PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

எஸ்.கதிரேசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதிமறுத்த விவகாரத்தில், 'பொறுமையை சோதிக்க வேண்டாம்' என எச்சரித்த உயர் நீதிமன்றம், 'குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதி, வேறு மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி, மாற்று கொள்கை உடைய கட்சி அலுவலகங்கள்இருக்கும் பகுதி என்று காரணம் கூறி அனுமதி மறுக்கக் கூடாது' என அரசுக்கும்,போலீசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
என்ன தான் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து விட்டாலும், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை, திராவிட மாடல் அரசு நடத்த விடாது. இதற்கு முன், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரிலேயே ஆக்கிரமித்திருக்கும் பிளாட்பார கடைகளைஅகற்றுவது குறித்தும், விளம்பர பேனர்களை வைக்க கூடாது என்று பிறப்பித்த உத்தரவு குறித்தும், இன்னும் இதுபோன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் என்ன கதிக்கு ஆளானது என்பதையும் அருள் கூர்ந்து திரும்பிப் பார்க்க கோருகிறோம்.
நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசும், காவல் துறையும் தான் என்பதை மறந்து விட வேண்டாம்.
காரணம், திராவிட மாடல் கழக அரசானது, சிறுபான்மையினர் நலன் காக்கும் அரசேயன்றி, பெரும்பான்மையினர்கருத்துகளை காது கொடுத்து கேட்கும் அரசு அல்ல. மேலும், பெரும்பான்மை இன மக்கள் மிகவும் சகிப்புத்தன்மை உடையவர்கள். இவர்கள், அவர்களை எவ்வளவு துன்புறுத்தினாலும், தாங்கி கொள்வதுடன், தேர்தலின் போது, கழகத்திற்கே அவர்களது பொன்னான ஓட்டுகளை அளித்து கழகத்தை பெருமைப்படுத்துவர்.
திராவிட மாடல் அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்த கடந்த மூன்றாண்டுகளில், எத்தனை ஹிந்து ஆலயங்களை தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறது. எங்கிருந்தாவதுஎதிர்ப்போ, முக்கலோ, முனகலோ கேட்டதா?
ஆலயங்களையே அடித்து நொறுக்கி துவம்சமாக்கும் திராவிட மாடல் அரசானது, ஹிந்து சனாதனத்தை துாக்கி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை மட்டும் நடத்த விட்டு விடுமா?
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும்முகமாக வேண்டுமானால், தலைநகர் சென்னையில் ஈ.வெ.ரா., சிலையில் இருந்து துவங்கி நேப்பியர் பாலம் அருகில் முடிவுறும் சிவானந்தா சாலையில் மட்டும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும், திரும்ப கிழக்கில்இருந்து மேற்கிற்குமாக திரும்ப திரும்ப அணிவகுப்பு நடத்தி கொள்ளட்டும்.
அதை விடுத்து, வேறு எந்த இடத்திலாவதுஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து கையில் கம்புடன் அணிவகுப்பு நடத்த முயன்றால்,அந்த சேவக்குகள் என்ன கதி ஆவர் என்பதை, இப்போதே அறுதியிட்டு, உறுதியாக கூற முடியாது.
ஒற்றுமை இல்லையேல் இன்னும் தாழ்வு தான்!
முனைவர்
மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கவர்னர் ரவியை சந்தித்து, பிராமண சங்கத்தினர், மனு ஒன்று கொடுத்து உள்ளனர்.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பூணுால் மற்றும் குடுமி அறுக்கப்படுவதை
தடுக்க வேண்டும்என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பூணுால் அறுப்பு
சம்பவம், இன்று நேற்றல்ல...காலம் காலமாக நடக்கிறது.இஸ்லாமிய மற்றும்
கிறிஸ்துவ சகோதரர்கள் கூட, பிராமணர்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து மன
வேதனைப்படுகின்றனர்.
தளிகை முதல் தணிக்கை வரை பார்ப்பனன் தயவு
நாடும், 'பகுத்தறிவு' கூட்டம், இப்படி வெறியாட்டம் ஆடுவதற்குக் காரணம்,
அரசியல் செய்வதற்காக அந்தணரைக்கேவலப்படுத்தத் துவங்கியஅந்த
வெண்தாடிக்காரர்.
