PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM

ஜூலை 2, 1968
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில், டாக்டர்களான சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி தம்பதியின் மகளாக, 1968ல் இதே நாளில் பிறந்தவர் கவுதமி தடமல்லா.
இவர், பெங்களூரு பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி, விசாகப்பட்டினம் கிடாம் பல்கலையில் படித்தார். தயாமாயுடு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.தமிழில் ரஜினி, பிரபு நடித்த, குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானார். மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்தார்.
ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் வெற்றி நாயகியாக வலம் வந்த இவர், நம்ம ஊரு பூவாத்தா, நீ பாதி நான் பாதி படங்களில் சிறந்த நடிகை, தசாவதாரம், விஸ்வரூபம் படங்களில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதுகளை பெற்றார். 1997ல் பா.ஜ.,வில் சேர்ந்து அக்கட்சிக்கு பிரசாரம் செய்தார். 2023ல் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர், புற்று நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது 56வது பிறந்த தினம் இன்று!