தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ உதயநிதி, 'பாச்சா' அவரது தாயிடம் பலிக்குமா?

 உதயநிதி, 'பாச்சா' அவரது தாயிடம் பலிக்குமா?

 உதயநிதி, 'பாச்சா' அவரது தாயிடம் பலிக்குமா?


PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று சட்டசபையில் கூறியுள்ளார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.

அதை வழிமொழிவது போல், தமிழக வெற்றிக் கழகத்தின், எம்.எல்.ஏ., முஸ்தபா, 'நாங்களும் சனாதனத்தை ஒழிப்போம்' என பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சனாதனம் குறித்து பேசி, ஹிந்துக்களின் வெறுப்பை தேடிக்கொள்வதில், தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக, த.வெ.க.,வும் பங்குபெற விழைகிறது போலும்!

சனாதனம் என்பது காலத்தால் அழிக்க முடியாதது; அழிவில்லாதது; தொன்மையானது!

எத்தனையோ மதங்கள் இன்று, அடையாளம் இழந்து தொலைந்து போன நிலையில், காலத்தால் முந்தியதும், உலகின் மூத்ததுமான ஹிந்து மதம், பல படையெடுப்புகளின் நடுவிலும், இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அதன் சனாதன தர்மம் தான்!

ஒவ்வொரு கோட்பாடுகளையும் உள்வாங்கி, புத்தம், சமணம், சீக்கியம் என பல மதங்களை பிரசவித்தாலும், அவற்றின் உயர்நாடியாக இருப்பதும் சனாதன தர்மமே!

இதை எல்லாம் அறியாமல், 'புலியைக் கொன்று, அதன் ரத்தத்தை புசிப்பேன்' என்று சூளுரைக்கும் பூனை போல், 'மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்கிறார், உதயநிதி.

கத்தி முனையில் மதமாற்றம் செய்த முகலாயர் முதல், பிரிவினையை துாண்டியும், பசப்பு வார்த்தைகள் வாயிலாகவும் மதமாற்றம் செய்த ஆங்கிலேயர் வரை கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகளாக இரு பெரும் சக்திகள், இந்நாட்டின் ஜீவ நாடியான சனாதனத்தை ஒழிக்க முயன்று தோற்றுப் போய், அழிந்து ஒழிந்து போயினரே தவிர, அவர்களால் சனாதன தர்மத்தை அசைக்க முடியவில்லை.

இப்படி மன்னாதி மன்னர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வி விட்ட நிலையில், உதயநிதி எனும் மண்ணுளிப் பாம்பு சனாதனத்தை ஒழிக்கப் போவதாக சூளுரைக்கிறது!

முதலில், உதயநிதி தன் தாய் தினந்தோறும் கடைப்பிடிக்கும் சனாதன சடங்கை, கடமையை, தர்மத்தை அவரிடமிருந்து ஒழித்து விட்டு, அதன்பின் வீதிக்கு வரட்டும்!

lll

பெற்றோர் - ஆசிரியர் கழகம் உருப்படணும்! ஆ.ஈஸ்வரன், ஆசிரியர், (பணி நிறைவு) தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் 1ம் தேதியே திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்...

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு என, இரண்டு குழுக்கள் செயல்படுகின்றன.

பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், பெற்றோர் - ஆசிரியர்கள் - மாணவர்கள் என முத்தரப்பினரின் நலனுக்காகவும் செயல்படும் இந்த இரண்டு குழுக்களில், பள்ளி மேலாண்மைக் குழு மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

பெற்றோர் - ஆசிரியர் கழகத்திற்கான உறுப்பினர்கள் உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளால் நியமனம் செய்யப் படுகின்றனர்.

மேலும், பெயர் தான் பெற்றோர் - ஆசிரியர் கழகமே தவிர, இதில், பள்ளி மாணவர்களின் பெற்றோர் எவரும் இடம் பெறுவதில்லை. அப்படி எவரேனும் இடம்பெற்றிருந்தால், அவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாக மட்டுமே இருப்பர்.

பல இடங்களில், ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினர்களே கூட, இதன் தலைவர்களாக இருக்கின்றனர்.

இரு கழக ஆட்சிகளிலும், வெகு காலமாக தொடர்ந்து வரும் இந்த அவலம் மீண்டும் தொடராமல் இருக்க, பள்ளிகளில் அரசியலை புகுத்தும், இந்நடைமுறை ஒழிக்கப்பட்டு, பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரின் பெற்றோரை வைத்தே, பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை உருவாக்க முன் வர வேண்டும்.

குறிப்பிட்ட கல்வி தகுதியுடைய பெற்றோர், அரசியல் சார்பற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தற்போது பள்ளியில் பணியில் உள்ள ஆசிரியர்கள் என, பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களை ஓர் ஆக்கபூர்வமான அமைப்பாக மாற்றியமைக்க வேண்டும்.

எந்த அரசியல் தலைவர்களின் தலையீடும் இல்லாமல், பள்ளிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

அதேபோல், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முன், ஒவ்வொரு பள்ளியிலும், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், இளநிலை உதவியாளர் போன்ற நிர்வாக பணியாளர்கள் எல்லாரும் இருக்கும் வகையில், அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இந்த இரு சீர்திருத்தங்கள் நடந்தாலே, அரசு பள்ளிகளில் பெரும் மாற்றம் ஏற்படும்!

தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொள்வாரா?

lll

காவல் துறையினர் தங்களை மாற்றிக் கொள்வரா? கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில தினங்களுக்கு முன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின், தன் ஆதரவாளர்களுடன் ஈரோடு புறப்பட்டார்.

செங்கல்பட்டு அருகே உள்ள பரனுார் சுங்கச்சாவடியை கடக்கும் போது, 'பாஸ்ட்ராக்' முறையில் பணம் பிடிக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள், பணியிலிருந்த ஊழியர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, சுங்கச்சாவடியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அ னுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் இதுபோன்ற அணுகுமுறை தான், தொடரும் வன்முறைகளுக்கு காரணம்!

சுங்கச்சாவடி விவகாரத்தில், வன்முறையில் ஈடுபட்ட கட்சிக்காரர்கள் மீது குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால் கூட, வன்முறையாளர்களுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறை மீதும் பயம் வந்திருக்கும்!

காவல் துறையினர் தங்களுக்கான அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாத காரணத்தால் தான், சாதாரண நிகழ்வுகள் கூட பெரிய வன்முறையாக மாறுகிறது.

மேலும், ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஜால்ராவாக காவல் துறையினர் மாறுவதால், சட்டம் - ஒழுங்கு பணிகள் செயலிழந்து போகின்றன!

கடந்த அரை நுாற்றாண்டாக, கழக ஆட்சியாளர்களிடம் குனிந்து குட்டுப்பட்டே, கூன் விழுந்து போன காவல் துறை, இந்த ஆட்சியிலாவது தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.

அப்பாவி மக்கள் மீது, நல்ல பாம்பு போல சீறுவதும், அரசியல்வாதி களிடம் நாக்குப்பூச்சிகளாய் பணிந்து போகும் நிலையையும் , இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us