இயல்பில், தானுண்டு தன்வேலையுண்டு என்று இருக்கும்
அமைதியான அந்தணர்களை, தேவை இல்லாமல் சீண்டிப் பார்க்கும் கூட்டத்தை
எதிர்த்து, கவர்னரையோ, மந்திரியையோ பார்த்து, மனு கொடுத்தால் மட்டும்
போதாது.
நாளிதழ்களில் அறிக்கை விட்டால் மட்டும்
போதாது;தெருக்கோடியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், பத்து பதினைந்துபேர்
கூடி கோஷம் இட்டால்மட்டும் போதாது; 'ஈகோ'வைத் தலைமுழுக்கஏற்றியபடி,
வீதிக்கு நான்கு சங்கம் வைத்துக் கொண்டு, சண்டையிட்டுக்கொண்டால் மட்டும்
போதாது; மனு கொடுப்பதாக போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்து,
பத்திரிகைகளில்வெளிவந்தால் மட்டும் சந்தோஷம் அடைந்து, துண்டைத் தட்டித்
தோளில் போட்டுச் செல்வது போதாது.
அனைத்து சங்கங்களையும்
ஒருங்கிணைத்து,மாநில அளவில் பெரிய போராட்டம் நடத்த வேண்டும். பொது எதிரியை
வீழ்த்த வேண்டும் என்றால், தமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து அனைவரும்
ஒரே குடையின் கீழ் வர வேண்டும். புரிகிறதா?
இன்றைய நீதி இதுதான்!
சி.ஆர்.குப்புசாமி,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ-மெயில்'
கடிதம்: சட்டத்தின்பிடி சற்று இறுக்கமாக இருந்ததால், கிட்டத்தட்ட ஒன்றரை
ஆண்டுகள் சிறையில் இருந்த அமைச்சர்செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தின்
நிபந்தனைப் பிணையில், வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கில்,
2,000க்கும் மேற்பட்டவர்களை விசாரணை செய்ய வேண்டி உள்ளது என்றும், அந்த
2,000 பேருக்கும் குற்றச்சாட்டு நகல்கள் கொடுத்து, அனைவரையும்
விசாரித்துதீர்ப்பு வழங்க, பல ஆண்டுகள் ஆகலாம்.
அதுவரை இவரை
காவலில் வைத்துஇருப்பது சாத்தியம் இல்லை என்றும் கூறி, பல நிபந்தனைகள்
விதித்து, அவருக்கு ஜாமின் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதே
சட்டம், இதே நீதிமன்றங்கள், சாதாரண அரசு அலுவலக கடை நிலை ஊழியர் ஒருவர்,
தன் வயிற்றுப் பற்றாக்குறைக்காக, 100 ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தால், அவரை
கைது செய்வதோடு மட்டுமல்லாமல், அரசு பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம்
செய்து, அவரது ஓய்வு பலன்களையும் பதம் பார்க்கும் என்பது அனைவரும்
அறிந்ததே!
தவறு செய்பவர்கள், பண பலத்துடன் இருந்தால்,சட்டத்தின்
நெளிவு சுளிவுகளைக் கற்றவர்களைவைத்து வாதாடி, வெளியேவந்து விடலாம் என்பது,
இன்றைய நீதி!
வாருங்கள்; அரசியல் செய்வோம்!
வ.ப.நாராயணன்,
செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'நாட்டின்
விடுதலைக்காகச்சிறை சென்றதால், 'தியாகி'என்று யாரும் பட்டம் சூட்டிக் கொள்ள
வேண்டாம்;இந்த ஒரு காரணத்தை வைத்து பதவியிலோ அதிகாரத்திலோ உரிமை கேட்கவும்
வேண்டாம்' என்றார் காந்தி.
அது காந்தி காலம்; இப்போது, ஆட்சியில் அமர,படிப்பு வேண்டாம்; ஒழுக்கம் வேண்டாம்; நேர்மை வேண்டாம்.
முக்கிய
தேவைகளாவன:ஜிங்சாக் கொட்டும் ஆதரவாளர் பலம்; பண பலம்; ரவுடித் திறன்;
நேர்மையற்ற வியாபாரம்;கொள்கையற்ற அரசியல்; ஒழுக்கத்தை மழுங்கடிக்கும்
கல்வி; குடி, போதை, கஞ்சா; ஏமாற்றத் தெரிதல்.
வாருங்கள்... அரசியல் செய்யலாம்; ஆட்சியைப் பிடிக்கலாம்!