PUBLISHED ON : ஆக 08, 2025 12:00 AM

'பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியால், 65 லட்சம் பேர் ஓட்டுரிமையை இழக்கும் அபாயத்தில் இருக்கும்போது, தமிழகத்தில், 6.5 லட்சம் பீஹாரிகள் வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்ட விரோதமானது. வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டுமெனில், அவர்களுக்கு நிரந்தரமான வீட்டு விலாசம் அவசியம்.
'பீஹார் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் மாநிலத்தில் நிரந்தர வீடு இருக்கும் பட்சத்தில், அவர்களை தமிழகத்திற்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்த வாக்காளர்களாக எப்படி கருத முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார், காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்.
மாநில தேர்தல் முதல், பார்லிமென்ட் தேர்தல்களான லோக் சபா, ராஜ்ய சபா தேர்தல் வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள், மாவட்டம் மற்றும் மாநிலம் தாண்டியும் போட்டியிடுவர்.
உதாரணமாக, காங்., - எம்.பி.,க்களான ராகுலும், பிரியங்காவும் டில்லியில் இருந்து கேரளாவிலுள்ள வயநாட்டுக்கு வந்து போட்டி யிடலாம் எனும் போது, பீஹாரில் உள்ள வாக் கா ளர்கள் தமிழகத்தில் ஓட்டளிக்கக் கூடாதா?
சிதம்பரத்திற்கும் தான் காரைக்குடியில் மாளிகை போன்ற வீடு இருக்கிறது. 2016ல், மஹாராஷ்டிராவில் இருந்து எப்படி ராஜ்யசபா எம்.பி., ஆனார்?
அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், வாக்காளர்களுக்கு ஒரு சட்டமா?
சரி... ஒரு மாநிலத்தவர், வேறு மாநிலத்தில் ஓட்டுப் போடக்கூடாது; அவர்கள் சொந்த ஊரில் தான் ஓட்டுப் போட வேண்டும் என்றால், மும்பை, டில்லி, கர்நாடகாவில் உள்ள பல லட்சம் தமிழர்களுக்கும் அங்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டால், அதை இங்குள்ளவர்கள் ஏற்றுக் கொள்வரா?
பிற மாநிலங்களில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனராம். அவர்கள் எல்லாம் சொந்த ஊரில் தான் ஓட்டுப் போட வேண்டும் என்றால் நடக்கும் காரியமா?
இதில், வாக்காளர் பட்டியலில் தன் பெயரே இல்லை என்று குற்றஞ்சாட்டிய ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., தேஜஸ்வி யாதவ், தேர்தல் கமிஷன் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையுடன், கூடுதலாக இன்னொரு வாக்காளர் அட்டையும் வைத்துள்ளார்.
இவர், பீஹாரின் துணை முதல்வராக வேறு இருந்துள்ளார். இவரைப் போன்றவர்கள் தான் தேர்தல் கமிஷன் நேர்மை குறித்து இன்று சந்தேகம் எழுப்புகின்றனர்.
தொகுதி விட்டு தொகுதியிலும், மாநிலம் விட்டு மாநிலத்திலும் அரசியல்வாதிகள் போட்டியிடும் போது, தேர்தல் கமிஷன் வழங்கிய உண்மையான வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒருவர், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தங்கள் அடையாள அட்டையை வைத்து ஓட்டளிக்கலாமே...
இதில், காங்கிரஸ் கட்சிக்கும், சிதம்பரத்திற்கும் என்ன பிரச்னை?
பாகிஸ்தானின் வாடகை வாயர்கள்! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு
மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நடைபெற்று வரும்
பார்லிமென்ட் மழைக் காலக் கூட்டத்தொடரில், 'ஆப்பரேஷன் சிந்துார் குறித்து
இந்தியா பெருமைப்பட ஏதுமில்லை' என்று திருவாய் மலர்ந்துள்ளார், வி.சி.,
தலைவர் திருமாவளவன்.
அத்துடன், 'பஹல்காமில் பயங்கரவாதிகளால்
கொல்லப்பட்டது சுற்றுலா பயணியரே தவிர, பாதுகாப்புப் படையினர் ஒருவர் கூட
இல்லை' என்று அபத்தமாகப் பேசியுள்ளார்.
பாதுகாப்பு படையினர்
கொல்லப்படுவது திருமாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது போலும்... 35 ஆண்டுகள்
அரசியலில் இருப்பதாக கூறுபவருக்கு அரசியல் முதிர்ச்சியோ, பக்குவமோ,
நாகரிகமோ இல்லையே!
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை அவர் கூட்டணி
கட்சி தலைவரான ஸ்டாலினே பாராட்டி பேசியுள்ள போது, திருமாவுக்கு மட்டும்
அதில் பெரு மைப்பட ஏதுமில்லாமல் போனதற்கு என்ன காரணம்?
பிரதமர் மீதான வன்மமா அல்லது பெருமைப்பட்டால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமே என்ற சுயநலமா?
ஒரு சாதாரண விளையாட்டில் கூட, பாகிஸ்தானிடம் இந்தியா தோற்று விடக் கூடாது
என்று எண்ணும் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கும் மண்ணில், நாட்டை
பாதுகாக்கும் ராணுவ வீரர் கொல்லப்படுவது திருமாவுக்கு மகிழ்ச்சியை
தருகிறது என்றால், அவர் எப்படி இந்த மண்ணின் மைந்தராக இருக்க முடியும்?
இவர் தான் இப்படி என்றால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள்
நிதியமைச்சர் சிதம்பரமோ, 'பஹல்காம் தாக்குதலை நடத்தியது உண்மையில்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா?' என்று கேட்டு உள்ளார்.
பாகிஸ்தானே ஒப்புக்கொண்ட பின், சிதம்பரத்திற்கு வந்துள்ள சந்தேகம் குறித்து, நாம் அவரை சந்தேகப்படும்படி உள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடியாக இந்தியா எடுத்த
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து, உலக நாடுகளுக்கு விளக்கிச் சொல்லி இந்தியா
விற்கு ஆதரவு திரட்டச் சென்ற குழுவில் இடம்பெற்ற தி.மு.க., - எம்.பி.,
கனிமொழியோ, அங்கெல்லாம் நம் பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களை
பாராட்டி விட்டு, இங்கு பார்லிமென்டில் அதே பாதுகாப்பு படையினரை
கொச்சைப்படுத்தும் விதமாக, 'பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, நம்
பாதுகாப்புப் படை ஏன் அங்கு இல்லை' என்று பேசி, இரட்டை நிலைப்பாட்டை
எடுத்துள்ளார்.
பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜ., அரசையும்
எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை
எடுக்கும் சிதம்பரம், ராகுல், திருமாவ ளவன், கனிமொழி, கம்யூ., - எம்.பி.,
வெங்கடேசன் போன்றோர் உண்மையில், தேசப் பற்றுள்ளவர்கள் தானா என்பதை
பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதிலிருந்து பிரதமர் மோடியை வீழ்த்துவதற்காக, இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வர் என்பதை அறிய முடிகிறது.
ஒரு வகையில் ஆப்பரேஷன் சிந்துார் குறித்த விவாதத்தை பார்லிமென்டில்
நடத்தியது நன்மையில் முடிந்தது. ஒருவேளை இந்த விவாதம் நடைபெற மத்திய அரசு
மறுத் திருந்தால், பாகிஸ்தானின் வாடகை வாயர்களான இவர்களின் உண்மை முகம்,
நாட்டு மக்களுக்குத் தெரியாமல் போயிருக்குமே!