sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பாராட்டு விழா எதற்கு?

/

பாராட்டு விழா எதற்கு?

பாராட்டு விழா எதற்கு?

பாராட்டு விழா எதற்கு?

2


PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இட்லி சுவைக்க வேண்டும் என்றால், அரிசி - உளுந்தை ஊற வைத்து, கிரைண்டரில் ஆட்டி, உப்பு சேர்த்து, இட்லி பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் செய்வதற்கு மனித சக்தி தேவை. இட்லியை சாப்பிடும்போது, அரிசியையோ, உளுந்தையோ, இட்லி சுடுவதற்கு உறுதுணையாக இருந்த ஏனைய பொருட்களுக்கோ நன்றி சொல்ல மாட்டோம்; இட்லி சுட்டவருக்கு தான் நன்றி சொல்வோம்.

ஆனால், அரிட்டாபட்டியில் நடந்தது என்ன?

டங்ஸ்டன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தான் ரத்து செய்தார் என்றும், அதனால், அவருக்கு அவ்வூர் மக்கள் பாராட்டு விழா வைப்பது போல், தி.மு.க.,வினர் முதல்வரை வைத்தும், அ.தி.மு.க.,வினர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை வைத்தும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.

உண்மையில் கிராம மக்கள் பாராட்டு விழா நடத்த எண்ணி இருந்தால், அனைத்து கட்சியினரையும் அழைத்து நடத்தி இருப்பர்; இரு திராவிட கட்சி தலைவர்களை மட்டும் அழைத்து நடத்தி இருக்க மாட்டார்கள்.

இட்லி தயார் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை போல்தான், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - கம்யூ., - நாம் தமிழர் - பா.ம.க., என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தன.

சட்டசபையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய, வழக்கம்போல் தீர்மானம் நிறைவேற்றியும், பார்லிமென்ட்டில் பேசியும் தங்களது கடமையை தி.மு.க., நிறைவேற்றியது.

ஆனால், அரிட்டாபட்டியில் களத்தில் இறங்கி அம்மக்களுடன் பேசி, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதன் அவசியத்தை, மத்திய அமைச்சருக்கு விளக்கி, அவ்வூர் முக்கியஸ்தர்களை டில்லி அழைத்துச் சென்று அமைச்சரை சந்திக்க வைத்து, திட்டத்தை ரத்து செய்தது பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

ஒட்டுமொத்த பாராட்டும் பா.ஜ.,விற்கே சேர வேண்டும்!

உண்மையிலேயே சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தாலும், பார்லிமென்ட் உறுப்பினர்கள் பேசியதாலும் மட்டுமே இத்திட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் குறிப்பாக, 'நீட்' தேர்வு ரத்து தீர்மானம், ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டும், இன்னும் ரத்து செய்யப்படவில்லையே ஏன்? அப்புறம் எதற்கு முதல்வருக்கு பாராட்டு விழா?

இது, இட்லி உருவானதற்கு அரிசியும், உளுந்தும் சொந்தம் கொண்டாடுவது போல் உள்ளது!



பூரண மதுவிலக்கு எப்போது?


அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 23 ஆண்டு காலம் அமலில் இருந்த மதுவிலக்கை, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, 1971ல் ரத்து செய்தார், முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அன்று தமிழகத்தில், 7,000 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. அதன் வாயிலாக, தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ஆண்டுக்கு, 26 கோடி ரூபாய்!

அதுவே இன்று, 4,829 டாஸ்மாக் கடைகள் வாயிலாக, 50,000 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் வருகிறது. அதன்வாயிலாக, அரசு பல்வேறு உதவித் தொகைகளை கொடுக்கிறது.

இது எப்படி இருக்கிறது என்றால், ஏழை, எளியவர்களை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் முன், வழியிலேயே பிடுங்கி கொள்வதை போன்றுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட் களில் மட்டும் நம், 'குடி' மகன்கள், 725 கோடி ரூபாய்க்கு குடித்து, கடந்த ஆண்டு சாதனையாக இருந்த, 678.65 கோடி ரூபாயை முறியடித்து உள்ளனர்.

