PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயரமான எரிமலை
அமெரிக்காவின் ஹாவாய் தீவில், மவுனா கீ, மவுனா லோஎன இரட்டை எரிமலை உள்ளது. இது 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மவுனா கீ எரிமலையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 13,803 அடியும், அதன் அருகில் உள்ள மவுனா லோ எரிமலை (13,679 அடி) உள்ளது. ஆனால் கடலுக்கு அடியில் இருந்து ஒட்டு
மொத்தமாக இதன் உயரம் தலா 30,610 அடி. 30,085 அடி என உள்ளது. இது உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை (29,032 அடி) விட பெரியது. கடைசியாக இந்த எரிமலை வெடித்து 4000 ஆண்டுகள் ஆகி விட்டது.

