால், பிராமண துவேஷம்,
ஹிந்து வெறுப்பு பிரசாரம் செய்யும் திருமா, சமூகநீதி, மதச்சார்பின்மை காக்க
போராடுகிறாராம்!
உண்மையில், திருமாவளவனுக்கு அரசியலமைப்பு சட்டமும் தெரியாது; வக்ப் போர்டு குறித்த புரிதலும் கிடையாது.
சமீபத்தில்,
ஒரு முஸ்லிம் பெண்மணி, டில்லி செங்கோட்டைக்கு உரிமை கொண்டாடி, உச்ச
நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும், 'செங்கோட்டை மட்டும் போதுமா...
ஹஸ்ரத் நிஜாமுதீன் போன்றவை வேண்டாமா?' என்று கேட்டு, மனுவை தள்ளுபடி செய்த
கூத்தும் நடந்தது!
இப்படி வக்ப் போர்டு இஷ்டத்திற்கு நாட்டில் உள்ள
அத்தனை நிலங்களையும் அபகரித்துக் கொண்டிருப்பதை தடுத்து, முறைப்படுத்த
ஏற்பட்டதே வக்ப் திருத்த சட்டம்!
இது புரிந்தாலும், திருமாவளவன் போன்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்களால் ஓட்டு அரசியல் செய்ய முடியாதே!
உண்மையான மதச்சார்பற்றவர்கள் மக்களுக்கான அரசியல் செய்வரே தவிர, பிரிவினை அரசியல் செய்ய மாட்டார்கள்.
இங்கு, ஹிந்து - முஸ்லிம் என்ற பிரிவினையை ஏற்படுத்துவதே, திருமாவளவன் போன்ற ஓட்டு அரசியல்வாதிகள் தான்.
இந்த
உண்மையை உணராத வரை, திருமாவளவன் போன்ற போலி மதச்சார்பின்மை
அரசியல்வாதிகளின் வலைக்குள் முஸ்லிம்கள் வீழ்ந்து கடைசி வரை வெறும் ஓட்டு
வங்கியாகவே இருப்பர்!
மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
என்.பாடலீஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தங்க நகைக் கடன்
பெறுவதில் ரிசர்வ் வங்கி சில புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது.
ஏற்கனவே
நகையின் மதிப்பில், 80 சதவீதம் வரை கடன் கொடுத்த வங்கிகள், புதிய
நிபந்தனையின்படி, 75 சதவீதம் வரை மட்டுமே இனி கடன் கொடுக்கும்.
அத்துடன், நகைக்கான ஆதாரங்களையும் கேட்கிறது.
இதில்,
நகைக் கடன் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், முழு பணத்தையும் செலுத்த
வேண்டும்; மேலும், அன்றைய தினமே மறு அடகு வைக்க முடியாது.
இதனால் பாதிக்கப்படுவது ஏழை - நடுத்தர மக்களும், சிறு வியாபாரி களும், விவசாயிகளும் தான்.
மத்திய நிதி அமைச்சருக்கு தெரியாமல், இப்படிப்பட்ட நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக அறிவித்திருக்க முடியாது!
ஏழை மக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சர் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்!
அதேநேரம்,
ரிசர்வ் வங்கியின் இத்தகைய அறிவிப்பை, பல அரசியல் கட்சிகளும் எதிர்த்து
வரும் நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'முதலில்
மக்கள் எதிர்த்தாலும், பின் விதிகளை மதித்து செயல்பட பழகிக் கொள்வர்' என,
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் கருத்து தெரிவித்து உள்ளார்.
மக்களின்
சிரமத்தை புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற எதிர்மறை கருத்துகள், வளர்ந்து
வரும் பா.ஜ.,வின் மதிப்பை குலைக்குமே தவிர, மேம்படுத்த உதவாது என் பதை,
நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்!