உண்மையில், இப்பணம் முழுதும் குடிமகன்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சமீபத்தில் அனைத்து தொலைக்காட்சிகளிலும் விளம்பர படம் ஒன்று ஒளிபரப்பானது. அதில், போதைக்கு அடிமையானவர்களைப் பார்த்து கவலைப்படுவதாக தமிழக முதல்வர் கூறுவார்.

ஒரு கையெழுத்தில் தமிழகம் முழுதும் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மூடி விட ஸ்டாலினால் முடியும்; அதைச் செய்யாமல், விளம்பரத்தில் நடித்து, மக்களின் வரிப் பணத்தை வீண் செய்து, முதலைக் கண்ணீர் வடிப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர்?

இன்று, மது அருந்துவோரால் தான் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இக்குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்கினாலும், அவர்கள் கவலைபடப் போவது இல்லை. ஏனெனில், போதையில் இருப்பவர்களுக்கு, அந்த நேரத்தில், சிந்திக்கும் ஆற்றலை மூளை இழந்து விடுகிறது.

அதனால் தான், பெற்ற பிள்ளை என்றும் பராமல், சில இடங்களில் பாலியல் சீண்டல்கள் நடப்பதை அறிகிறோம்.

உண்மையில், முதல்வருக்கு மக்களின் மீது அக்கறை இருந்தால், உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்!

செய்வாரா?



தமிழி ன் பெருமை புரியாது!


கே.மணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஈ.வெ.ரா., தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பேசினார் என்றால், அவர் தமிழை இழிவுபடுத்தவில்லை; தமிழில் காட்டுமிராண்டி காலத்தில் எழுதிய புராணங்கள் உள்ளன.

'அதனால், தமிழை திட்டினார்' என்று ஈ.வெ.ரா.,வின் பேச்சுக்கு, வக்காலத்து வாங்கியுள்ளார், நோட்டுக்கும், சீட்டுக்கும் தேர்தல்தோறும் காவடி துாக்கும், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்.

தமிழில், காட்டுமிராண்டி காலத்தில் எழுதப்பட்ட புராணங்கள் உள்ளன என்றால், அது எது? திருவிளையாடல் புராணமா, கந்தபுராணமா, பெரியபுராணமா?

இதெல்லாம், திருமாவளவனுக்கு காட்டுமிராண்டிகளின் புராணமாக தெரிகிறது என்றால், அந்த காட்டுமிராண்டிகள் வழிபடும் கோவிலில் உங்களுக்கு என்ன வேலை?

ஏன் ஹிந்துவாக உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்... நீங்கள் ஓட்டுக்காக சொம்பு துாக்கும் சிறுபான்மை மதத்துக்கு மாறிவிட வேண்டியது தானே? ஜாதி ஓட்டுகள் கிடைக்காது என்ற பயமா அல்லது தனித் தொகுதியில் போட்டியிடும் உரிமையை இழந்து விடுவோம் என்ற சுயநலமா?

காட்டுமிராண்டிகள் எழுதிய புராணங்கள் உள்ளதால், தமிழை ஈ.வெ.ரா., திட்டினார் என்றால், கன்னடத்தில் உள்ள ஹிந்து புராணங்கள் எல்லாம் தேவலோக மனிதர்கள் எழுதிய புராணங்களா?

அதையும் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி இருக்க வேண்டியது தானே!

கட்டிய மனைவியின் உணர்வுகளைக் கொன்று, அவளை கஞ்சிப் பானை சுமக்க வைத்து, ஆற்றங்கரையில் விலைமாதருடன் கூத்து அடித்த உத்தமருக்கும், அவரை அடித்தொட்டு நடக்கும் திருமா போன்றவர்களுக்கும் தமிழில் வந்த ஹிந்து புராணங்கள் எல்லாம் காட்டுமிராண்டி காலத்தை சேர்ந்தவையாகத் தான் தெரியும்!

அன்னிய மொழிக்கும், மதத்துக்கும் அடிவருடிகளாக இருப்போருக்கு, சொந்த மண்ணின் சுகமும், தாய்மொழியின் பெருமையும் தெரியாது!








      Dinamalar
      Follow us