PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

செப்டம்பர் 7, 1983
தெலுங்கு பேசும் கிராந்தி குட்டா - சீன பெண் எலன் தம்பதியின் மகளாக, மஹாராஷ்டிரா மாநிலம், வார்தாவில், 1983ல் இதே நாளில் பிறந்தவர், ஜுவாலா குட்டா. இவர், எஸ்.எம்.ஆரிப்பிடம், 6 வயதில் பேட்மிண்டன் பயிற்சி பெற்றார். 13வது வயதில், தேசிய மினி பேட்மிண்டன் சாம்பியனாகவும், 17வது வயதில், தேசிய ஜூனியர் சாம்பியனாகவும், அதே வயதில், மூத்த வீராங்கனை ஸ்ருதி
குரியனுடன் இணைந்து, இரட்டையர் சீனியர் சாம்பியனாகவும் ஆனார். இளம் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பாவுடன்இணைந்து, சிங்கப்பூர் ஜோடியான ஷிண்டா முலியா சாரி, யாவ் லீ ஜோடியை வீழ்த்தி, காமன்வெல்த்தில் தங்கம் வென்றார். இந்த ஜோடி, 2011ல், உலக சாம்பியன்ஷிப் போட்டியில்
வெண்கலம் வென்று, நாட்டுக்கு முதல் வெற்றியை பரிசளித்தது.லண்டன் ஒலிம்பிக்கில், ஒற்றையர், இரட்டையர்பிரிவுகளில் அசத்தினார். பதக்கங்களால், இந்தியாவுக்கு
பெருமை சேர்த்த இவருக்கு, மத்திய அரசு,'அர்ஜுனா' விருது வழங்கி கவுரவித்துள்ளது. பூப்பந்தை, புயல் பந்தாக்கிய வீராங்கனையின்,41வது பிறந்த தினம் இன்று!