PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

ஆகஸ்ட் 22, 1818
பிரிட்டனில், பாதிரியாரின் மகனாக, 1732, டிசம்பர் 6ல் பிறந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராக சேர்ந்து, அப்போதைய இந்திய பகுதியான வங்காளத்தில் பணி செய்தார்.சென்னை, கோல்கட்டா, மும்பை போன்ற முதன்மை மாகாணங்கள் தனித்தனி தலைமை கவர்னர்களால் ஆளப்படும் முறையை நீக்கி, அனைத்து இந்திய பகுதிகளுக்கும், கிழக்கிந்திய கம்பெனியின் ஒரே தலைமை கவர்னர் ஆட்சிக்கு வித்திட்டார். இதன்படி, இந்தியாவின் தலைமை கவர்னராக, 1773ல் இவரே கோல்கட்டாவில் பதவி ஏற்றுக் கொண்டார்.
சென்னை மாகாணத்தை கைப்பற்ற வந்த ஹைதர் அலி படையை முறியடித்தார். பிரிட்டிஷ்- மராட்டியர், மைசூரு, பிளாசி போர்களின் காரணகர்த்தாவான இவர், சிவில், குற்றவியல் நீதிமன்றங்களை நிறுவி, அதில் இந்திய நீதிபதிகளையும் நியமித்தார். ஹிந்து, முஸ்லிம் சட்டங்களையும், சில இலக்கியங்களையும் ஆங்கிலத்தில்மொழிபெயர்த்த இவர், 1818ல், தன் 86வது
வயதில் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!